Books
Showing 181–192 of 236 results
-
சுஷில் குமார்
அடியந்திரம்
சுஷில் குமாரின் கதைகள் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் மட்டும் வேரூன்றிய மாந்தர்களின் நம்பிக்கையை, பயத்தை, மீட்சியை, அலைகழிப்பை அவற்றின் இயல்பிலேயே சொல்லிப் போவதாகத் தோன்றலாம். சில சமயங்களில் அதீதங்களின் வெளிப்பாடாகவும் தெரியலாம். ஆனால் அவரது கதையுலகின் பாதாள நதியின் ஈரம் ஒரு பெரும் சமூகத்தின் வெவ்வேறு நிலங்களை நனைத்தபடியே செல்வதை கண்டடைய முடியும். கதவில்லா கூண்டை தேர்ந்தெடுக்கும் பறவையின் சுதந்திரத்தை கைக்கொள்ளும் அந்த ஈரமே சுஷில் குமாரின் கதைக்களமாகத் திகழ்கிறது.
யாவரும்
₹220 -
சு. வேணுகோபால்
தமிழ் சிறுகதைகளின் பெருவெளி
தமிழின் மகத்தான சிறந்த 13 படைப்பாளிகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரை நூல். வாசிப்பவர்கள் யாவருக்கும் இப்புத்தகம் தமிழ்ச் சிறுகதை உலகத்தைப் பற்றிய புதிய வெளிச்சத்தைத் தரும்.
தியாகு நூலகம்
₹400 -
நாஞ்சில் நாடன்
நாஞ்சில்நாடன் கதைகள்
உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராம்மொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில்நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது. இல்லாமை கண்டு வருந்தியும் தன் பசியாறி பிறர் பசி மறுப்போரின் கயமையை நொந்தும், தினம் மாறும் குணம் கொண்டோரைக் கண்டு வெகுண்டும் கதை பேசுகிறது. எள்ளி நகையாடியும் எடுத்தெறிந்து பேசியும் முகத்திலறைந்தும் முணுமுணுத்த்படியும் தொடர்கிறது. […]
தமிழினி
₹620 -
நாஞ்சில் நாடன்
சூடிய பூ சூடற்க
உந்தித்தீயின் வெம்மையும் நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில் நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது.
தமிழினி
₹170 -
நாஞ்சில் நாடன்
அம்மை பார்த்திருந்தாள்
பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. அரை நூற்றாண்டுகாலத் தமிழ் சமூக வாழ்வின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை நேர்மைத் திறத்துடன் உறுதிப்படத் தொடர்ந்து தன் கதைகளின் வழியாக எழுதிக்காட்டுகிறார் நாஞ்சில் நாடன். தேர்ந்த ஒரு தவசிப்பிள்ளையைப் போல வேண்டிய பதார்த்தத்தில் வேண்டிய சுவைக்காட்டித் திருத்தமாக விளம்பும் நுட்பத்துடன் எழுதுவதால்தான் அவற்றிலுள்ள சீற்றத்தையும் எள்ளலையும் நம்மால் ஒன்றுபோல ரசித்துச் சுவைக்க முடிகிறது -எம். கோபாலகிருஷ்ணன்
தமிழினி
₹160 -
செல்வேந்திரன்
நகுமோ லேய் பயலே
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹135 -
விலாஸ் சாரங்
கூண்டுக்குள் பெண்கள்
நற்றிணை பதிப்பகம்
₹350 -
சத்ஸயி பிஹாரி
நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் நிலா
தமிழினி
₹100 -
சுரேஷ் பிரதீப்
உடனிருப்பவன்
முதலிரு தொகுப்புகளைப் போலவே இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளையும் ஒரு வருட இடைவெளியில் எழுதி இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு தொகுப்புக்கான கதைகளை எழுதிவிட வேண்டும் எங்கிற தீர்மானமெதுவும் இல்லை. இயல்பாக அப்படி அமைந்துவிடுகிறது. ‘விஷச்சுழல்’ என்ற இத்தொகுப்பின் கடைசி கதையை எழுதிய பிறகு ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்து வெளியேறிவிட்டதான உணர்வு தோன்றியது. பக்க அளவு கதைகளின் எண்ணிக்கை போன்றவற்றைவிட இத்தகையதொரு முழுமையுணர்வே கதைகளை தொகுப்பதற்கான அளவீடாகக் கொள்கிறேன். – சுரேஷ் பிரதீப்
யாவரும்
₹150 -
போகன் சங்கர்
மர்ம காரியம்
தமிழினி
₹220 -
சு. வேணுகோபால்
உயிர்ச்சுனை
வேணுகோபாலின் எழுத்துக்களில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத் தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லௌகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது. தன் கதைகளின் ஊடாக அவர் நம் முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்டிலும், அவன் மனதில் உறைந்திருக்கும் கருமையை தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திந்தாலும், கீழ்மைதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. – […]
தியாகு நூலகம்
₹230 -
லக்ஷ்மி மணிவண்ணன்
வெள்ளைப் பல்லி விவகாரம்
90களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் உக்கிரமான புனைகதை மொழியால் தீவிர கவனம் பெற்றவை லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள். ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் ஒழுங்கின்மைகளையும் தர்க்க மனதின் அதர்க்கத்தையும் வெகு நுட்பமாக இக்கதைகள் கடந்து செல்கின்றன. நிர்ணயிக்க முடியாத புள்ளிகளின் வழியே நகர்ந்துகொண்டிருக்கும் சமகால வாழ்வின் அபத்தங்களை, அர்த்தமின்மைகளை, குழப்பங்களை லக்ஷ்மி மணிவண்ணனின் மொழி மிக நூதனமாக சித்தரிப்புகளின் வழியே கையாள்கிறது.
வெயிலாள் டிரேடர்ஸ்
₹120