மொழிபெயர்ப்புகள்
Showing all 6 results
-
ஜெயமோகன், விவேக் ஷன்பேக்
வேங்கைச்சவாரி – தமிழில் ஜெயமோகன் வம்சி
கன்னட மொழியின் முதன்மையான இளைய தலைமுறை எழுத்தாளரான விவேக் ஷன்பேக் சிறுகதை, நாவல், இலக்கியவிமரிசனம் மற்றும் நாடகத்துறையில் புகழ் பெற்றவர். 1992 ஆம் ஆண்டுக்கான கதா விருது, 1998க்கான சிவராம் காரந்த்விருது ஆகியவற்றை பெற்றவர்.
இக்கதைகளில், நவீன கர்நாடகப் பண்பாட்டின் பல்வேறு அடையாளச் சிக்கல்களையும் உலகமயமாக்கலின் பிரச்சினைகளையும் விவாதிப்பதின் வழியாக தன் தரிசனங்களை அடைந்திருக்கிறார் விவேக்.
அபாரமான வாசிப்புத்தன்மைக் கொண்ட இக்கதைகள் வாசகன் கடந்து செல்லவேண்டிய நுண்ணிய மறுபக்கங்களும் உடையவை.
– ஜெயமோகன்வம்சி புக்ஸ்
₹100 -
விலாஸ் சாரங்
தம்மம் தந்தவன்
புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்த நாவல் மிக அற்புதமாக விவரிக்கிறது. புத்தர் தனது இளமைக்காலத்தில் வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டது, அரண்மனைக்குள் சிறை வைக்கப்பட்டவராக இருந்தது, அதையும் மீறி வெளியுலகைக் கண்டு தனது புரிதலுக்கேற்றபடி உலகை […]
நற்றிணை பதிப்பகம்
₹260 -
அனிதா அக்னிஹோத்ரி
உயிர்த்தெழல்
’சிங்கத்தின் மீதமர்ந்த, உலகைக் காக்கும் இறைவி ஜத்தாத்ரியின் நான்கு பெரும் சிலைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வைக்கோல் எரிவது மெல்லிய களிமண் பூச்சு வழியாகத் தெரிந்தது. சிங்கங்கள் சில்லிட்ட களிமண்ணால்தான் மூடப்பட்டிருந்தன. தேவியர் பற்றி எரிந்தபடி ஊர்வலமாக செல்வதுபோலிருந்த அந்தக் காட்சி அமானுஷ்யமானதாக, தீமைக்கு முன்னறிவிப்பு போல இருந்தது…’ சாதிவெறிப் பின்னணியில் கலைஞனின் இருப்பை, புரட்சிப் பின்னணியில் காதலை, உறவுகளிடையே மோதல்களை, இழப்புகளை சொல்லிச் செல்லும் நாவல். கலையும், காதலும், தாய்மையும் உயிர்த்தெழும் தருணங்களை ஆரவாரமின்றி […]
தமிழ்வெளி
₹320 -
ஜெயமோகன்
நெம்மி நீலம் – அறம் தெலுங்கில்
தமிழில் அறம் – உண்மை மனிதர்களின் கதை என்ற பெயரில் பரபரப்பாக விற்பனையான சிறுகதைத்தொகுப்பு தெலுங்கில் திரு. பாஸ்கர் அவினேனி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சாயா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. அறம் தொகுப்பில் உள்ள கதைகளை தெலுங்கில் வாசிக்க விரும்புபவர்களுக்காக.
Chaaya Publications
₹450 -
எம்.கோபாலகிருஷ்ணன், கதே
காதலின் துயரம்
நாவலிலிருந்து சில வரிகள்…. இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் கைகளைப் பற்றினான். கண்களிலும் நெற்றியிலும் வைத்து அழுத்திக்கொண்டான். அதிர்ச்சிகரமான அவனது துயர முடிவைக் குறித்த உள்ளுணர்வு அவளது மனத்தில் பளிச்சிட்டது. அவளது மூளை குழம்பியது. அவனது கைகளை இறுகப் பற்றித் தன் மார்பின் மீது வைத்து அழுத்திக்கொண்டாள். துயரப் பெருமூச்சுடன் அவனைத் தழுவினாள். தகிக்கும் இருவரது கன்னங்களும் உரசின. உலகத்தை மறந்தனர். […]
தமிழினி
₹180 -
ஜெயமோகன்
The Abyss – ஏழாம் உலகம் ஆங்கிலத்தில் (Paperback)
Pothivelu Pandaram is known as a successful and God-fearing man about town – he has a loyal wife, three daughters and ample money to pay for their dowries. However, it is an open secret that his success is fuelled by a tawdry yet deeply profitable trade – for he owns a group of physically deformed […]
Juggernaut
₹699