Books
Showing 49–60 of 236 results
-
ஜெயமோகன்
ஈராறுகால்கொண்டெழும் புரவி
என் படைப்புகளிலேயே மிக முக்கியமான சிலவற்றில் ஒன்று என நான் நினைப்பது ஈராறுகால் கொண்டெழும் புரவி. சித்தர்ஞானம் என்பதன் மீதான ஒரு விளையாடல் அது. இதிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தைச்சேர்ந்ததாக உள்ளது. இவை சென்ற காலங்களில் நான் தங்கி மீண்டும் முன் சென்ற புள்ளிகள் என்று சொல்வேன். – ஜெயமோகன
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹170 -
ஜெயமோகன்
ஆலயம் எவருடையது?
ஆலயங்கள் எவருடையவை என்னும் விவாதம் இன்று எழுந்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் அவை இருக்கவேண்டுமா? பக்தர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா? பக்தர்கள் என்பவர்கள் எவர்? பக்தர்கள் ஆலயங்களை வெறும் வழிபாட்டிடங்களாக எண்ணுவது சரியா? வழிபாட்டின் பொருட்டு அவற்றை மாற்றியமைக்க அவர்களுக்கு உரிமை உண்டா? நம் பேராலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் மட்டும்தானா? அவை பண்பாட்டு அடையாளங்களும் சரித்திரச் சின்னங்களும் இல்லையா? ஆலயங்களில் எந்த மாற்றத்தையும் செய்யலாகாதா? பழமையிலேயே நின்றுவிடவேண்டுமா? செய்யவேண்டுமென்றால் எவர் செய்யலாம்? இக்கேள்விகளுக்கான பதில்கள் அடங்கியது இந்நூல்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹150 -
ஜெயமோகன்
படுகளம்
Dispatch starts from 01.06.2024
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹340 -
ஜெயமோகன்
பத்ம வியூகம்
வெண்முரசு எழுதும் கனவு எனக்கு 1990 முதல் இருந்துவந்தது. என் பழைய கடிதங்களில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன் என நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான உளநிலையை, அறிவை உருவாக்கவே இருபத்தைந்தாண்டுகள் ஆயின. அந்த பயணத்தில் மகாபாரதத்தை ஒட்டி சிலகதைகளை எழுதிப்பார்த்தேன். அவற்றில் திசைகளின் நடுவே, பத்மவியூகம் போன்ற கதைகள் புகழ்பெற்றவை. இன்று வாசிக்கையில் அவற்றினூடாக வெண்முரசின் மெய்மையை நோக்கி நான் நகர்ந்து வந்திருப்பதை காணமுடிகிறது. இக்கதைகள் நான் என் மகாபாரதத் தேடலின் தடங்கள். அதேசமயம் நவீனக்கதைகளும்கூட -ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400 -
ஜெயமோகன்
எழுதுக – தன்னறம்
“எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக வாழ்வதைப்பற்றியும் குழப்பம் கொண்டிருக்கிறார்கள். எழுத்து ஓர் இலட்சியவாதம், எந்த இலட்சியவாதமும் அதற்குரிய ஐயங்களும் தயக்கங்களும் கொண்டது. எனக்கு அவ்வண்ணம் எழுதப்பட்ட கடிதங்களுக்கு நான் அளித்த பதில்கள், அவற்றினூடாக நிகழ்ந்த விவாதங்களின் தொகுதியே இக்கட்டுரைகள். இவற்றில் எழுத்திலும் வாசிப்பிலும் நுழைபவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பேசப்பட்டுள்ளன.” […]
தன்னறம்
₹180 -
ஜெயமோகன்
பொலிவதும் கலைவதும்
இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு, பிரிவு, கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது.வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320 -
ஜெயமோகன்
வெண்முகில் நகரம் – செம்பதிப்பு
இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். மகாபாரதப் பின்னணியைக் கொண்டு நான் எழுதிவரும் வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது படைப்பு இது. இந்திரப்பிரஸ்தம் உருவாவதற்கான பின்புலத்தை விரிந்த புனைவுவெளியாக இது காட்டுகிறது. இதன் மையம் பாஞ்சாலிதான். ஐந்து குலங்களின் கொழுந்து அவள். ஐவரும் அவளை மணந்து அறியும் ஐந்து முகங்களெனத் தொடங்கும் இந்நாவல் அவள் அஸ்தினபுரியின் அரசியென ஆகி இந்திரப்பிரஸ்தத்தை அமைக்க ஆணையிடும் இடம் வரை வருகிறது. மகாபாரதத்தின் மாபெரும் பூசலின் ஒவ்வொரு […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹2200 -
ஜெயமோகன்
அந்த முகில் இந்த முகில்…
இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல் கதை. இழந்தகாதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை. -ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹250 -
ஜெயமோகன்
விசும்பு – அறிவியல் புனைகதைகள்
‘திண்ணை ‘ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்திய தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்டவை. ஆர்வமூட்டும் வாசிப்புத்தளம் கொண்ட இக்கதைகள் ஜெயமோகனின் பிற கதைகள் போலவே வாழ்க்கையின் அடிப்படைகளை தத்துவ நோக்குடன் விசாரணை செய்பவையும் கூட.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹170 -
அறிவு – தன்னறம்
அறிவின் பொருளாக அறியப்பட்டிருக்கும் அந்த ஒன்று எது? ஒட்டுமொத்த நிகழ்வில் அறிவு ஒரே சமயத்தில் அறிபடுபொருளாகவும், அறிபவராகவும், அறிவாகவும் செயலாற்றுவது எங்ஙனம்? ‘அறிவு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலிலுள்ள பதினைந்து பாடல்களின் வழியாக நாராயண குரு, மெய்யியல் தத்துவத்தை அறிவுப்புலம் சார்ந்த நோக்கில் முன்வைக்கிறார். நாராயண குருவின் வழித்தோன்றலான குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்து உரையெழுதிய இந்த தனிச்சிறந்த ஆய்வியல் சிறுநூல், எழுத்தாளுமை எம். கோபாலகிருஷ்ணன் அவர்களால் தமிழில் செழுமையுற மொழிபெயர்க்கப்பட்டு, தன்னறம் நூல்வெளி […]
தன்னறம்
₹80 -
முனைவர் லோகமாதேவி
ஸாகே – போதையின் கதை – லோகமாதேவி
மெக்ஸிகோவின் நீலக்கற்றாழை வயல்களுக்கும் ஜப்பானின் அரிசி மது ஆலைகளுக்கும், கோவாவின் முந்திரிதோப்புகளுக்கும் அழைத்துச் செல்லும் அத்தியாயங்கள், குன்றிமணி என்னும் கொல்லும் அழகு, சாக்ரடீஸை கொன்ற தாவர நஞ்சு, இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் புல்லரிசிப்பூஞ்சை. தாடிக்குள் ஒளிந்து கொண்டு இந்தியாவுக்கு வந்த காபிக்கொட்டை என்று தாவர உலகின் பல ரகசியங்களை, பல புதிய தகவல்களை பேசும் நூல்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹500 -
அழகிய மணவாளன், பி.கே.பாலகிருஷ்ணன்
நாவலெனும் கலைநிகழ்வு – பி.கே.பாலகிருஷ்ணன்
பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுபதாண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஐரோப்பியப் பெருநாவல்களைப் பற்றிய ரசனையும் ஆய்வும் கொண்டவை இக்கட்டுரைகள். அந்நாவல்களின் உள்ளடக்கம் என்ன என்று பாலகிருஷ்ணன் ஆராயவில்லை. மாறாக அவை எப்படி வாழ்க்கையில் இருந்து கலையை உருவாக்குகின்றன என்று ஆராய்கிறார். ஆகவேதான் பல இலக்கிய விமர்சன அலைகள் வந்து சென்றபிறகும் தொடர்ந்து பயிலப்படும் ஒரு மூலநூலாக இது உள்ளது. சிறந்த இலக்கியப்படைப்புகளுக்கு நிகரான வாசிப்புத்தன்மையை அளிக்கும் நூல் இது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360