Description
பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு தனியான வசீகரம் உண்டு.
மனத்தின் அவத்தைகள், தட்டழிவுகள், பிறழ்வுகள், கனவு நிலை உரைத்தல்கள், பிரமைகள் என்பன சிறுகதைக் கருப்பொருட்கள். சம்பவங்கள், முரண்கள், குணச்சித்தரிப்புகள், வாழ்வியல் போராட்டங்கள் எனப்பிறிதொரு வகை. என்ன வகையாயினும் மொழித்திறனிலும் செய்நேர்த்தியிலும் கூறு முறையிலும் சிறுகதைகள் எம்மை ஈர்க்கின்றன.
– எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
Reviews
There are no reviews yet.