Books
Showing 25–36 of 236 results
-
ஜெயமோகன்
ஒளிரும் பாதை
சொல் புதிது பதிப்பகத்தில் ’பொன்னிறப்பாதை’ என்ற பெயரில் வெளிவந்த நூலில் உள்ள சில கட்டுரைகள் தன்மீட்சி தன்னைக்கடத்தல் என்ற இரு புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை தவிர உள்ள கட்டுரைகள் மற்றும் அதைப்போன்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பொன்னிறப்பாதை போன்றே பரிசளிக்கத்தக்கது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320 -
ஜெயமோகன்
தொடுதிரை – கல்பற்றா நாராயணன்
கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய கவிஞர். தமிழ்க் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அவருடைய கவிதைகள். தமிழ்க் கவிதைகளில் பொதுவாக உள்ள படிமத்தன்மை அல்லது நுண்சித்தரிப்புகள் அவருடைய கவிதைகளில் இல்லை. அவை ஒரு வாழ்க்கைத் தருணத்தை முற்றிலும் புதிய வேறொரு கோணத்தில் பார்ப்பதினூடாக உருவாகும் கவித்துவத்தை முன்வைப்பவை. ஆகவே புனைவிலிருந்து தாவி கவிதையைச் சென்றடைபவை. ஏற்கனவே வெளிவந்த அவருடைய கவிதைகள் தமிழில் மிகப்பரவலான வாசிப்பு பெற்றவை. தமிழில் மிகப்புகழ் பெற்ற அயல்மொழிக்கவிஞர் எவர் என்று […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹100 -
ஜெயமோகன்
சங்கச் சித்திரங்கள்
சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது… எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துகள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300 -
ஜெயமோகன்
இலக்கியத்தின் நுழைவாயிலில்
இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது. பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது. இலக்கியத்தின் கொள்கைகள், செயல்முறைகளைத் தெளிவுபடுத்துகிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹160 -
ஜெயமோகன்
எழுகதிர்
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது. வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன. அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360 -
ஜெயமோகன்
வண்ணக்கடல் – செம்பதிப்பு
வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவது போல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் செல்கின்றன. இந்தப் பெருநாடகத்தின் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலவ்யன். நால்வருமே அவர்களை மீறிய வாழ்க்கையின் விசைகளால் பழிவாங்கப் பட்டவர்கள். அந்த ஆறா ரணத்தை ஆன்மாவில் ஏந்திய வர்கள். அவ்வகையில் இந்நாவல் ஒன்றோடொன்று […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1700 -
ஜெயமோகன்
தன்னைக் கடத்தல் – தன்னறம்`
“காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும் டின்னிடஸ் என்னும் நோய்கொண்ட ஒருவர், தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் நோய் கொண்ட ஒருவர் என இருவர். அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள் சொல்கிறார்கள். தங்கள் சிக்கலை தீர்த்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் அவர்கள் ஆகிறார்கள். தங்கள் தனிவாழ்க்கைச் சிக்கல்களால் தங்களை முற்றாகவே சமூகத்தில் இருந்து ஒளித்துக்கொள்ள விரும்பும் மூவரின் குறிப்புகள் இதிலுள்ளன. அவர்களைப் போன்ற பல்லாயிரவர் நம் சமூகத்தில் உண்டு. அவர்களின் உளவியலும் சிக்கல்களும் அவர்களின் சொற்கள் வழியாகவே பதிவாகியிருக்கின்றன. […]
தன்னறம்
₹170 -
ஜெயமோகன்
தன்மீட்சி – தன்னறம்
இவ்வகையான கடிதங்களுக்குச் சென்ற இருபதாண்டுகளாகப் பதில் போட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இது நம் சமகாலத்தில் உள்ள பொதுப்பிரச்சினை. அனைவருக்கும் உரியது. இதற்கு தனிப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் உண்மையில் உதவாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரசனை, தேடல், அறிவுத்திறன், வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடைய வேண்டியது இது. ஆகவே இப்பிரச்சிலையின் பொதுவான தளங்கள் என்னென்ன என்று மட்டுமே சொல்லமுடியும். இருந் கோணங்களில். ஒன்று, இது ஒன்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனுக்கே உரிய தனிப்பிரச்சினை அல்ல. என்றுமுள்ள மானுடப்பிரச்சினை. […]
தன்னறம்
₹200 -
ஜெயமோகன்
தேவி
இத்தொகுப்பின் கதைகளில் உள்ள பொதுக்கூறு என பெண்மையின் ஜாலங்களைச் சொல்லலாம். வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி, வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி. இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகை கொண்டிருக்கிறேன். அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது. இன்று பெண்மையின் இந்த ஜாலங்களை தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு ஆடுக மகளே என்று சொல்லுபவனாக ஆகியிருக்கிறேன். இக்கதைகளின் நுட்பங்கள் என நான் நினைப்பது பெண் அளிக்கும் பாவனைகளை. அவை மெய்யாக வெளிப்படுபவையும்கூட. மண்ணின் பாவனைகளே பருவங்களும் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320 -
ஜெயமோகன்
ஆலம்
ஆலம் மின்னூல் வாங்க
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300 -
ஜெயமோகன்
Stories of The True – அறம் ஆங்கிலத்தில் (Paperback)
Containing iconic stories like ‘Elephant Doctor’ and ‘A Hundred Armchairs’, this collection by the great Tamil writer Jeyamohan, brings together twelve inspiring and imaginative narratives, all based on the lives of real people. These stories explore the capacity of humans to hold on to their intrinsic goodness in the face of both the everyday and […]
Juggernaut
₹499 -
ஜெயமோகன்
சாதி ஓர் உரையாடல்
சாதி பற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் இங்கே அப்பேச்சுக்கள் எழுந்த சென்ற நூற்றாண்டின் வரலாற்றுப் புரிதலின் அடிப்படையில் அமைந்தவை. அதற்குப்பிந்தைய வரலாற்றுக் கொள்கைகள், சமூகவியல் கொள்கைகளை கருத்தில் கொள்ளாதவை. மிகமிக உள்நோக்கம் கொண்டவை. அரசியல் உள்நோக்கம், அதற்குள் தன் சாதி- மதம் சார்ந்த உள்நோக்கம். அதிலிருந்து நாம் பலவகையான பாவனைகளை மேற்கொள்கிறோம். சாதியடையாளங்களை அரசியலுக்காக, பொருளியலுக்காக சூடிக்கொண்டு திரிகிறோம். வெளியே சாதியொழிப்பு பேசுகிறோம். சாதிப்பெருமிதம் கொண்டிருக்கிறோம். கூடவே சாதியை கற்பித்தவர்கள் என சிலரை வசைபாடுகிறோம். இங்கே சாதி இல்லாத […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹220