நற்றிணை பதிப்பகம்
Showing all 11 results
-
ஆனந்த் ஸ்ரீனிவாசன், ஹெச். எஸ். சிவபிரகாஷ்
குரு – பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்
எனக்கு ஏன் குரு தேவையாகிறார்? நான் ஏன் தியானம் பழகவேண்டும்? மந்திரங்களினால் என்ன பயன்? ஆன்மீகப் பயிற்ச்சியில் சுவாசம் ஏன் முக்கியமாகிறது? ஆன்மீகப் பாதையில் பாலியலின் இடம் என்ன? அமைதியற்ற மனதை என்ன செய்ய? தன்னையும் உலகையும் புருந்து கொள்வதற்கான இத்தகைய அடிப்படைக் கேள்விகளை ஆராய்கிறது குரு. வாயில்கள் எனும் உருவகம் மூலமாக, வாசகர் வெவ்வேறு ‘அறை’களுக்குள் வரவேற்கப்படுகிறார். ஒவ்வொரு அறையிலுமுள்ள ஆன்மீக மெய்மைகளை ஆராயவும் உணரவும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இறுதியில், இந்த ஆன்மீகக் கருத்துகள் எவ்வாறு […]
நற்றிணை பதிப்பகம்
₹130 -
ஜெயமோகன்
ஜெயமோகன் குறுநாவல்கள்
நான் குறுநாவல் வடிவங்களில் நிறையவே எழுதியிருக்கிறேன். விதியின் சுழற்பாதையைச் சொன்ன பத்மவியூகமும் ஆழத்திலிருந்து நெளியும் இச்சையின் விஷப்பரப்பைச் சொன்ன இறுதிவிஷமும் என் நினைவில் மீண்டும் மீண்டும் வரும் ஆக்கங்கள். குறுநாவல் தன் விரிவால் ஒரு முழு வாழ்க்கையைச் சொல்லக்கூடியது. தன் குறுக்கத்தால் கூர்மையாகத் தைக்கவும் கூடுயது. அது கைப்பிடியளவு விதை , காட்டின் ஆகச்சிறிய வடிவம்.
நற்றிணை பதிப்பகம்
₹290 -
ஜெயமோகன்
சொல்லிமுடியாதவை
ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகள் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? செய்தொழிலைப் பழிக்கலாகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா? பண்பாட்டைச் சுமக்கத்தான் வேண்டுமா? ஜெயமோகன் தன் நண்பர்கள் வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த பண்பாட்டுக் கட்டுரைகள் இவை நேரடியான கூரிய கருத்துகள் வரலாற்றுப்பின்புலம் தேடிச்சென்று விவாதிப்பவை.
நற்றிணை பதிப்பகம்
₹180 -
ஜெயமோகன்
உச்சவழு
எழுத்தாளர் ஜெயமோகன் சென்ற இரண்டாண்டுகளில் எழுதிய புதிய சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம். ‘இக்கதைகள் மானுடவாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களிலிருந்து ஒட்டுமொத்தமான கேள்விகளை நோக்கிச் செல்கின்றன’.
நற்றிணை பதிப்பகம்
₹200 -
ஜெயமோகன்
இலக்கிய முன்னோடிகள் – நற்றிணை
இவை இலக்கிய முன்னோடிகளைப் பற்றிய முடிவுகள் அல்ல; தீர்ப்புகள் அல்ல; ஒரு வாசகனின் அவதானிப்புகள் மட்டுமே. பிற வாசகர்கள் இந்தக் கண்களினூடாகப் பார்க்கையில் இன்னும் சற்று விரிவான வாசிப்பை அடையக்கூடும். இப்படி பல்வேறு கண்கள் வழியாகப் பார்க்கப்படுகையிலேயே இலக்கிய வாசிப்பு முழுமையை நோக்கிச் செல்கிறது. இலக்கியவாதி மேலும் மேலும் காலத்தில் தெளிந்து வருகிறான். இந்நூலின் நோக்கம் இதுவே.
– ஜெயமோகன்நற்றிணை பதிப்பகம்
₹750 -
விலாஸ் சாரங்
தம்மம் தந்தவன்
புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்த நாவல் மிக அற்புதமாக விவரிக்கிறது. புத்தர் தனது இளமைக்காலத்தில் வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டது, அரண்மனைக்குள் சிறை வைக்கப்பட்டவராக இருந்தது, அதையும் மீறி வெளியுலகைக் கண்டு தனது புரிதலுக்கேற்றபடி உலகை […]
நற்றிணை பதிப்பகம்
₹260 -
தெளிவத்தை ஜோசப்
மீன்கள்
இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது ‘மீன்கள்’. இதைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை. இக்கதையை முதன்மையான கதையாக ஆக்குவது இதில் சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கும் அந்தத் தொழிலாளியின் இழிவின் கணம்தான். சுயவதையாக அவனில் நீடிக்கும் ஒரு தருணம் அது. உண்மையில் அதனூடாக நான் அவனைப் பார்க்கவில்லை, அவனுடைய மகள்களையே […]
நற்றிணை பதிப்பகம்
₹100 -
ஜெயமோகன்
நாளும் பொழுதும்
நாளும் பொழுதும் நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன்.
நற்றிணை பதிப்பகம்
₹170 -
ஜெயமோகன்
வலசைப் பறவை
ஜெயமோகன் தன் தளத்தில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுதி இது. “நான் இந்திய தேசத்தில் நம்பிக்கை கொண்டவன். அதை ஒரு மத நம்பிக்கையாக அல்ல. ஒரு நடைமுறை வாய்ப்பாகவே கருதுகிறேன். மாபெரும் மானுடப்பரவல் கொண்ட இந்த நாடு ஒன்றாக இருந்தாலொழிய வளர முடியாது. பிரிந்தால் குருதிப்பெருக்கே எஞ்சும் என நம்புகிறேன். ஆகவே முதன்மையாக பிரிவினை அரசியல் பேசி சுயலாபம் தேடும் குழுக்களை, ஐந்தாம் படையினராகச் செயல்படும் அறிவுஜீவிகளையே முதன்மையாக எதிர்கொள்கிறேன். தமிழ் அறிவுப்புலத்தில் மிகப்பெரிய சக்திகள் இவர்களே. மற்றபடி என் எதிர்வினைகள் எல்லாமே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு பொதுக் குடிமகனுடையவை மட்டுமே. சாமானியனாக நின்று வரலாற்றை நோக்குவதே என் வழி” என்று ஜெயமோகன் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
நற்றிணை பதிப்பகம்
₹125 -
ஜேனிஸ் பரியத்
நிலத்தில் படகுகள்
மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பரியத் அவர்களுக்கு யுவபுரஸ்கார் பெற்றுத்தந்த ஆங்கிலச் சிறுகதை தொகுப்பான Boats on Land புத்தகம் நம்மால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிலத்தில் படகுகள் எனும் சிறுகதைத் தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது முற்றிலும் புதிய நிலப்பகுதியை அறிமுகம் செய்தன இந்தக்கதைகள். பலர் மொழிபெயர்ப்பு செய்த இந்த மொத்தக்கதைகளையும், தமிழில் வாசிக்கும்போது ஒரே சீராக வரும்வகையில் மெய்ப்பு நோக்கி கொடுத்ததில் சுசீலாம்மாவின் பங்கு மிக முக்கியமானது.
நற்றிணை பதிப்பகம்
₹350 -
விலாஸ் சாரங்
கூண்டுக்குள் பெண்கள்
நற்றிணை பதிப்பகம்
₹350