Additional information
Format | |
---|---|
Imprint | |
Author | |
Year Published |
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
சீ. முத்துசாமி – மலேசிய நவீனத் தமிழிலக்கிய முன்னோடிவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹80
In stock
நவீன மலேசியத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் சீ. முத்துசாமி. அழகியலுடன் வாழ்க்கைப் போராட்டத்தை எழுதியவர். நவீனத் தமிழிலக்கியத்தின் செழுமைமிக்க மரபை தானும் கொண்டவர், மலேசியத்தமிழிலக்கியம் இன்று வீறுகொண்டு எழுந்திருக்கும் சூழலில் சீ. முத்துசாமி பெரிதும் கவனிக்கப்படுகிறார். இந்தியாவிலிருந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு தோட்டக்கூலிகளாகச் சென்று புதிய சூழலில் கண்ணீரும் குருதியும் சிந்திப் போராடி இன்று மெல்ல தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இன்னும் போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களின் நெடிய வரலாற்றின் கலைரீதியான பதிவுகள் அவருடைய ஆக்கங்கள்.
2017ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கியவிருது சீ. முதுசாமிக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி வெளியிடப்படும் விமர்சனத்தொகுப்பு இந்நூல். விஷ்ணுபுரம் விருது தமிழிலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பை ஆற்றிய முன்னோடிப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருது. இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Format | |
---|---|
Imprint | |
Author | |
Year Published |
You must be logged in to post a review.
ஜெயமோகன்
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது. வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன. அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360ஜெயமோகன்
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200ஜெயமோகன்
இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம். நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே. அவர்களில் பலர் அரசியர். இந்த கதைகள் வரலாற்றை இன்றைய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210ஜெயமோகன்
இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தைகளையும் இப்போது என் குழந்தைகளாகவே நினைக்கிறேன். இந்த நாவலை சிறுவர்களுக்கான நடையிலேயே எழுதி இருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு தேறிய ஒரு குழந்தை இதை வாசிக்க முடியும். இந்த நாவல் வெறும் குழந்தைக்கதை அல்ல. இதில் தத்துவமும், ஆன்மிகமும், அறிவியலும் உள்ளன. இந்தப் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்ன என்ற கேள்வி உள்ளது. அந்தக் கேள்வி பெரியவர்களுக்கும் உரியது. அவர்களும் இந்நாவலை விரும்பி வாசிக்கலாம். அவர்களை அது சிந்திக்க வைக்கும்.
– ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330ஜெயமோகன்
மார்க்சிய சிந்தனையாளரான மறைந்த ஞானி [கி.பழனிச்சாமி] அவர்களைப் பற்றிய ஜெயமோகனின் நினைவுக்குறிப்புகள் இவை. ஜெயமோகன் எப்போதும் ஞானியை தன் ஆசிரியர் என குறிப்பிட்டு வந்தவர். ஞானியும் அவ்வண்ணமே ஜெயமோகனைத் தன் மாணவன் என்றே குறிப்பிட்டுவந்தார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300கே.ஜி.சங்கரப்பிள்ளை, ஜெயமோகன்
மலையாள நவீன கவிஞர்களில் முக்கியமானவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை . இடதுசாரி தீவிரவாத இயக்கங்களின் முகமாக அறியப்பட்டவர். வசனத்தை சிறப்பாக கவிதையில் பயன்படுத்திய முன்னோடி. களச்செயல்பாட்டாளர், மனித உரிமைப்போராளி. தீவிரமான விமர்சனமும் அங்கதமும் கொண்ட கவிதைகளை எழுதிய கே.ஜி.சங்கரப்பிள்ளை அவருடைய நுட்பமான மென்மையான அழகுணர்வுக்காகவும் புகழப்படுபவர். மலையாள கவிதையில் அலட்டல் இல்லாத ஒரு கூறுமுறையைக்கொண்டுவந்தவர். கே.ஜி.சங்கரப்பிள்ளையை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும்பொருட்டு 2019ம் ஆண்டு அவர் கலந்து கொண்ட விஷ்ணுபுரம் விருது விழாவில் வெளியிடப்பட்ட நூல். மொழிபெயர்ப்பு – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹100விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹200
Reviews
There are no reviews yet.