Books
Showing 73–84 of 236 results
-
ஜெயமோகன்
உரையாடும் காந்தி – தன்னறம்
முகமது நபியை பற்றியான ஒரு கேலிச்சித்திரத்தை டென்மார்க் பத்திரிகை வெளியிட்ட உடனேயே, உலகம் முழுவதிலுமிருக்கும் இஸ்லாமிய தரப்புகளிடமிருந்து வலுவான எதிர்வினைகள் கிளம்பியது. அதேபோல், காந்தியைப்பற்றி ஓர் அமெரிக்க நூலாசிரியர் எழுதிய கீழ்த்தரமான அவதூறுநூல் பற்றி இணையப்பேச்சில் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் இஸ்லாமிய நண்பர் சொன்னார், “இப்போது புரிகிறதா, முகமது நபியைப் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு ஏன் அப்படி எதிர்வினையாற்றினோம் என்று? இந்த அமெரிக்க அற்பர்களுக்கு நாங்கள் சொல்லும் மொழி மட்டும்தான் புரியும். ஜனநாயகம், கருத்துரிமை என்ற பேரில் அவர்கள் செய்வதெல்லாம் […]
தன்னறம்
₹300 -
ஜெயமோகன்
அனல் காற்று – நாவல்
பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக நான் எழுதிய கதை இது. ஒரு குறுநாவல். இதை அவர் திரைக்கதை அமைப்பதாக இருந்தது. அந்த தயாரிப்பாளர் பங்குச்சந்தை வீழ்ச்சியில் காணாமல் போனதனால் திட்டம் கைவிடப்பட்டது. அவர் வேறு கதைக்குச் சென்றுவிட்டார். முற்றிலும் சொற்சித்திரமாக உள்ள இந்த உணர்ச்சிகரமான கதைக்கு அவர் எப்படி காட்சி வடிவம் அளித்து திரைக்கதை அமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அது நிகழவே இல்லை என்பதில் வருத்தம் என்றாலும் எது நிகழ்கிறதோ அதுவே அது என்று […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹260 -
ஜெயமோகன்
வணிக இலக்கியம்
இலக்கியம் வணிகஎழுத்து இரண்டுக்குமான வேறுபாட்டை அறிந்துகொள்வது இலக்கிய வாசிப்புக்கு இன்றியமையாதது. அத்தகைய வேறுபாட்டை வகுத்துக் கொள்ளாத ஒருவர் இலக்கியப்படைப்பை அறியவே இயலாது. அவர் வணிக எழுத்துக்கான பொதுவான வாசிப்பை இலக்கியத்தின்மேல் போடுவார். அது விழிகளை மூடிவிட்டு ஓவியத்தை தடவிப்பார்த்து அறிய முயல்வது போல. இந்நூல் இலக்கியம் என்றால் என்ன என்று வரையறுக்கிறது. வணிக எழுத்தை திட்டவட்டமாக அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இலக்கியவாசகர்கள் எவருக்கும் இன்றியமையாத புரிதலை அளிக்கிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹130 -
ஜெயமோகன்
நூறு நாற்காலிகள்
”இது நம் கண்முன்னால் நிகழ்ந்த வாழ்க்கை
நம் காலடியில் ஏங்கெங்கோ இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை.”
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹50 -
யுவன் சந்திரசேகர்
பெயரற்ற யாத்ரீகன்
ஜென் கவிதைகள், இறகின் மிருதுவும் எடையற்ற தன்மையும் கொண்டவை. நிகழும் போது பிடிக்க முடிந்தால் மட்டுமே பொருள் கொள்பவை. ஆகக் குறைந்த சொற்களில் இதை நிகழ்த்திக் காட்ட இயல்கிறது என்பது, ஜென் மார்க்கம் செய்யும் மாயம் என்றே சொல்வேன். மொழியின் தாழ்வாரம் எத்தனை அகலமானது; ஆனாலும் சூட்சுமமானது என்பதையும் ஜென் கவிதைகள் அறியத் தருகின்றன. இவற்றைப் பற்றுவதற்கு, உணர்வின் ஒரு துளி மட்டுமே போதுமானது. தீவிரமான அல்லது தொடர்ந்த சிந்தனை இக்கவிதைகளை இன்னும் தொலைவுக்கு நகர்த்திவிட வாய்ப்புண்டு. சொல்லப்போனால், எந்த மொழியிலும், எந்தக் காலகட்டத்திலும் கவிதையின் ஆதார குணம் என்று இதைச் சொல்லலாம்.
– முன்னுரையிலிருந்து
நூல் வனம்
₹330 -
ஜெயமோகன்
வெள்ளை யானை
பஞ்சம் ஓர் உச்சநிலை. மானுடத்தின் சாரம் வெளிப்படும் தருணங்களால் ஆனது. கொடுமையும் கருணையும், தன்னலமும் அறமும் ஒரே சமயம் தங்களை காட்டுகின்றன. இந்நாவல் பேசுவது அந்த தருணங்களையே. இந்நாவல் அமெரிக்கா பென் அமைப்பு நடத்திய உலகளாவிய நாவல் மொழியாக்கப் போட்டியில், அதில் பங்கேற்ற முந்நூறுக்கும் மேற்பட்ட நாவல்களில், மொழியாக்க பரிசுத்தொகை பெறுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் கவனத்திற்குச் செல்லவிருக்கிறது
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹600 -
ஜெயமோகன்
கொற்றவை
கொற்றவை தமிழில் எழுதப்பட்ட நாவல், ஆனால் ஒரு காவியத்தின் வடிவமைப்பும் மொழிநடையும் கொண்டது. இளங்கோ கண்ணகியை ’வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்று கூறுகிறார்.ஆனால் கண்ணகி மதுரையை அடைந்தபோது ‘மாமயிடன் செற்றிகந்த கொற்றத்தாள்’ என்று விதந்து பாடுகிறார். கால் மண்ணை அறியாமல் வாழ்ந்தவள் எப்படி மகிடனை பலிகொண்ட கொற்றவையாக ஆனாள்? அந்த வளர்ச்சியை ஐவகை நிலங்களின் வாழ்க்கை வழியாக, சங்கம் மருவிய காலகட்டத்தின் வரலாற்றின் வழியாக பேரோவியமாக தீட்டிக்காட்டும் நாவல் இது. இதன் கதை தமிழும் தோன்றாத, தெய்வங்களும் தோன்றாத தொல்பழங்காலத்தில் தொடங்கி இன்றையகாலம் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹900 -
விஷால் ராஜா
திருவருட்செல்வி – விஷால் ராஜா
விஷால் ராஜாவின் கதைகளை, தீர்க்கவே முடியாத கலவர முனைகளின் சந்திப்பு என்று வகுக்கலாம். குழந்தைகள் தங்கள் குழந்தைமையை ஒரு மூலையில் தக்கவைத்துக் கொண்டே பெரியவர்கள் ஆகும் கதைகள் இவை. அந்தத் திருப்பத்தில் நிகழும் தவிர்க்கவே முடியாத வேதனையையும் உருமாற்றத்தையும் இவை வலுவாக வெளிப்படுத்துகின்றன. நமது நிகழ்காலம், நாம் ஒட்டுமொத்தமாக வந்து சேர்ந்திருக்கும் இடம் மற்றும் இருப்பு ஆகியவை மீதான கூர்மையான விழிப்பையும் விமர்சனத்தையும் இந்நூலில் பார்க்கும்போது புதுமைப்பித்தன் நமக்கு அளித்துப்போன நவீனமானதொரு லட்சியம் முழுமையாக நீர்த்துவிடவில்லை என்ற […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹280 -
ஆனந்த் ஸ்ரீனிவாசன், ஹெச். எஸ். சிவபிரகாஷ்
குரு – பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்
எனக்கு ஏன் குரு தேவையாகிறார்? நான் ஏன் தியானம் பழகவேண்டும்? மந்திரங்களினால் என்ன பயன்? ஆன்மீகப் பயிற்ச்சியில் சுவாசம் ஏன் முக்கியமாகிறது? ஆன்மீகப் பாதையில் பாலியலின் இடம் என்ன? அமைதியற்ற மனதை என்ன செய்ய? தன்னையும் உலகையும் புருந்து கொள்வதற்கான இத்தகைய அடிப்படைக் கேள்விகளை ஆராய்கிறது குரு. வாயில்கள் எனும் உருவகம் மூலமாக, வாசகர் வெவ்வேறு ‘அறை’களுக்குள் வரவேற்கப்படுகிறார். ஒவ்வொரு அறையிலுமுள்ள ஆன்மீக மெய்மைகளை ஆராயவும் உணரவும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இறுதியில், இந்த ஆன்மீகக் கருத்துகள் எவ்வாறு […]
நற்றிணை பதிப்பகம்
₹130 -
ஜெயமோகன்
யதி : தத்துவத்தில் கனிதல்
தன்னறம்
₹500 -
ஜெயமோகன்
ரப்பர் – விஷ்ணுபுரம் பதிப்பகம்
ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது. அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையில் இந்நாவல். ஆற்றின் குறுக்காக காரைக் கொண்டுசெல்லும்போது கூச்சலிடும் குழந்தைகளின் குதூகலம் கண்டு அவன் மலரும் கணம். இந்நாவலுக்கு உந்துதலாக இருந்ததே நான் என் இளமையில் மாறப்பாடி ஆற்றின் குறுக்காகச் சென்ற சாலையில் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹290 -
ஜெயமோகன்
பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும்
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள் பலரும் பேய்க் கதைகளை எழுதியுள்ளனர்.எப்போதுமே மனித மனங்களின் உச்சங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவன், எழுத முனைபவன் என்ற வகையில் நான் ஏற்கெனவே தொடர்ந்து பேய்க் கதைகளை எழுதி வந்துள்ளேன். அவற்றின் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹250