வெண்முரசு
Showing 1–12 of 14 results
-
ஜெயமோகன்
நீர்ச்சுடர் – செம்பதிப்பு
வெண்முரசு நாவல் வரிசையின் 23-வது நாவலான நீர்ச்சுடர் விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக முன்பதிவுத்திட்டத்தில் வெளிவர உள்ளது. 648 பக்கங்கள் கொண்ட இந்நாவலின் விலை ரூ.900/-. முன்பதிவு செய்தவர்களுக்கு ஜுன் 2-ம் வாரம் முதல் அனுப்பிவைக்கப்படும். இந்நாவலில் வண்ண ஓவியங்கள் இடம்பெறவில்லை.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹900 -
ஜெயமோகன்
களிற்றியானை நிரை – செம்பதிப்பு
இந்நாவல் அஸ்தினபுரி மீண்டெழுவதைப் பற்றிய நாவல். ஹஸ்தியின் நகர். யானைகளின் நகர். யானைகளால் கட்டப்பட்டது, யானைகளையே கோட்டை எனக்கொண்டது.நாழிகைமணி போல நேர்த்தலைகீழாகக் கவிழ்ந்து தன்னை முற்றாகக் கொட்டிக்கொண்டு ஒழிந்து மீண்டும் நிரப்பிக்கொள்கிறது அம்மாநகர். புதியமக்கள், புதிய மொழி, புதிய எண்ணங்கள்.
எரியுண்ட காடு ஒரு மழைக்குப்பின் புதிதென மீண்டெழுவதுபோல அஸ்தினபுரி மீள்கிறது.அது அப்போரில் இருந்து அடைந்தது எதை? எல்லா போருக்குப்பின்னரும் நாடுகள் புதுவீச்சுடன் எழுகின்றன. ஜப்பானோ ஜெர்மனியோ. அவை கற்றவை என்ன? காட்டுத்தீ காட்டிலுள்ள மட்கிய, உலர்ந்த அனைத்தையும் அழித்து காட்டை இளமையாக ஆக்கிவிடுகிறது. தன்னால் தன்மேல் எடையென அமைந்திருந்தவற்றை அஸ்தினபுரி அப்போர்வழியாக உதிர்த்துவிட்டதா?எந்த அழிவுக்குப்பின்னரும் மீளமீள தன்னைக் கட்டிக்கொள்ளும் ஆற்றலை மானுடம் எங்கிருந்து பெற்றுக்கொள்கிறது? அந்த அடிப்படையான உயிர்விசைதான் அனைத்து அறங்களையும் எடைபோட்டு மதிப்பிட்டுக்கொள்கிறதா? போருக்கு பிந்தைய அனைத்தையும் ஒரே வீச்சுடன் தொகுத்துக்கொள்ளும் இந்நாவல் அந்த உசாவல்களை முன்வைக்கிறது
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1200 -
ஜெயமோகன்
முதற்கனல் – செம்பதிப்பு
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம். ஆனால் அது அநீதியா என்பது மிகமிகச் சிக்கலான வினா. அது மகத்தான அறச்சிக்கலின் தருணம் என்று மட்டுமே சொல்லமுடியும். ஆகவேதான் மகாபாரதம் முடிவடையாத அறப்புதிர்களின் களமாக இன்றும் உள்ளது. அதில் நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை. மாமனிதர்களின் மகத்தான இக்கட்டுகளே உள்ளன.
அந்த களத்தைத் தொடங்கிவைக்கும் நாவல் இது. மகாபாரதம் இந்தியப்பண்பாட்டின் ஒட்டுமொத்த ஞானமும் ஒரே நூலில் திரண்டிருப்பது. ஆகவேதான் அது ஐந்தாம் வேதம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் அந்த ஞானக்களஞ்சியத்திற்குள் செல்லும் தோரணவாயில். வடிவ அளவில் இது ஒரு முழுமையான தனிப்படைப்பு. இதன் மொழியும் கட்டமைப்பும் இதற்குள்ளேயே நி¬றவை அடைகின்றன. ஆனால் வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை ஜெயமோகன் விரிவாக எழுதிவரும் நாவல்தொடரின் தொடக்கநாவலும்கூட.விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1500 -
ஜெயமோகன்
நீலம் – செம்பதிப்பு
வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச் சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றெடுக்கும் கிருஷ்ணனின் கதை. கம்சனும் ராதை […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1000 -
ஜெயமோகன்
மழைப்பாடல் – செம்பதிப்பு
மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடியே இருக்கும் புல்வெளியான யாதவ நாடு. காந்தாரியும் குந்தியும் இரு முனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்திரிக்கிறது. அவர்களுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள். அன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைத்தான் பின்னர் மைந்தர் சமர்க்களத்தில் நிகழ்த்தினர் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹2000 -
ஜெயமோகன்
வண்ணக்கடல் – செம்பதிப்பு
வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவது போல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் செல்கின்றன. இந்தப் பெருநாடகத்தின் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலவ்யன். நால்வருமே அவர்களை மீறிய வாழ்க்கையின் விசைகளால் பழிவாங்கப் பட்டவர்கள். அந்த ஆறா ரணத்தை ஆன்மாவில் ஏந்திய வர்கள். அவ்வகையில் இந்நாவல் ஒன்றோடொன்று […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1700 -
ஜெயமோகன்
பிரயாகை – செம்பதிப்பு
ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் பெறுகிறார்கள்.தமிழின் சாதனை என்று சொல்லத்தக்க இந்நூலை வாங்கி வாசிப்பதன்மூலம் பண்டைய இந்தியாவின் வரலாற்றையும் அதன் பண்பாட்டு நீட்சிகளையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.ஒவ்வொரு நாவலும் தனிப்பட்ட அளவிலும் முழுமைகொண்ட நாவலாகப் பரிமளிப்பது இதன் சிறப்பு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹2200 -
ஜெயமோகன்
வெண்முகில் நகரம் – செம்பதிப்பு
இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். மகாபாரதப் பின்னணியைக் கொண்டு நான் எழுதிவரும் வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது படைப்பு இது. இந்திரப்பிரஸ்தம் உருவாவதற்கான பின்புலத்தை விரிந்த புனைவுவெளியாக இது காட்டுகிறது. இதன் மையம் பாஞ்சாலிதான். ஐந்து குலங்களின் கொழுந்து அவள். ஐவரும் அவளை மணந்து அறியும் ஐந்து முகங்களெனத் தொடங்கும் இந்நாவல் அவள் அஸ்தினபுரியின் அரசியென ஆகி இந்திரப்பிரஸ்தத்தை அமைக்க ஆணையிடும் இடம் வரை வருகிறது. மகாபாரதத்தின் மாபெரும் பூசலின் ஒவ்வொரு […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹2200 -
ஜெயமோகன்
இமைக்கணம் – செம்பதிப்பு
மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை, கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதே வெண்முரசின் தரிசனம். அனைத்து மக்களுக்கும் தங்களுக்கான வேதங்கள் உள்ளன. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது நால்வேதம். நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமே நாராயண வேதம். அதாவது கீதை. கீதையின் பீடமே மகாபாரதம். அதன் முன்னோடி நூல்கள் உபநிடதங்களும், கீதையிலேயே குறிப்பிடப்படும் பிரம்மசூத்திரமும். வேதங்களுக்கும் வேதாந்தத்திற்குமான முரண்பாடு அல்லது முரணியக்கம் கீதையிலேயே சொல்லப்பட்ட ஒன்று. அதையே வெண்முரசு மொத்த மகாபாரதமாக விரித்துக்கொள்கிறது. ஆகவே வெண்முரசில் கீதை களத்தில் நிகழவில்லை. அது […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹900 -
ஜெயமோகன்
நீர்க்கோலம் – செம்பதிப்பு – கிழக்கு பதிப்பகம்
ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒப்பீடுகள் , இடைவெட்டுகள் வழியாக உச்சங்களை அடைகிறது.
அத்துடன் இது உருமாற்றத்தின் கதை. ஒவ்வொருவரும் பிறிதொருவராகிறார்கள். ஊழால் உருமாற்றம் அடைகிறார்கள். ஆழ்மனத்தில், கனவில் உருமாற்றம் அடைகிறார்கள். ஒளிந்துகொள்ள மாற்றுருக் கொள்கிறார்கள். நிகழ்ந்தவை கதையெனச் சொல்லப்படும்போது மாற்றமடைகின்றன. உருமாற்றம் என்பதனூடாக உருவமென உடலைச் சூடி நின்றிருக்கும் ஒன்றைப்பற்றிய ஆய்வென இந்நாவல் விரிகிறது.கிழக்கு பதிப்பகம்
₹1300 -
ஜெயமோகன்
முதலாவிண் – செம்பதிப்பு
முதலாவிண் என்றுமுள்ள விண் என்று பொருள்படுகிறது. இது பாண்டவர்களின் விண்புகுதலுடன் நிறைவுறும் நாவல். வெண்முரசு நாவல்நிரையின் இறுதிப்படைப்பு. இதுவரை பேசப்பட்டவை அனைத்தும் இந்நாவலில் கவிதையாலும் மெய்யறிவாலும் தொகுக்கப்படுகின்றன.ஒரு பேரிசை ஓய்ந்த பின் உருவாகும் அமைதியின் அடர்த்தி கொண்ட படைப்பு இது. ‘ சொற்களின் அழிவின்மையை அதன் ஆசிரியன் கண்டுகொண்ட கணம் இந்நாவலில் உள்ளது’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400 -
ஜெயமோகன்
சொல்வளர்காடு – செம்பதிப்பு கிழக்கு பதிப்பகம்
மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது.. அனேகமாக அத்தனை கதைகளுமே கூறுமுறையில் வளர்ச்சியும் மாற்றமும் அடைந்தவை. நவீன கதைசொல்லல் முறைப்படி மீள்வடிவு கொண்டவை. அக்கதைகள் உருவாக்கும் இடைவெளிகளை, அக்கதைகளின் இணைவுகள் உருவாக்கும் இடைவெளிகளைத் தன் கற்பனையாலும் எண்ணத்தாலும் வாசகன நிரப்பிக் கொள்ளவேண்டும் எனக் கோருகிறது இந்நாவல். ஒன்றின் இடைவெளியில் இருந்து பிறிதொன்றைக் கண்டடைந்து நீளும் இதன் பாதை இந்திய மெய்ஞான மரபின் வளர்ச்சியின் தோற்றமும் கூட. ஆனால் தத்துவத்தை படிமங்கள் வழியாகவே இலக்கியம் பேசுகிறது. அந்த விவாதத்தை முழுமை செய்ய வாசகனின் பங்களிப்பைக் கோருகிறது.
வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.கிழக்கு பதிப்பகம்
₹1200