அபுனைவு
Showing 13–24 of 66 results
-
ஜெயமோகன்
ஆலயம் எவருடையது?
ஆலயங்கள் எவருடையவை என்னும் விவாதம் இன்று எழுந்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் அவை இருக்கவேண்டுமா? பக்தர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா? பக்தர்கள் என்பவர்கள் எவர்? பக்தர்கள் ஆலயங்களை வெறும் வழிபாட்டிடங்களாக எண்ணுவது சரியா? வழிபாட்டின் பொருட்டு அவற்றை மாற்றியமைக்க அவர்களுக்கு உரிமை உண்டா? நம் பேராலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் மட்டும்தானா? அவை பண்பாட்டு அடையாளங்களும் சரித்திரச் சின்னங்களும் இல்லையா? ஆலயங்களில் எந்த மாற்றத்தையும் செய்யலாகாதா? பழமையிலேயே நின்றுவிடவேண்டுமா? செய்யவேண்டுமென்றால் எவர் செய்யலாம்? இக்கேள்விகளுக்கான பதில்கள் அடங்கியது இந்நூல்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹150 -
ஜெயமோகன்
எழுதுக – தன்னறம்
“எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக வாழ்வதைப்பற்றியும் குழப்பம் கொண்டிருக்கிறார்கள். எழுத்து ஓர் இலட்சியவாதம், எந்த இலட்சியவாதமும் அதற்குரிய ஐயங்களும் தயக்கங்களும் கொண்டது. எனக்கு அவ்வண்ணம் எழுதப்பட்ட கடிதங்களுக்கு நான் அளித்த பதில்கள், அவற்றினூடாக நிகழ்ந்த விவாதங்களின் தொகுதியே இக்கட்டுரைகள். இவற்றில் எழுத்திலும் வாசிப்பிலும் நுழைபவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பேசப்பட்டுள்ளன.” […]
தன்னறம்
₹180 -
அறிவு – தன்னறம்
அறிவின் பொருளாக அறியப்பட்டிருக்கும் அந்த ஒன்று எது? ஒட்டுமொத்த நிகழ்வில் அறிவு ஒரே சமயத்தில் அறிபடுபொருளாகவும், அறிபவராகவும், அறிவாகவும் செயலாற்றுவது எங்ஙனம்? ‘அறிவு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலிலுள்ள பதினைந்து பாடல்களின் வழியாக நாராயண குரு, மெய்யியல் தத்துவத்தை அறிவுப்புலம் சார்ந்த நோக்கில் முன்வைக்கிறார். நாராயண குருவின் வழித்தோன்றலான குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்து உரையெழுதிய இந்த தனிச்சிறந்த ஆய்வியல் சிறுநூல், எழுத்தாளுமை எம். கோபாலகிருஷ்ணன் அவர்களால் தமிழில் செழுமையுற மொழிபெயர்க்கப்பட்டு, தன்னறம் நூல்வெளி […]
தன்னறம்
₹80 -
முனைவர் லோகமாதேவி
ஸாகே – போதையின் கதை – லோகமாதேவி
மெக்ஸிகோவின் நீலக்கற்றாழை வயல்களுக்கும் ஜப்பானின் அரிசி மது ஆலைகளுக்கும், கோவாவின் முந்திரிதோப்புகளுக்கும் அழைத்துச் செல்லும் அத்தியாயங்கள், குன்றிமணி என்னும் கொல்லும் அழகு, சாக்ரடீஸை கொன்ற தாவர நஞ்சு, இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் புல்லரிசிப்பூஞ்சை. தாடிக்குள் ஒளிந்து கொண்டு இந்தியாவுக்கு வந்த காபிக்கொட்டை என்று தாவர உலகின் பல ரகசியங்களை, பல புதிய தகவல்களை பேசும் நூல்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹500 -
அழகிய மணவாளன், பி.கே.பாலகிருஷ்ணன்
நாவலெனும் கலைநிகழ்வு – பி.கே.பாலகிருஷ்ணன்
பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுபதாண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஐரோப்பியப் பெருநாவல்களைப் பற்றிய ரசனையும் ஆய்வும் கொண்டவை இக்கட்டுரைகள். அந்நாவல்களின் உள்ளடக்கம் என்ன என்று பாலகிருஷ்ணன் ஆராயவில்லை. மாறாக அவை எப்படி வாழ்க்கையில் இருந்து கலையை உருவாக்குகின்றன என்று ஆராய்கிறார். ஆகவேதான் பல இலக்கிய விமர்சன அலைகள் வந்து சென்றபிறகும் தொடர்ந்து பயிலப்படும் ஒரு மூலநூலாக இது உள்ளது. சிறந்த இலக்கியப்படைப்புகளுக்கு நிகரான வாசிப்புத்தன்மையை அளிக்கும் நூல் இது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360 -
ஜெயமோகன்
நலமறிதல் – தன்னறம்
நோய் என்பது உடலின் ஓர் இயல்பான நிலை என்பதனால் பொறுமையுடன் நோயை அனுபவித்து அதைக் குணப்படுத்திக்கொள்ள உடலுக்கு அவகாசம் அளிப்பதே சிறந்தது என்பது இயற்கை உணவுக் கோட்பாடு. மருந்து உண்ணலாம். ஆனால் அம்மருந்தும் உணவாகவே இருக்க வேண்டும். உணவல்லாத எதையுமே உண்ணலாகாது. உணவே பெரும்பாலும் மனநிலைகளை உருவாக்குகிறது என்பது இயற்கை உணவுக் கோட்பாட்டின் கொள்கை. நல்ல உணவு அமைதியை அளிக்கும். நல்ல சிந்தனைகளை அளிக்கும். மிதமிஞ்சிய புலன் நாட்டத்தை அளிக்காது. ஆகவே பதற் மும் வேகமும் உற்சாகமும் […]
தன்னறம்
₹200 -
ஜெயமோகன்
நத்தையின் பாதை
இலக்கியம் விந்தையானதொரு கலை. முதன்மையாக கலையென நிலைகொள்கிறது. எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை. ஆனால் இலக்கியமென்னும் கலை அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட. ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது. ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது. பிற கலைகளைப்போல் அன்றி நேரடியாகவே சமூக உருவாக்கத்தில், அரசியலில் பங்கெடுக்க முடிகிறது. அந்த ஊடாட்டத்தின் சில புள்ளிகளை இக்கட்டுரைகள் தொட்டுப் பேசுகின்றன. பெரும்பாலும் சிந்தனைக்குரிய சில திறப்புகளை உருவாக்குவதை, […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹100 -
ஜெயமோகன், முனைவர் வி.ஆர்.சந்திரன்
கொடுங்கோளூர் கண்ணகி
தமிழ் ஆய்வாளர் கணக்கில் கொள்ளவேண்டிய குறிப்பான தளம் கேரள நாட்டார் பழங்குடி மரபாகும். கேரளப்பழங்குடி வாழ்க்கையில் உள்ள சங்ககால வாழ்க்கைக்கூறுகள் வியப்பூட்டுபவை. வேலன் வெறியாட்டம் இன்றும் நடக்கிறது. வேலன் என்னும் சாதி இப்போதும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? காளியூட்டும் பெருங்களியாட்டமும் போன்ற நூறு நூறு சடங்குகள் தமிழ் வாழ்வின் அறியாத பக்கங்களைப்பற்றிய பலவிதமான தெளிவை நமக்கு அளிப்பவை. முனைவர் விஷ்ணு நம்பூதிரி தொகுத்த ’கேரள ஃபோக்லோர் நிகண்டு’ என்ற கலைக்களஞ்சியம் அளவுக்கு சங்க காலத்தமிழ் வாழ்க்கையைப்பற்றிய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210 -
ஜெயமோகன்
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது. இந்நூலின் முதல் பகுதி, எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் உருவாகும்போது ஏற்படும் ஐயங்-களைப்பற்றிப் பேசுகிறது. விளக்கங்களை அளிக்கிறது. ஒரு நூலை எப்படி வாசிப்பது என்று கற்பிக்கிறது. இரண்டாம் பகுதி, நவீனத் தமிழிலக்கிய வரலாறை அறிமுகப்படுத்துகிறது. மூன்றாம் பகுதி, நவீனத் தமிழிலக்கியத்தை வாசிப்பதற்கான விரிவான […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹500 -
ஜெயமோகன்
கண்ணீரைப் பின்தொடர்தல்
இந்நூல் இந்தியாவின் வெவ்வேறு மொழிகளிலிருந்து இருபது நாவலாசிரியர்களின் படைப்புகளை முன்வைக்கிறது. அவற்றைப்பற்றிய ரசனைக்கட்டுரை என்று இவற்றை சொல்லலாம். அவை ஏன் மகத்தான நாவல்களாக இருக்கின்றன என்பதையே இக்கட்டுரைகள் ஆராய்கின்றன. எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்குப்பிறகு இக்கட்டுரைகள் அண்மையில் கனலி இணையதளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. மீண்டும் அடுத்தடுத்த தலைமுறையால் இவை படிக்கப்படுகின்றன என்பதே இக்கட்டுரைகளின் தேவைக்கும் தரத்திற்கும் சுவாரசியத்திற்கும் சான்று என்று நினைக்கிறேன். இவை படைப்பாளி, படைப்பு, அது உருவான களம் ஆகிய மூன்றையும் ஒரே பார்வையில் பார்க்கும் தன்மை […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320 -
ஜெயமோகன்
உரையாடும் காந்தி – தன்னறம்
முகமது நபியை பற்றியான ஒரு கேலிச்சித்திரத்தை டென்மார்க் பத்திரிகை வெளியிட்ட உடனேயே, உலகம் முழுவதிலுமிருக்கும் இஸ்லாமிய தரப்புகளிடமிருந்து வலுவான எதிர்வினைகள் கிளம்பியது. அதேபோல், காந்தியைப்பற்றி ஓர் அமெரிக்க நூலாசிரியர் எழுதிய கீழ்த்தரமான அவதூறுநூல் பற்றி இணையப்பேச்சில் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் இஸ்லாமிய நண்பர் சொன்னார், “இப்போது புரிகிறதா, முகமது நபியைப் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு ஏன் அப்படி எதிர்வினையாற்றினோம் என்று? இந்த அமெரிக்க அற்பர்களுக்கு நாங்கள் சொல்லும் மொழி மட்டும்தான் புரியும். ஜனநாயகம், கருத்துரிமை என்ற பேரில் அவர்கள் செய்வதெல்லாம் […]
தன்னறம்
₹300 -
ஜெயமோகன்
வணிக இலக்கியம்
இலக்கியம் வணிகஎழுத்து இரண்டுக்குமான வேறுபாட்டை அறிந்துகொள்வது இலக்கிய வாசிப்புக்கு இன்றியமையாதது. அத்தகைய வேறுபாட்டை வகுத்துக் கொள்ளாத ஒருவர் இலக்கியப்படைப்பை அறியவே இயலாது. அவர் வணிக எழுத்துக்கான பொதுவான வாசிப்பை இலக்கியத்தின்மேல் போடுவார். அது விழிகளை மூடிவிட்டு ஓவியத்தை தடவிப்பார்த்து அறிய முயல்வது போல. இந்நூல் இலக்கியம் என்றால் என்ன என்று வரையறுக்கிறது. வணிக எழுத்தை திட்டவட்டமாக அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இலக்கியவாசகர்கள் எவருக்கும் இன்றியமையாத புரிதலை அளிக்கிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹130