Books
Showing 145–156 of 236 results
-
சு. வேணுகோபால்
நிலம் எனும் நல்லாள்
ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே – ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு
தமிழினி
₹180 -
ஜெயமோகன்
அருகர்களின் பாதை
ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும் பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாதகாலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடித்தேடிச் சென்று பார்த்தார். அந்த அறநிலைகளின் சங்கிலி இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டறிந்தார். அனேகமாக அத்தனை இடங்களிலும் அவர்கள் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400 -
அமர் மித்ரா
துருவன் மகன்
சாகித்ய அகாதெமி
₹550 -
த.நா.குமாரசாமி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய
ஆரோக்கிய நிகேதனம்
ஆரோக்கிய நிகேதனம்’ என்பது மூன்று தலைமுறையாக மருத்துவம் செய்துவரும் குடும்பத்தவரது மருத்துவ நிலையம். அது சிதைந்த நிலையில் உள்ளது. ஆரோக்கிய நிகேதனத்தை நிறுவிய ஜகத்பந்து மாஷாய்-யின் மகன் ஜீவன் மாஷாயின் வயோதிப காலத்தில் கதை ஆரம்பித்து அவரது முன்னைய தலைமுறை, இளமைக்காலம், அவரது மகன் என கதை விரிவடைகிறது.இவர்கள் நாடி பிடித்து ஆயுள் சொல்லக்கூடியவர்கள், ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றுபவர்கள். அந்த காலத்தில் பிரபலமகி வந்து கொண்டிருந்த ஆங்கில மருத்துவம், நாட்டு வைத்தியம் தொடர்பாக மக்களது அபிப்பிராயங்கள், பரம்பரையாக […]
சாகித்ய அகாதெமி
₹440 -
எம்.கோபாலகிருஷ்ணன்
மனைமாட்சி – எம்.கோபாலகிருஷ்ணன்
தமிழினி
₹690 -
ஜேனிஸ் பரியத்
நிலத்தில் படகுகள்
மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பரியத் அவர்களுக்கு யுவபுரஸ்கார் பெற்றுத்தந்த ஆங்கிலச் சிறுகதை தொகுப்பான Boats on Land புத்தகம் நம்மால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிலத்தில் படகுகள் எனும் சிறுகதைத் தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது முற்றிலும் புதிய நிலப்பகுதியை அறிமுகம் செய்தன இந்தக்கதைகள். பலர் மொழிபெயர்ப்பு செய்த இந்த மொத்தக்கதைகளையும், தமிழில் வாசிக்கும்போது ஒரே சீராக வரும்வகையில் மெய்ப்பு நோக்கி கொடுத்ததில் சுசீலாம்மாவின் பங்கு மிக முக்கியமானது.
நற்றிணை பதிப்பகம்
₹350 -
சுனில் கிருஷ்ணன்
விஷக் கிணறு
அரிதினும் அரிதாக நிஜம் கற்பனையை எட்டிப் பிடித்து கடந்து முன் செல்லும். ‘வைரஸ்’ கதைகள் எழுதப்பட்டபோது அவை முற்றிலும் கற்பனையில் உதித்தவை. ஆனால் எழுதி முடித்து பதிவேற்றம் செய்யப்படும் குறுகிய காலக்கட்டத்திற்குள் அவை அன்றாடமாகிவிட்டன. கண் முன் ஒரு ஸ்டூடியோ உலகம் சுருள் அவிழ்ந்த காலகட்டம். உங்களிடம் ஒரே ஒரு உயிர்க்காக்கும் கருவி உள்ளது மூவரில் ஒருவருக்கு மட்டுமே அதைப் பொருத்த முடியும் எப்பேர்ப்பட்ட அறநெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டோம். தியாகங்களுக்கும் தேர்வுகளுக்கும் என்ன பொருள்? யார் உயிர் வாழ்வது என்பதை […]
யாவரும்
₹200 -
சா. ராம்குமார்
தேவியின் தேசம்
மனிதஇனம் தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருக்கிறது. புதுமையை நோக்கிய பயணத்தை கனவுகள் தான் வழிநடத்துகின்றன. சில நேரங்களில் தொலைதூரப் பயணங்களை வீரதீரசாகசங்களும் அலங்கரிப்பதுண்டு. அந்த வகையில் தமிழர்களின் கடல் வழி வணிகம் வரலாற்றின் பக்கங்களில் பெருமிதத்தோடு இடம்பெற்றுள்ளதக் காண முடிகிறது. அதேபோல் அந்நிய பண்பாட்டின் தாக்கம் இந்திய மனங்களை ஊடுருவி நிலைத்து நிற்பதும் ஆழமான ஆய்வுக்குரியவை.
தமிழினி
₹170 -
வைரவன் லெ. ரா.
பட்டர்-பி
‘..ஒழுகினசேரியின் நீண்ட சுடுகாட்டில் வரிசையாய் சாதிக்கு ஒரு எரிக்குழி. எட்டு அடியில் மண் பீடமாய் நிற்கும் மாசாண சுடலை தான் மொத்த பொறுப்பு. குழியில் சாந்து நிரப்பி உள்ளே எரியும் வைக்கோல் நின்று எரிய வசதியாய் சாந்தின் மேல் தலைமாட்டில், நெஞ்சு, கால்மாட்டில் சிறிதாய் மூன்று கையளவு குழியிட்டனர். அத்தான் மொட்டை போட போகவும், நான் பழையாற்றில் இறங்கி முங்கியெழுந்து படித்துறையில் ஏற, மணி அண்ணன் ஓல்ட் கிங்ஸ் ரம் பாட்டிலை இடப்புறமிருந்த மின்மயான மேடையில் அமர்ந்தபடி […]
யாவரும்
₹150 -
நாஞ்சில் நாடன்
நீரின் திறவுகோல்
தமிழினி
₹190 -
நாஞ்சில் நாடன்
கறங்கு
சமகால நடப்புகளின் மீது சாமானியர்களுக்கு உள்ள விமர்சனங்களையும் கோபத்தையும் கையாலாகாத்தனத்தின் தம் மீதான கழிவிரக்கத்தையும், எள்ளலும் சீற்றமும் கொப்பளிக்கும் தனித்துவமான மொழியில் சொல்கின்றன நாஞ்சில்நாடனின் இக்கதைகள்.
தமிழினி
₹120 -
செல்வேந்திரன்
வாசிப்பது எப்படி?
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹125