Books
Showing 109–120 of 236 results
-
ஜெயமோகன்
வணங்கான்
யானை நடந்தபோது அவரே யானையாகி அசைவதை உணர்ந்தார் அப்பா. மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. மேகங்களில் நிறைந்து ததும்பும் ஒளி.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹40 -
விலாஸ் சாரங்
தம்மம் தந்தவன்
புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்த நாவல் மிக அற்புதமாக விவரிக்கிறது. புத்தர் தனது இளமைக்காலத்தில் வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டது, அரண்மனைக்குள் சிறை வைக்கப்பட்டவராக இருந்தது, அதையும் மீறி வெளியுலகைக் கண்டு தனது புரிதலுக்கேற்றபடி உலகை […]
நற்றிணை பதிப்பகம்
₹260 -
ஜெயமோகன்
ஞானி
மார்க்சிய சிந்தனையாளரான மறைந்த ஞானி [கி.பழனிச்சாமி] அவர்களைப் பற்றிய ஜெயமோகனின் நினைவுக்குறிப்புகள் இவை. ஜெயமோகன் எப்போதும் ஞானியை தன் ஆசிரியர் என குறிப்பிட்டு வந்தவர். ஞானியும் அவ்வண்ணமே ஜெயமோகனைத் தன் மாணவன் என்றே குறிப்பிட்டுவந்தார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300 -
தெளிவத்தை ஜோசப்
மீன்கள்
இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது ‘மீன்கள்’. இதைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை. இக்கதையை முதன்மையான கதையாக ஆக்குவது இதில் சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கும் அந்தத் தொழிலாளியின் இழிவின் கணம்தான். சுயவதையாக அவனில் நீடிக்கும் ஒரு தருணம் அது. உண்மையில் அதனூடாக நான் அவனைப் பார்க்கவில்லை, அவனுடைய மகள்களையே […]
நற்றிணை பதிப்பகம்
₹100 -
எம்.கோபாலகிருஷ்ணன்
மாயப்புன்னகை – எம்.கோபாலகிருஷ்ணன்
பிரெஞ்சு நாட்டின் பெருமைகளுள் ஒன்றாகக் கருதப்படும் லூவர் அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற ஓவியம் ஒன்று களவு போனது. அரசுக்கும் காவல் துறைக்கும் கடும் சவாலாக அமைந்த அந்த சம்பவத்தை உலகமே உற்று கவனித்தது. ஆனால், எந்தவொரு முயற்சியும் பலன் தரவில்லை. காணாமல் போன அந்தக் கலைப் பொக்கிஷம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே அருங்காட்சியகத்துக்குத் திரும்பி வந்தது. ஓவியத்தைப் போலவே அது களவு போன கதையும் மர்மமும் வசீகரமும் நிறைந்தது. அம்மனிதர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கலை அமைதியுடனும் வடிவ […]
தமிழினி
₹100 -
எம்.கோபாலகிருஷ்ணன்
தீர்த்த யாத்திரை – எம் கோபாலகிருஷ்ணன்
தீவினைகள் உறுத்து வந்தூட்ட பிடிப்பற்ற வாழ்வின் துரத்தல்களில் வீடு துறந்து வெளியேறும் ஒருவன் வெவ்வேறு சூழல்களில் சந்திக்கும் வெவ்வேறு மனிதர்களின் வழியாக தன்னைக் கண்டடைய முயல்கிறான். அலைதலும் திரிதலுமான இப்பயணத்தின் முடிவில் அவன் எங்கு சென்று சேர்கிறான் என்பதைச் சொல்லும் புதினம்.
தமிழினி
₹220 -
ஜெயமோகன்
முன்சுவடுகள்
வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளை மிகச்சிறந்த கதைகளுக்குரிய உணர்ச்சிகரத்துடனும் கலையொருமையுடனும் தொகுத்து அளித்திருக்கிறார் ஜெயமோகன். அறம் தொகுதியின் உண்மை மனிதர்களின் கதைகளுக்கு நிகராகவே தீவிரமான உள எழுச்சியை உருவாக்குபவை இவை. வாழ்க்கைமேல் நம்பிக்கையை, செயலாற்றுவதற்கான தூண்டுதலை அளிப்பவை. முன்னால் சென்றவர்களின் காலடிகள் போல தெளிவான வழிகாட்டல்கள் வேறென்ன உள்ளது? அவை அறைகூவல்கள், அறிவுறுத்தல்கள், ஆற்றுப்படுத்தல்கள். மானுடர் இங்கே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். பல்லாயிரம்கோடியென. எஞ்சுவன சில சுவடுகள் மட்டுமே. அவற்றிலுள்ளன ரத்தம், கண்ணீர், வியர்வை. ஒவ்வொன்றும் அருமணிகளை […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹240 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
தனிவழிப் பயணி
பிறழ்வெழுத்து என்னும் எழுத்துமுறையின் இந்திய அளவிலான முதல் உதாரணம் சாரு நிவேதிதா. எழுத்து, எழுத்தாளன் என்னும் உருவகங்களை உடைத்து விளையாட்டென நிகழும் எழுத்து அவருடையது. எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாத எழுத்து. பின்நவீனத்துவ காலகட்டத்தின் இலக்கியவாதி அவர். புனைவு, உண்மை என்னும் இரண்டு எல்லைகளைக்கூட அழித்துச்செல்வது
அவருடைய எழுத்துலகம். அத்தகைய எழுத்து என்பது கோட்பாட்டு அலசல்களுக்கு, கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளுக்கு முற்றிலும் எதிரானது அவர்களால் எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாதது. அவர்கள் தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் அதன்மேல் சுமத்த, அதையெல்லாம் உதறி நிர்வாணமாக முன்சென்றுகொண்டிருப்பது. அவர்களை தன் எளிமையாலெயே தோற்கடிப்பது. ஆனால் வாசிக்கும்போது தன்னையும் சாரு நிவேதிதா போல நிர்வாணமாக ஆக்கிக்கொள்ளும் வாசகன் அதை எளிதில் தொட்டு அறியமுடியும். ஏனென்றால் சாருவின் எழுத்துக்கள் அவர்களை நோக்கியே எழுதப்பட்டுள்ளன. அத்தகைய வாசிப்புகள் அடங்கிய தொகுதி இது. சாரு நிவேதிதா 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை பெறுவதை ஒட்டி இந்நூல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பால் வெளியிடப்படுகிறது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹200 -
ஜெயமோகன்
நாளும் பொழுதும்
நாளும் பொழுதும் நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன்.
நற்றிணை பதிப்பகம்
₹170 -
எம்.கோபாலகிருஷ்ணன், நித்ய சைதன்ய யதி
அறிவு – ஞானத்தின் ஆய்வியல்
அறிவு – ஞானத்தின் ஆய்வியல் உரை: நித்ய சைதன்ய யதி தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன் ~ அறிவின் பொருளாக அறியப்பட்டிருக்கும் அந்த ஒன்று எது? ஒட்டுமொத்த நிகழ்வில் அறிவு ஒரே சமயத்தில் அறிபடுபொருளாகவும், அறிபவராகவும், அறிவாகவும் செயலாற்றுவது எங்ஙனம்? ‘அறிவு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலிலுள்ள பதினைந்து பாடல்களின் வழியாக நாராயண குரு, மெய்யியல் தத்துவத்தை அறிவுப்புலம் சார்ந்த நோக்கில் முன்வைக்கிறார். நாராயண குருவின் வழித்தோன்றலான குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்து உரையெழுதிய இந்த […]
தன்னறம்
₹80 -
ஜெயமோகன்
ஏழாம் உலகம்
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன! “ஏழாம் உலகம்” அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400 -
ஜெயமோகன்
உலோகம்
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோட தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹220