Description
சாகித்திய அகாதெமி விருது, தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசு என்ற சர்வதேசப் பரிசு ஆகிய புகழ்மிக்க இரு பரிசுகளைப் பெற்ற சைரஸ் மிஸ்திரியின் நாவல் இது. பார்சி சமூகத்தில் புறக்கணிப்பிற்கும். ஒதுக்கலுக்கும் உள்ளான பிணந்தூக்கிகளின் வாழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்நாவல் ஒரு காதல் கதை இறந்து போனவர்களின் உடல்களைச் சுத்தப்படுத்தி, அமைதி கோபுரம் என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்ட பிணந்தூக்கிகள் ஒதுக்கி வைக்கப்பட்டும். ஏழமையிலும் வாழ்பவர்கள். செப்பியா என்ற பெண்ணுடன் ஏற்படும் காதலுக்காக அந்த வாழ்க்கையை விரும்பி ஏற்கிறான் பார்சி மத குருக்களின் மகனான ஃபெரோஸ் எல்சிதன. ஒருவரின் நில வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டுள்ள புதினம் இது சைரஸ் மிஸ்திரி : புகழபெற்ற நாடகாசிரியர், எழுத்தாளர், பத்திரிகையா ‘பெர்சி’ என்ற அவருடைய சிறுகதை, குஜராத்தி மொழித் திரைப்படமாக எடுக்கப்பட்டு 1989ஆம் ஆண்டு சிறந்த குஜராத்தி படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. படைப்பிலக்கியத்தில் முழுமை கொண்டவர் என்ற பாரதிய பாஷா பரிஷத்தின் விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற எழுத்தாளர், பத்திரிகையாளர் மாலன் இந்த நாவலை மொழிபெயர்த்துள்ளார்.
Reviews
There are no reviews yet.