தனிமையின் புனைவுக்களியாட்டு
Showing 1–12 of 13 results
-
ஜெயமோகன்
பத்து லட்சம் காலடிகள்
ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல. இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையின் அறியப்படாத ஒரு இடத்தைச் சென்று தொடுகின்றன. மானுடனை துப்பறியும் கதைகள் என்று இவற்றைச் சொல்லமுடியும்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
ஜெயமோகன்
ஆயிரம் ஊற்றுகள்
இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம். நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே. அவர்களில் பலர் அரசியர். இந்த கதைகள் வரலாற்றை இன்றைய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210 -
ஜெயமோகன்
வான் நெசவு
ஆசிரியர் இருபத்தைந்து ஆண்டுக்காலம் பணியாற்றிய தொலைத்தொடர்புச்சூழல் இக்கதைகளில் உள்ளது. ஆனால் அந்த அலுவலகச் சூழல், தொழில்நுட்பச்சூழல் ஓர் அறியப்படாத வாழ்க்கைக் களம் மட்டுமாக காட்டப்படவில்லை. தொலைதொடர்பு என்ற செயல்பாடு குறியீடாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் வழியாக விரியும் கதைகள் வாழ்க்கையின், பிரபஞ்சத்தின் அறியாத நெறிகளை சொல்லிவிட முயல்கின்றன. தொழில்நுட்பம் கவித்துவக் குறியீடாக ஆவதனூடாகவே இவை இலக்கியமாகின்றன.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹215 -
ஜெயமோகன்
தங்கப்புத்தகம்
இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள். திபெத் ஒரு தங்கப்புத்தகம். வாசிக்க வாசிக்க விரிவது, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது. மானுடத்தில் இருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது. நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு.’ மானுடம் இழந்தவை பல அங்கே சேமிக்கப்பட்டிருந்தன. ஆகவேதான் திபெத் அத்தனை மர்மமான கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது. மீளமீள மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. இந்தக்கதைகள் திபெத்தை ஒரு கதைக்களமாக கொண்டவை என்பதைக் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
ஜெயமோகன்
ஆனையில்லா
இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள். புத்தம்புதிய ஓர் உலகு. ஒளிமிக்க உலகு. முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள். என் இளமையைக்கொண்டு நான் சமைத்த இந்த உலகை இனியும் விரிவாக்குவேன் என நினைக்கிறேன். ஒருவேளை எழுதாமல் போகலாம். ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்வேன். இப்போதே எழுதப்படாத […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹370 -
ஜெயமோகன்
எழுகதிர்
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது. வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன. அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360 -
ஜெயமோகன்
தேவி
இத்தொகுப்பின் கதைகளில் உள்ள பொதுக்கூறு என பெண்மையின் ஜாலங்களைச் சொல்லலாம். வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி, வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி. இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகை கொண்டிருக்கிறேன். அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது. இன்று பெண்மையின் இந்த ஜாலங்களை தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு ஆடுக மகளே என்று சொல்லுபவனாக ஆகியிருக்கிறேன். இக்கதைகளின் நுட்பங்கள் என நான் நினைப்பது பெண் அளிக்கும் பாவனைகளை. அவை மெய்யாக வெளிப்படுபவையும்கூட. மண்ணின் பாவனைகளே பருவங்களும் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320 -
ஜெயமோகன்
ஐந்து நெருப்பு
குற்றத்தைச் செய்யவைப்பது என்ன? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னை தனிமனிதனாக உணர்கிறது. தன் நலத்தை, தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது., அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது. குற்றத்தின், தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை. அதனூடாக வெளிப்படும் மனித ஆழத்தை அறிந்துவிட முயல்பவை. ஆகவே மனித அகமீறல்களின் பல தருணங்கள் இந்த […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹280 -
ஜெயமோகன்
முதுநாவல்
புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன. அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை. இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை. மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது.. மலையுச்சிமேல் நின்றாலொழிய நகரத்தைப் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
ஜெயமோகன்
மலைபூத்தபோது
இவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள். கவிதைக்குரிய சொல்லி முடிக்காத தன்மை, உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் தன்மை, சொல்லாட்சிகள் வழியாக மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை ஆகியவை கொண்டவை இக்கதைகள். அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கும் ஒரு நுண்ணிய மரபில் இணைபவை. ஆகவே உணர்வெழுச்சிகளை, வாழ்க்கையின் முழுச்சித்திரங்களை இக்கதைகள் காட்டுவதில்லை. புன்னகைக்க வைக்கும், கற்பனை விரியச்செய்யும், வாழ்க்கையின் முழுமை நோக்கிய பார்வை ஒன்றை அளிக்கும் ஒரு தருணம், அல்லது உளநிலை மட்டுமே இவற்றில் வெளிப்படுகிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200 -
ஜெயமோகன்
படையல் – சிறுகதைத்தொகுப்பு
இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாமானியர் என பல்வேறு தனிமனிதர்கள் சந்தித்த சிக்கல்களையும், அவர்களின் உள்ளங்களையும் ஆராய்கின்றன இவை. வேகமான, தீவிரமான வாசிப்பனுபவம் அளிக்கும் கதைகள். படையல் அக்காலகட்டத்தின் ஆன்மிக உச்சநிலை ஒன்றைச் சொல்கிறது என்றால் எரிசிதை அக்காலகட்டத்தின் ஆழ்ந்த காதலொன்றைப் பேசுகிறது. மங்கம்மாள் சாலை என்னும் குறுநாவல் ஆன்மிகமும் இலக்கியமும் வாழ்க்கையைச் சந்திக்கும் மர்மப்புள்ளி ஒன்றை தொட்டுக்காட்டுகிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
ஜெயமோகன்
பொலிவதும் கலைவதும்
இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு, பிரிவு, கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது.வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320