Books
Showing 13–24 of 236 results
-
ஜெயமோகன்
வாசிப்பின் வழிகள்
இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இலக்கிய வாசகன் எதிர்கொள்ளும் தடைகள் என்ன, இலக்கியக் கருத்துக்களைச் சொல்வது எப்படி என்பதுபோன்ற பல வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் கட்டுரைகள் இவை. உலக இலக்கியக்களத்தில் சென்ற இருநூறாண்டுகளில் நிறைய விவாதிக்கப்பட்ட அடிப்படைகள் இவை. ஆனால் தமிழ்ச்சூழலில் இவற்றை பேசுபவர்கள் குறைவு. இவற்றை அறியாததனாலேயே பலர் ஆரம்பகட்ட குழப்பங்களையே தங்கள் சிந்தனைகளாக கொண்டிருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிக்கல்களில் இருந்து […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210 -
ஜெயமோகன்
வான் நெசவு
ஆசிரியர் இருபத்தைந்து ஆண்டுக்காலம் பணியாற்றிய தொலைத்தொடர்புச்சூழல் இக்கதைகளில் உள்ளது. ஆனால் அந்த அலுவலகச் சூழல், தொழில்நுட்பச்சூழல் ஓர் அறியப்படாத வாழ்க்கைக் களம் மட்டுமாக காட்டப்படவில்லை. தொலைதொடர்பு என்ற செயல்பாடு குறியீடாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் வழியாக விரியும் கதைகள் வாழ்க்கையின், பிரபஞ்சத்தின் அறியாத நெறிகளை சொல்லிவிட முயல்கின்றன. தொழில்நுட்பம் கவித்துவக் குறியீடாக ஆவதனூடாகவே இவை இலக்கியமாகின்றன.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹215 -
ஜெயமோகன்
நீலம் – செம்பதிப்பு
வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச் சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றெடுக்கும் கிருஷ்ணனின் கதை. கம்சனும் ராதை […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1000 -
அருண்மொழி நங்கை
பெருந்தேன் நட்பு – அருண்மொழி நங்கை
காதலின் அகவிழியே நகரும் ஒளியாக அருண்மொழி நங்கையின் நூலின் பாதையைச் சமைக்கிறது. ஜெயமோகனுக்கு (‘ஜெயனுக்கு) சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ஒரு பரிசாக, அகத்தின் சைகையாக. ஏற்கெனவே தந்ததை நினைவூட்டும் தருதலாக. வாசகர்களின் முன் தருதல் நடக்கிறது. பரிமாற்றத்தின் ஒரு சுற்று முடிய எதிர்த் தரப்பிலிருந்து இனி தரப்பட வேண்டும். – கவிஞர் பெருந்தேவி (பின்னிணைப்பாக ஜெயமோகன் எழுதிய சில காதல் கடிதங்களும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.)
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹180 -
ஜெயமோகன்
பனிமனிதன்
இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தைகளையும் இப்போது என் குழந்தைகளாகவே நினைக்கிறேன். இந்த நாவலை சிறுவர்களுக்கான நடையிலேயே எழுதி இருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு தேறிய ஒரு குழந்தை இதை வாசிக்க முடியும். இந்த நாவல் வெறும் குழந்தைக்கதை அல்ல. இதில் தத்துவமும், ஆன்மிகமும், அறிவியலும் உள்ளன. இந்தப் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்ன என்ற கேள்வி உள்ளது. அந்தக் கேள்வி பெரியவர்களுக்கும் உரியது. அவர்களும் இந்நாவலை விரும்பி வாசிக்கலாம். அவர்களை அது சிந்திக்க வைக்கும்.
– ஜெயமோகன்விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
ஜெயமோகன்
துணைவன்
இத்தொகுதியில் ஜெயமோகன் எழுதிய எட்டு கதைகள் உள்ளன. இவற்றில் ’துணைவன்’ கதையை விரிவாக்கி வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் உருவாகியுள்ளது. வெவ்வேறு கதைக் களங்களும், கதை சொல்லும் முறையும் கொண்ட கதைகள் இவை. மனித உள்ளத்தின் ஒளிப்படாத ஆழங்களை நோக்கிச் செல்லும் பயணங்கள்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210 -
ஜெயமோகன்
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 – ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண்ட சிந்தனைகள் சரிபாதியை எடுத்துக்கொண்டிருந்தன. அவற்றுடன் விவாதித்தே ஆன்மிக மரபுகள்கூட வளர்ந்தன. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்து ஞான மரபு பக்தி மார்க்கங்களால் ஆனதாக மாறியபோது லௌகீக […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
ஜெயமோகன்
தங்கப்புத்தகம்
இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள். திபெத் ஒரு தங்கப்புத்தகம். வாசிக்க வாசிக்க விரிவது, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது. மானுடத்தில் இருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது. நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு.’ மானுடம் இழந்தவை பல அங்கே சேமிக்கப்பட்டிருந்தன. ஆகவேதான் திபெத் அத்தனை மர்மமான கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது. மீளமீள மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. இந்தக்கதைகள் திபெத்தை ஒரு கதைக்களமாக கொண்டவை என்பதைக் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
ஜெயமோகன்
விஷ்ணுபுரம் நாவல்
விஷ்ணுபுரம் ஒரு காவிய நாவல், தன்னை ஒரு காவியமாக கட்டமைத்துக்கொண்டு, தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகின்றன, வலியுறுத்தப்படுவது என்று ஏதுமில்லை. அனைத்தும் ஆராயப்படுகின்றன. விஷ்ணுபுரம் ஒரு கனவு, கனவுகள் வசீகரமானவை. இந்நாவலின் ஈர்ப்புக்குக் காரணம் அதுவே. அதே சமயம் கனவுகளில் முற்றிலும் இனியவை என்று ஏதுமில்லை, கனவுகள் நம்மை நமக்குக் காட்டுபவை. நம்மை நிலைகுலையச் செய்பவை. நாம் நமது தர்க்கபுத்தியால் எத்தனை தூரம் சென்றாலும் எவ்வளவு […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1300 -
ஜெயமோகன்
பின்தொடரும் நிழலின் குரல்
1991 தமிழகச் சிந்தனையில் சில நெருக்கடிகள் உருவான ஆண்டு. அவ்வாண்டு சோவியத் ரஷ்யாவின் கம்யூனிச அரசு வீழ்ச்சியடைந்தது ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். தொடர்ச்சியாக இலங்கை உள்நாட்டுப்போரில் சகோதரக்கொலைகள் குறித்த செய்திகள் வெளிவந்தன.வன்முறை சார்ந்த புரட்சியின்மேல் நம்பிக்கை கொண்டிருந்த சிந்தனையாளர்கள் பலர் ஆழ்ந்த உளச்சோர்வை அடைந்தனர். அது தொடர்ந்து தமிழக அரசியல் கொள்கைகளில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. அரசியல் சார்ந்து செயல்பட்ட பலர் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களாக மாறினர். பண்பாட்டரசியல் பற்றிய கேள்விகள் உருவாயின. 1991ல் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1100 -
ஜெயமோகன்
ஆனையில்லா
இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள். புத்தம்புதிய ஓர் உலகு. ஒளிமிக்க உலகு. முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள். என் இளமையைக்கொண்டு நான் சமைத்த இந்த உலகை இனியும் விரிவாக்குவேன் என நினைக்கிறேன். ஒருவேளை எழுதாமல் போகலாம். ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்வேன். இப்போதே எழுதப்படாத […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹370 -
ஜெயமோகன்
மழைப்பாடல் – செம்பதிப்பு
மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடியே இருக்கும் புல்வெளியான யாதவ நாடு. காந்தாரியும் குந்தியும் இரு முனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்திரிக்கிறது. அவர்களுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள். அன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைத்தான் பின்னர் மைந்தர் சமர்க்களத்தில் நிகழ்த்தினர் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹2000