Books
Showing 169–180 of 236 results
-
எம்.டி.வாசுதேவன் நாயர் (M.D.Vasudevan Nair)
இரண்டாம் இடம்
ஞான பீடம் விருது பெற்ற இரண்டாம் இடம் என்னும் இந்த மலையாள நாவல் ‘கங்குலியின் பரதம்’ மற்றும் ஜெயம் எனும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அபரிமித கற்பனையும் மர்மங்களையும் உட்படுத்தாமல் மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வைத்து மனித குண இயல்புகளை கொண்ட கதாபாத்திரங்களால் படைத்து பீமனின் பார்வையில் பீமனே சொல்வது போல் வடிவமைக்கப்பட்டதே இந்நாவலின் சிறப்பு தன்மையாகும். இதுவரையில் படித்துள்ள மகாபாரத கதைகளிலிருந்து மாறுபட்டு சற்று வேறுபட்டுள்ள […]
சாகித்ய அகாதெமி
₹320 -
கே.சிவராம் காரந்த், தி.ப.சித்தலிங்கையா
மண்ணும் மனிதரும் – கே.சிவராம் காரந்த்
சிறப்பு மிளிரும் இந்தப் படைப்பு,கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என்று போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதை. ஒரு கடலோர கிராமத்தில், பரம்பரையாக வரும் வேளாண்மைக் குடும்பத்தில் நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. மகன் நிலத்தை விட்டு நகரத்துக்குச் சென்று தொழில் செய்கிறார். ஆங்கிலக்கல்வி பெற்ற இரண்டாம் தலைமுறை, மண்ணுடன் தனக்குள்ள உறவுகளை இழக்கிறது. மூன்றாம் தலைமுறை இதனால் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கிறது. பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று வாழ்க்கை நடத்த முயல்கின்ற பேரனுக்கு இந்த […]
சாகித்ய அகாதெமி
₹485 -
Jagadeeshkumar, Jeyamohan, ஜெயமோகன்
A Fine Thread and Other Stories
A Fine Thread and Other Stories is a collection of sixteen translated stories originally written in Tamil by the acclaimed author Jeyamohan. Each story explores rich and intriguing territories, ranging from art’s place in spirituality through the dreamy, incredible account of a young monk’s search for atonement for his ancestors’ curse in ‘Shadow Crow’, to […]
Ratna Books, Ratna Sagar P Ltd
₹559 -
யுவன் சந்திரசேகர்
நிலவைச்சுட்டும் விரல் – யுவன் சந்திரசேகர்
இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும் மனத்தின் பறத்தலுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டவை. கவிதையை வாசிக்கும்போதோ, வாசித்த கவிதைகளைப் பற்றி யோசிக்கும்போதோ, நினைவுக்கு வந்த அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் கோத்துத் தருபவை. அனைத்துக் கட்டுரைகளுமே கவிதை பற்றிப் பேசுபவை; கவிதையியல் பற்றியவை அல்ல. எனக்கு நானே பேசிக்கொண்டதைக் கோத்து வைத்திருக்கிறேன். மற்றபடி, கவிதையுடனான சகவாசம், எந்த அளவிலுமே கிளர்ச்சி தரக்கூடியது. காலச்சுவடு இதழில் தொடர் பத்தியாக வெளியான கட்டுரைகளுடன் புதிதாகஎழுதப்பட்டவையும் சேர்ந்தது இந்தத் தொகுப்பு. யுவன் சந்திரசேகர்
காலச்சுவடு
₹270 -
இசை
இசை கவிதைகள்
காலச்சுவடு
₹750 -
ஆனந்த் குமார்
டிப் டிப் டிப்
டிப் டிப் டிப் ~ கவிதைத்தொகுப்பு ~ ஆனந்த்குமார்: “தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்தான் முதிராக்கவிதைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். எளிமையான வாழ்க்கைப்பார்வை, எளிமையான அரசியல் கருத்துக்களை. அது மொழியின் எளிமை அல்ல. கவிதையின் மொழியில் தன்னியல்புத்தன்மைக்கே இடம், செயற்கையான எளிமைக்கு இடமில்லை. அந்த எளிமை கவிஞனின் அகஎளிமை. இயற்கையின்முன், பிரபஞ்சப்பெருக்கின் முன், வாழ்க்கைநாடகத்தின் முன் அவன் […]
தன்னறம்
₹150 -
ராய் மாக்ஸம்
உப்புவேலி
2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி. இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது அவ்வேலி. மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானங்களுள் ஒன்று. சொல்லப்போனால், உலகிலேயே மிகப்பெரிய உயிர்வேலி அது.
தன்னறம்
₹440 -
சு. வேணுகோபால்
நுண்வெளி கிரகணங்கள்
உண்மையும், உணர்ச்சிகளின் வேதனையும். உள்ளத்தில் அருளும், வாழ்வில் விதியும், மனித அறிவின் எல்லைகளும் ஒன்றுற முயங்கும் கணத்தில் கூடு பொறித்த உயிரான எழுத்துகளாய் அவை நம்மை நோக்கி விழிக்கின்றன. அந்த யதார்த்தத்தின் பசுமை நம் நினைவிலும் படர்கிறது. அன்றாட வாழ்க்கையின் தன்மையைப் புதுப்பித்தது போன்ற ஒரு நிம்மதி படிப்பின் பிற்றை நிலையாய் நாம் உணரக் கிடைக்கிறது. -வி. மோகனரங்கன்
தமிழினி
₹400 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
நாடோடியின் கால்த்தடம்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹200 -
க. மோகனரங்கன்
அங்கே சொற்களுக்கு அவசியமில்லை
தமிழினி
₹100 -
அரவிந்த் சுவாமிநாதன்
விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் – 2
தமிழின் நவீனச் சிறுகதை என்று ஆய்வாளர்களால் மதிப்பிடப்படும் ‘குளத்தங்கரை அரசமரம்’, 1915-இல், ‘விவேகபோதினி’யின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் இதழ்களில் வெளியானது. ஆனால், அதற்கு முன்பே திருமணம் செல்வகேசவராய முதலியார், பாரதியார் போன்றோரது சிறுகதைகள் வெளியாகிவிட்டன. ஆனால், இவற்றிற்கெல்லாம் முன்பே, 1892 முதல் வெளியான ‘விவேக சிந்தமாணி’ மாத இதழில், பல சிறுகதைகள் மாதந்தோறும் வெளியாகியிருக்கின்றன.. நீதிபோதனைகளாகவும், சம்பவ விவரிப்புகளாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் இருந்த அவற்றை, சிறுகதைகளுக்கான ஆரம்ப முயற்சிகள் என்று மதிப்பிடலாம். கடந்த நூற்றாண்டுகளில் துவங்கிய இச்சிறுகதை மரபு […]
யாவரும்
₹550 -
வைரவன் லெ. ரா.
ராம மந்திரம்
யாவரும்
₹180