அபுனைவு
Showing 61–66 of 66 results
-
ஜா.ராஜகோபாலன்
ஆட்டத்தின் ஐந்து விதிகள்
இந்நூல் கையாளவிருப்பது பேருருவம் கொண்ட நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர் என்னும் கூட்டு ஆளுமையை, அல்லது ஒரு குட்டிச் சமூகத்தை. சமூகம், பண்பாடு என நாம் சொல்லும் இந்தப் பேரமைப்பின் இன்னொரு வடிவம்தான் இது. அதன் அத்தனை சிக்கல்களையும் ஒரு விற்பனையாளன் கையாள முடியுமா என்ன? இது அந்தப் பேருருவனை அவன் பொருளை வாங்கும் கணத்தில் மட்டும் நிறுத்தி அங்கே அவன் வெளிப்படுவதை மட்டும் கொண்டு வரையறை செய்கிறது. அங்கே அவனைக் கையாள்வதைப் பற்றிப் பேசுகிறது. நம் கூடாரத்திற்குள் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹140 -
யுவன் சந்திரசேகர்
நிலவைச்சுட்டும் விரல் – யுவன் சந்திரசேகர்
இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும் மனத்தின் பறத்தலுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டவை. கவிதையை வாசிக்கும்போதோ, வாசித்த கவிதைகளைப் பற்றி யோசிக்கும்போதோ, நினைவுக்கு வந்த அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் கோத்துத் தருபவை. அனைத்துக் கட்டுரைகளுமே கவிதை பற்றிப் பேசுபவை; கவிதையியல் பற்றியவை அல்ல. எனக்கு நானே பேசிக்கொண்டதைக் கோத்து வைத்திருக்கிறேன். மற்றபடி, கவிதையுடனான சகவாசம், எந்த அளவிலுமே கிளர்ச்சி தரக்கூடியது. காலச்சுவடு இதழில் தொடர் பத்தியாக வெளியான கட்டுரைகளுடன் புதிதாகஎழுதப்பட்டவையும் சேர்ந்தது இந்தத் தொகுப்பு. யுவன் சந்திரசேகர்
காலச்சுவடு
₹270 -
ராய் மாக்ஸம்
உப்புவேலி
2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி. இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது அவ்வேலி. மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானங்களுள் ஒன்று. சொல்லப்போனால், உலகிலேயே மிகப்பெரிய உயிர்வேலி அது.
தன்னறம்
₹440 -
செல்வேந்திரன்
நகுமோ லேய் பயலே
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹135 -
ஜெயமோகன்
அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்
சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்.
கிழக்கு பதிப்பகம்
₹155 -
சு. வேணுகோபால்
கவிதைத் திறனாய்வு வரலாறு
தமிழினி
₹550