நாவல்
Showing 13–24 of 30 results
-
ஜெயமோகன்
கொற்றவை
கொற்றவை தமிழில் எழுதப்பட்ட நாவல், ஆனால் ஒரு காவியத்தின் வடிவமைப்பும் மொழிநடையும் கொண்டது. இளங்கோ கண்ணகியை ’வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்று கூறுகிறார்.ஆனால் கண்ணகி மதுரையை அடைந்தபோது ‘மாமயிடன் செற்றிகந்த கொற்றத்தாள்’ என்று விதந்து பாடுகிறார். கால் மண்ணை அறியாமல் வாழ்ந்தவள் எப்படி மகிடனை பலிகொண்ட கொற்றவையாக ஆனாள்? அந்த வளர்ச்சியை ஐவகை நிலங்களின் வாழ்க்கை வழியாக, சங்கம் மருவிய காலகட்டத்தின் வரலாற்றின் வழியாக பேரோவியமாக தீட்டிக்காட்டும் நாவல் இது. இதன் கதை தமிழும் தோன்றாத, தெய்வங்களும் தோன்றாத தொல்பழங்காலத்தில் தொடங்கி இன்றையகாலம் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹900 -
ஜெயமோகன்
கன்னியாகுமரி
இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன் வைப்பது. மாறூதல்கள் அனைத்தும், வளர்ச்சியும் கூட, இழப்புகளையும் வலிகளையும் உறுவாக்குகிறது. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டாலும் விஷத்தையே உமிழும் போலும்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹270 -
ஜெயமோகன்
அனல் காற்று – நாவல்
பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக நான் எழுதிய கதை இது. ஒரு குறுநாவல். இதை அவர் திரைக்கதை அமைப்பதாக இருந்தது. அந்த தயாரிப்பாளர் பங்குச்சந்தை வீழ்ச்சியில் காணாமல் போனதனால் திட்டம் கைவிடப்பட்டது. அவர் வேறு கதைக்குச் சென்றுவிட்டார். முற்றிலும் சொற்சித்திரமாக உள்ள இந்த உணர்ச்சிகரமான கதைக்கு அவர் எப்படி காட்சி வடிவம் அளித்து திரைக்கதை அமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அது நிகழவே இல்லை என்பதில் வருத்தம் என்றாலும் எது நிகழ்கிறதோ அதுவே அது என்று […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹260 -
ஜெயமோகன்
வெள்ளை யானை
பஞ்சம் ஓர் உச்சநிலை. மானுடத்தின் சாரம் வெளிப்படும் தருணங்களால் ஆனது. கொடுமையும் கருணையும், தன்னலமும் அறமும் ஒரே சமயம் தங்களை காட்டுகின்றன. இந்நாவல் பேசுவது அந்த தருணங்களையே. இந்நாவல் அமெரிக்கா பென் அமைப்பு நடத்திய உலகளாவிய நாவல் மொழியாக்கப் போட்டியில், அதில் பங்கேற்ற முந்நூறுக்கும் மேற்பட்ட நாவல்களில், மொழியாக்க பரிசுத்தொகை பெறுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் கவனத்திற்குச் செல்லவிருக்கிறது
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹600 -
ஜெயமோகன்
ரப்பர் – விஷ்ணுபுரம் பதிப்பகம்
ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது. அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையில் இந்நாவல். ஆற்றின் குறுக்காக காரைக் கொண்டுசெல்லும்போது கூச்சலிடும் குழந்தைகளின் குதூகலம் கண்டு அவன் மலரும் கணம். இந்நாவலுக்கு உந்துதலாக இருந்ததே நான் என் இளமையில் மாறப்பாடி ஆற்றின் குறுக்காகச் சென்ற சாலையில் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹290 -
ஜெயமோகன்
கன்னிநிலம்
நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகாமில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல். நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில சமயம் ஆழமான மன எழுச்சி; சில சமயம் ஆழமான தேடல். சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல் கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும் எழுதுவதுண்டு. எழுத்தில் எந்த வடிவமும் விலக்கல்ல […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹250 -
ஜெயமோகன்
இரவு
இந்த இரவில் இப்புவியில் எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன ! காட்டில் கரிய பெரும் யானைகள் மண்ணுக்குள் எலிகள் நீருக்குள் மீன்கள் பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள் நாளைய புவி இங்கே கரு புகுகிறது நிறைவுடன் சற்றே சலிப்புடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பிப் படுக்கிறது இரவு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
விலாஸ் சாரங்
தம்மம் தந்தவன்
புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்த நாவல் மிக அற்புதமாக விவரிக்கிறது. புத்தர் தனது இளமைக்காலத்தில் வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டது, அரண்மனைக்குள் சிறை வைக்கப்பட்டவராக இருந்தது, அதையும் மீறி வெளியுலகைக் கண்டு தனது புரிதலுக்கேற்றபடி உலகை […]
நற்றிணை பதிப்பகம்
₹260 -
எம்.கோபாலகிருஷ்ணன்
மாயப்புன்னகை – எம்.கோபாலகிருஷ்ணன்
பிரெஞ்சு நாட்டின் பெருமைகளுள் ஒன்றாகக் கருதப்படும் லூவர் அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற ஓவியம் ஒன்று களவு போனது. அரசுக்கும் காவல் துறைக்கும் கடும் சவாலாக அமைந்த அந்த சம்பவத்தை உலகமே உற்று கவனித்தது. ஆனால், எந்தவொரு முயற்சியும் பலன் தரவில்லை. காணாமல் போன அந்தக் கலைப் பொக்கிஷம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே அருங்காட்சியகத்துக்குத் திரும்பி வந்தது. ஓவியத்தைப் போலவே அது களவு போன கதையும் மர்மமும் வசீகரமும் நிறைந்தது. அம்மனிதர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கலை அமைதியுடனும் வடிவ […]
தமிழினி
₹100 -
எம்.கோபாலகிருஷ்ணன்
தீர்த்த யாத்திரை – எம் கோபாலகிருஷ்ணன்
தீவினைகள் உறுத்து வந்தூட்ட பிடிப்பற்ற வாழ்வின் துரத்தல்களில் வீடு துறந்து வெளியேறும் ஒருவன் வெவ்வேறு சூழல்களில் சந்திக்கும் வெவ்வேறு மனிதர்களின் வழியாக தன்னைக் கண்டடைய முயல்கிறான். அலைதலும் திரிதலுமான இப்பயணத்தின் முடிவில் அவன் எங்கு சென்று சேர்கிறான் என்பதைச் சொல்லும் புதினம்.
தமிழினி
₹220 -
ஜெயமோகன்
ஏழாம் உலகம்
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன! “ஏழாம் உலகம்” அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400 -
ஜெயமோகன்
உலோகம்
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோட தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹220