தமிழினி
Showing 1–12 of 35 results
-
ஜெயமோகன்
இன்றைய காந்தி – தமிழினி
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில், என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது. காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் அடிப்படைச் சிந்தனைகளையும் குறித்த விரிவான ஒரு பொதுவிவாதம்.
காந்திமீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஐயங்களையும இந்நூலில் ஜெயமோகன் விரிவாக ஆராய்கிறார். காந்தியின் தனிவாழ்க்கையையும் அவரது போராட்டமுறைகளையும் பரிசீலிக்கிறார். காந்தியப் போராட்டவழிமுறைகள் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவை என்றும் காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற இலட்சியத்தின் இன்றைய பெறுமானம் என்ன என்றும் விவாதிக்கிறார். பல்வேறு வாசகர்களுடனான கேள்விபதிலாக ஆரம்பித்த உரையாடல் இந்நூல் வடிவை அடைந்துள்ளது. உலக சிந்தனையில் காந்தி இன்று வகிக்கும் இடம் என்ன என்பதை இந்நூல் இன்றைய இளம் வாசகனுக்குக் காட்டும்.
ஜெயமோகன் அவரது இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பெரும்பாலும் வெவ்வேறு வாசகர்கள் எழுதிய கடிதங்களுக்கான பதில்களாக கட்டுரைகள் அமைந்துள்ளன. காந்தியைப்பற்றி முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விரிவான ஆதாரபூர்வமான பதில்களை அளிக்கும் இந்நூல் காந்தியின் கொள்கைகளையும் ஆராய்கிறது. காந்தியின் கனவான கிராம சுயராஜ்யம் போன்றவற்றை இன்றைய சூழலில் வைத்து விவாதிக்கிறது.தமிழினி
₹530 -
எம்.கோபாலகிருஷ்ணன்
மாயப்புன்னகை – எம்.கோபாலகிருஷ்ணன்
பிரெஞ்சு நாட்டின் பெருமைகளுள் ஒன்றாகக் கருதப்படும் லூவர் அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற ஓவியம் ஒன்று களவு போனது. அரசுக்கும் காவல் துறைக்கும் கடும் சவாலாக அமைந்த அந்த சம்பவத்தை உலகமே உற்று கவனித்தது. ஆனால், எந்தவொரு முயற்சியும் பலன் தரவில்லை. காணாமல் போன அந்தக் கலைப் பொக்கிஷம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே அருங்காட்சியகத்துக்குத் திரும்பி வந்தது. ஓவியத்தைப் போலவே அது களவு போன கதையும் மர்மமும் வசீகரமும் நிறைந்தது. அம்மனிதர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கலை அமைதியுடனும் வடிவ […]
தமிழினி
₹100 -
எம்.கோபாலகிருஷ்ணன்
தீர்த்த யாத்திரை – எம் கோபாலகிருஷ்ணன்
தீவினைகள் உறுத்து வந்தூட்ட பிடிப்பற்ற வாழ்வின் துரத்தல்களில் வீடு துறந்து வெளியேறும் ஒருவன் வெவ்வேறு சூழல்களில் சந்திக்கும் வெவ்வேறு மனிதர்களின் வழியாக தன்னைக் கண்டடைய முயல்கிறான். அலைதலும் திரிதலுமான இப்பயணத்தின் முடிவில் அவன் எங்கு சென்று சேர்கிறான் என்பதைச் சொல்லும் புதினம்.
தமிழினி
₹220 -
சு. வேணுகோபால்
பால்கனிகள்
தமிழினி
₹130 -
நாஞ்சில் நாடன்
தொல்குடி
தமிழினி
₹190 -
சு. வேணுகோபால்
தாயுமானவள்
உயிர்க் கருணையைச் சுட்டும் ஒரு சிறந்த சிறுகதை “அழைப்பு” இந்த அற்புதக் கதையில் “வீடு” பின்னணியாக நிலவும் வலுவான மானசீக கதாபாத்திரம். படைப்பூக்கம் மிக்க வேணு சூழலின் நுண் கிரகிப்பாளர்; மனித இயல்புகளைக் கூர்ந்த அவதானிப்பவர். கு. அழகிரிசாமி எட்டடி பாய்ந்தால் வேணு பதினாறு அடி பாய்ந்தார். -பாதசாரி
தமிழினி
₹280 -
சு. வேணுகோபால்
நிலம் எனும் நல்லாள்
ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே – ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு
தமிழினி
₹180 -
எம்.கோபாலகிருஷ்ணன்
மனைமாட்சி – எம்.கோபாலகிருஷ்ணன்
தமிழினி
₹690 -
சா. ராம்குமார்
தேவியின் தேசம்
மனிதஇனம் தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருக்கிறது. புதுமையை நோக்கிய பயணத்தை கனவுகள் தான் வழிநடத்துகின்றன. சில நேரங்களில் தொலைதூரப் பயணங்களை வீரதீரசாகசங்களும் அலங்கரிப்பதுண்டு. அந்த வகையில் தமிழர்களின் கடல் வழி வணிகம் வரலாற்றின் பக்கங்களில் பெருமிதத்தோடு இடம்பெற்றுள்ளதக் காண முடிகிறது. அதேபோல் அந்நிய பண்பாட்டின் தாக்கம் இந்திய மனங்களை ஊடுருவி நிலைத்து நிற்பதும் ஆழமான ஆய்வுக்குரியவை.
தமிழினி
₹170 -
நாஞ்சில் நாடன்
நீரின் திறவுகோல்
தமிழினி
₹190 -
நாஞ்சில் நாடன்
கறங்கு
சமகால நடப்புகளின் மீது சாமானியர்களுக்கு உள்ள விமர்சனங்களையும் கோபத்தையும் கையாலாகாத்தனத்தின் தம் மீதான கழிவிரக்கத்தையும், எள்ளலும் சீற்றமும் கொப்பளிக்கும் தனித்துவமான மொழியில் சொல்கின்றன நாஞ்சில்நாடனின் இக்கதைகள்.
தமிழினி
₹120 -
எம்.கோபாலகிருஷ்ணன்
மொழி பூக்கும் நிலம்
தமிழினி
₹110