Books
Showing 157–168 of 236 results
-
செல்வேந்திரன்
பாலை நிலப் பயணம்
நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை நூலாக பதிப்பித்திருக்கிறார். அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் தமிழ்நடை தொடர்வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் கொண்ட இதழியலாளனுடையது. துள்ளிச் செல்லும் சொற்கள், அழகிய ஒழுக்கு. தமிழின் முக்கியமான பயணக்குறிப்புகளில் ஒன்று
– ஜெயமோகன்
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹120 -
ஆர். காளிப்ரஸாத்
ஆள்தலும் அளத்தலும்
பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு தனியான வசீகரம் உண்டு. மனத்தின் அவத்தைகள், தட்டழிவுகள், பிறழ்வுகள், கனவு நிலை உரைத்தல்கள், பிரமைகள் என்பன சிறுகதைக் கருப்பொருட்கள். சம்பவங்கள், முரண்கள், குணச்சித்தரிப்புகள், வாழ்வியல் போராட்டங்கள் எனப்பிறிதொரு வகை. என்ன வகையாயினும் மொழித்திறனிலும் செய்நேர்த்தியிலும் கூறு முறையிலும் சிறுகதைகள் எம்மை ஈர்க்கின்றன. – எழுத்தாளர் […]
யாவரும்
₹140 -
எம்.கோபாலகிருஷ்ணன்
மொழி பூக்கும் நிலம்
தமிழினி
₹110 -
ஜா.ராஜகோபாலன்
ஆட்டத்தின் ஐந்து விதிகள்
இந்நூல் கையாளவிருப்பது பேருருவம் கொண்ட நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர் என்னும் கூட்டு ஆளுமையை, அல்லது ஒரு குட்டிச் சமூகத்தை. சமூகம், பண்பாடு என நாம் சொல்லும் இந்தப் பேரமைப்பின் இன்னொரு வடிவம்தான் இது. அதன் அத்தனை சிக்கல்களையும் ஒரு விற்பனையாளன் கையாள முடியுமா என்ன? இது அந்தப் பேருருவனை அவன் பொருளை வாங்கும் கணத்தில் மட்டும் நிறுத்தி அங்கே அவன் வெளிப்படுவதை மட்டும் கொண்டு வரையறை செய்கிறது. அங்கே அவனைக் கையாள்வதைப் பற்றிப் பேசுகிறது. நம் கூடாரத்திற்குள் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹140 -
Kumaragurubaran (குமரகுருபரன்)
குமரகுருபரன் கவிதைகள் – முழுத்தொகுப்பு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200 -
ஸ்ரீனிவாச வைத்யா
ஓடை
வாசிப்பு ஒரு சிரமமான அனுபவம் என்று ஆகிவிட்ட சமீப நாட்களில், ஸ்ரீனிவாச வைத்யாவின் “ஹள்ள பந்து ஹள்ள“ புனைகதை, மாறுபட்ட உற்சாகமான வாசிப்பின் அனுபவத்தைக் கொடுக்கிறது. வைத்யா அழகாகக் கதை சொல்கிறார். குடும்பக் கதையைச் சொன்னாலும், அத்துடன் நாட்டின் கதையும் சேர்ந்துகொள்கிறது. இது சமுதாய மாற்றத்தின் தொகுப்பாகவும் இருப்பதால், கதை பன்முக வடிவங்களைப் பெற்றுவிடுகிறது.
சாகித்ய அகாதெமி
₹260 -
பூர்ணசந்திர தேஜஸ்வி
சிதம்பர ரகசியம்
சிதம்பர ரகசியம்: கர்நாடகத்தின் மலைநாட்டுப் பகுதியிலுள்ள கெசீரூர் அழகான ஒரு சிறு கிராமம். சுற்றிலும் மலைகளும் காடுகளும் சூழ்ந்தது. ஏலக்காய் விளையும் பூமியாதலால் அப்பகுதியின் சமூக அமைப்பும், பண்பாடும் ஏலக்காயைச் சுற்றியே அமைகின்றன. பிரச்சனைகளும் ஏலக்காய் காரணமாகவே எழுகின்றன. எழுந்த பிரச்சனைகளைப் பற்றித் துப்புதுலக்க ஒரு புலனாய்வு அதிகாரி வருகிறார். நாடோடி மக்களின் வாழ்க்கை முறை, கல்லூரி மாணவர்களின் உற்சாகம், ஊரின் ஒவ்வொரு சந்திலும் நெளிந்து திரியும் வகுப்புவாத அரசியல் நச்சுப்பாம்பு, மனசாட்சியுள்ள, ஆனால் தெளிவில்லாத அறிவு ஜீவிகள், […]
சாகித்ய அகாதெமி
₹250 -
தேபேஷ் ராய்
திஸ்தா நதிக்கரையின் கதை
சாகித்ய அகாதெமி
₹650 -
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தரராமசாமி நாகர்கோவிலில் 1931 ஆம் ஆண்டு மே 30 அன்று பிறந்தார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் சுமார் அறுபது சிறுகதைகளும், பசுவைய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988 இல் காலச்சுவடு இதழை நிறுவினார்.
சாகித்ய அகாதெமி
₹240 -
எம்.சுகுமாரன்
சிவப்புச் சின்னங்கள்
சாகித்ய அகாதெமி
₹180 -
ஜெ.பி.தாஸ்
உயில் மற்றும் பிற கதைகள்
சாகித்ய அகாதெமி
₹160 -
சு.கிருஷ்ணமூர்த்தி, பரசுராம்
ஆனந்திபாயி மற்றும் பிற கதைகள்
சாகித்ய அகாதெமி
₹90