Books
Showing 193–204 of 236 results
-
சு. வேணுகோபால்
கூந்தப்பனை
வேணுகோபாலின் எழுத்துகளில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமெனச் சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத்தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.தன் கதைகளின் ஊடாக அவர் நம்முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்டிலும், அவன் அவன் மனதில் மறைந்திருக்கும் கருமையைத் தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திருந்தாலும், மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. அவரது கதை மாந்தர்கள் இலட்சிய […]
தமிழினி
₹160 -
சு. வேணுகோபால்
ஆட்டம்
புறத்தின் ஆட்டவிதிகளுக்கு
அடங்காத பேயாட்டம் அகத்தில்.
அந்த மோகப் பெருநெருப்பும்
தணிந்து அகல் சுடராகிக் கனியும்
கருணையொளி…
தமிழினி
₹90 -
எம்.கோபாலகிருஷ்ணன்
பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி
தமிழில் இந்திக் கவிதைகளை அறிமுகப்படுத்தும் முதல் தொகுப்பு. இந்தியின் மூத்த கவிஞர்களிலிருந்து இன்றைய தலைமுறை கவிஞர்கள் வரையிலுமான முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு, இந்திக் கவிதையுலகை அறிந்துக்கொள்வதற்கான ஒரு சாளரம்.
நூல் வனம்
₹330 -
ஜெயமோகன்
அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்
சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்.
கிழக்கு பதிப்பகம்
₹155 -
ஜெயமோகன்
நெம்மி நீலம் – அறம் தெலுங்கில்
தமிழில் அறம் – உண்மை மனிதர்களின் கதை என்ற பெயரில் பரபரப்பாக விற்பனையான சிறுகதைத்தொகுப்பு தெலுங்கில் திரு. பாஸ்கர் அவினேனி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சாயா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. அறம் தொகுப்பில் உள்ள கதைகளை தெலுங்கில் வாசிக்க விரும்புபவர்களுக்காக.
Chaaya Publications
₹450 -
தேவதேவன்
தேவதேவன் கவிதைகள் – பாகம் – 2 (வம்சி)
நார்சிசஸ் வனம் புல்வெளியில் ஒரு கல் விண்ணளவு பூமி விடிந்தும் விடியாப்பொழுது விதையும் கனியுமான பாரம் நீல நிலாவெளி பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்
வம்சி புக்ஸ்
₹950 -
தேவதேவன்
தேவதேவன் கவிதைகள் – பாகம் – 1 (வம்சி)
குளித்துக்கரையேறாத கோபியர்கள் மின்னற்பொழுதே தூரம் மாற்றப்படாத வீடு பூமியை உதறியெழுந்த மேகங்கள் நுழைவாயிலிலேயே நின்றூவிட்ட கோலம் சின்னஞ்சிறிய சோகம் நக்ஷத்ர மீன் அந்தரத்திலே ஓர் இருக்கை
வம்சி புக்ஸ்
₹850 -
கி.ராஜநாராயணன்
நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்
சாகித்ய அகாதெமி
₹1150 -
மமாங் தய்
கருங்குன்றம்
லாமாக்களின் பூமியான திபெத்தில் சுவிசேஷப் பணியை மேற்கொள்ளும் விழைவுடன் இந்தியாவின் வடகிழக்கில் பூர்வகுடிகளின் வாழிடம் வழியாகப் பயணிக்கும் பிரெஞ்சுப் பாதிரியைத் தம் எல்லைக்குள் புகுந்துசெல்ல பழங்குடிகள் அனுமதி மறுக்கின்றனர். மிஷனரிகளைத் தொடர்ந்து அன்னிய ஆட்சியாளர்கள் தம் மண்ணுக்குள் ஊடுருவி வந்து காலங்காலமாக இருந்துவரும் உரிமைகளையும், சுதந்திர வாழ்வையும் ஒருசேரப் பறித்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் நடுவிலும், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குச் சிலர் துணைபோவதால் இனக் குழுக்களிடையே மூளும் மோதல்களுடன் ஆழ்ந்த காதலும் முகிழ்க்கிறது. வடகிழக்கு மண்ணின் இயற்கை எழிலையும் பூர்வகுடிகளின் […]
சாகித்ய அகாதெமி
₹290 -
தர்மானந்த கோசாம்பி
பகவான் புத்தர்
உலகத்தின் உயர்நிலைச் சிந்தனையாளர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பகவான் புத்தர். அரசவாழ்வைத் துறந்து மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழிகாண முயன்று வெற்றி கண்டவர். அவருடைய அறவழி, சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில் பரவியது. நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்து பீகாரில் உள்ள கயை என்ற இடத்தில் அரசமரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார். அதனால் அது போதிமரம் என்று பெயர் பெற்றது. பின்னர் குசிநகரா என்ற இடத்தில் புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார். இந்நூல் […]
சாகித்ய அகாதெமி
₹270 -
யு.எ.காதர்
திற்கோட்டூர் நாவல்கள்
8- நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பான ‘திற்கோட்டூர் நாவல்கள்’ ‘திற்கோட்டூர்’ என்ற கிராமத்தின் பின்னணியில் எழுதப்பட்டது. தற்போதைய நவீனப் போக்குகளிலிருந்து விலக, அவரது கிராம மக்களின் வாய் மொழியில் மக்களின் நம்பயகை, பழக்க வழக்கங்கள் வடக்கு மலபாரில் நடைபெறும் -கோயில் கொடை முதலியவற்றை மிகவும் தத்ரூபமாகக் கற்யனை கலக்காமல் எழுதி வருகிறார். யு.எ.காதரின் இலக்கியப் படைப்புகள் வரலாற்று, மொழிரீதியாகப் பெரும் சேவை புரிகின்றன. வாசகர்களுக்குப் பழைமையான கேரளத்தின் உண்மையான சித்திரம் இவற்றின் மூலம் கிடைக்கிறது.
சாகித்ய அகாதெமி
₹175 -
அப்பூரி சாயாதேவி
அவளது பாதை
சாகித்ய அகாதெமி
₹165