நாவல்
Showing 1–12 of 30 results
-
ஜெயமோகன்
குமரித்துறைவி
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200 -
அஜிதன்
மைத்ரி – நாவல்
உத்தராகண்டின் இமயமலைச் சரிவில் ஒரு வசந்தகாலத்தின் துவக்கத்தில் நிகழும் ஒரு காதல் கதை இது. மூன்று நாட்களே நீடிக்கும் அந்த சிறிய உறவில் காதலும் இயற்கையும் எப்படி ஒன்றை ஒன்று தழுவி நிரப்பிக்கொள்கின்றன என்னும் சித்திரத்தை தேர்ந்த நடையில் ஆசிரியர் இதில் அளிக்கிறார். புலன் வழி அனுபவங்களால் மட்டுமே சென்றடையும் அகவிடுதலையை இந்நாவல் மேலதிகமாக தொட்டுக்காட்டுகிறது. தமிழில் கதைக்களம் மற்றும் பேசுபொருள் சார்ந்து இந்நாவல் ஒரு முக்கியமான புதிய முயற்சி.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300 -
அஜிதன்
அல் கிஸா – அஜிதன்
அஜ்மீரின் புனித தர்காவில் அறுபதுகளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறு நாவல் இது. செவ்வியல் கூறுகள் ஊடுருவும் ஒரு நவீன ஆக்கமான இதில் சூஃபி ஆன்மீகமும் ஷியாக்களின் வரலாற்றுப் போராட்டமும் நபிகளின் போர்வையின் கீழ் ஒரு மகத்தான காதலால் இணைகின்றன.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹150 -
ஜெயமோகன்
விஷ்ணுபுரம் நாவல்
விஷ்ணுபுரம் ஒரு காவிய நாவல், தன்னை ஒரு காவியமாக கட்டமைத்துக்கொண்டு, தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகின்றன, வலியுறுத்தப்படுவது என்று ஏதுமில்லை. அனைத்தும் ஆராயப்படுகின்றன. விஷ்ணுபுரம் ஒரு கனவு, கனவுகள் வசீகரமானவை. இந்நாவலின் ஈர்ப்புக்குக் காரணம் அதுவே. அதே சமயம் கனவுகளில் முற்றிலும் இனியவை என்று ஏதுமில்லை, கனவுகள் நம்மை நமக்குக் காட்டுபவை. நம்மை நிலைகுலையச் செய்பவை. நாம் நமது தர்க்கபுத்தியால் எத்தனை தூரம் சென்றாலும் எவ்வளவு […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1300 -
ஜெயமோகன்
பின்தொடரும் நிழலின் குரல்
1991 தமிழகச் சிந்தனையில் சில நெருக்கடிகள் உருவான ஆண்டு. அவ்வாண்டு சோவியத் ரஷ்யாவின் கம்யூனிச அரசு வீழ்ச்சியடைந்தது ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். தொடர்ச்சியாக இலங்கை உள்நாட்டுப்போரில் சகோதரக்கொலைகள் குறித்த செய்திகள் வெளிவந்தன.வன்முறை சார்ந்த புரட்சியின்மேல் நம்பிக்கை கொண்டிருந்த சிந்தனையாளர்கள் பலர் ஆழ்ந்த உளச்சோர்வை அடைந்தனர். அது தொடர்ந்து தமிழக அரசியல் கொள்கைகளில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. அரசியல் சார்ந்து செயல்பட்ட பலர் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களாக மாறினர். பண்பாட்டரசியல் பற்றிய கேள்விகள் உருவாயின. 1991ல் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1100 -
ஜெயமோகன்
ஆலம்
ஆலம் மின்னூல் வாங்க
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300 -
ஜெயமோகன்
கதாநாயகி
கதாநாயகி ஒரு பேய்கதை. புத்தகத்திற்குள் இருந்து எழுந்து வந்து நிகழ்காலத்தில் உருக்கொள்ளும் பேய். ஆனால் எளிமையான ஒற்றைமையக் கதை அல்ல. வாசிப்பு என்னும் செயலின் படிநிலைகள் அதிலுள்ளன. வாசிப்பு என்பது நாம் இறந்த காலத்தை, வரலாற்றை, நினைவை உருவாக்கி மீட்டிக்கொள்ளும் செயல்தான். மானுடர் மானுடமென்னும் ஒற்றைத்திரளாக தங்களை தொகுத்துக்கொள்வது அதனூடாகத்தான். புத்தகங்களில் இருந்து எழுந்து வருவன அனைத்தும் காலமென தங்களை ஆக்கிக்கொண்ட ஆளுமைகளும் சிந்தனைகளும் உணர்வுகளும்தான்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400 -
ஜெயமோகன்
படுகளம்
Dispatch starts from 01.06.2024
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹340 -
ஜெயமோகன்
அந்த முகில் இந்த முகில்…
இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல் கதை. இழந்தகாதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை. -ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹250 -
ஜெயமோகன்
காடு – விஷ்ணுபுரம் பதிப்பகம்
அதிகாலையின் பொன்வெயில் போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்த நாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி, அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்கும் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு. மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிதமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹650 -
ஜெயமோகன்
நான்காவது கொலை…!!!
திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹160 -
சாம்ராஜ்
கொடை மடம் – சாம்ராஜ்
ஒரு நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றபடி, ஒரு நூற்றாண்டு முடிவின் கனவு கலையும் மயக்கச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது சாம்ராஜின் முதல் நாவல். ஒரு காலகட்டத்தின் எரிபொருளாய் கனன்ற சித்தாந்தத்தின் நிழலில், சிச்சிறு குழுக்களாய்ச் சிதறிப்போய் இயங்கிக்கொண்டிருந்த தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும் விமர்சிக்கப்படுகின்றன இதில் அங்கதமும் கேலியுமாய். பின்புலத்தில், தன் அத்தனை விளக்குகள் வாசனைகளுடன் சந்தடி இரைச்சலுடன் உள்ளும் புறமுமாய் ஓடுவது மதுரை மாநகர். காலத்தின் புழுதி மிதக்கும் அதன் வீதிகளில் இருந்து பாத்திரங்களும் கதைகளும், ஜனரஞ்சகத்தின் […]
பிசகு வெளியீடு
₹750