அழிசி
Showing all 2 results
-
ஆனந்த குமாரசுவாமி (Anandha Kumaraswamy)
இந்தியக் கலையின் நோக்கங்கள்
ஆனந்த குமாரசுவாமி இந்தியர்கள் தங்கள் ஆன்மிக, அழகியல் மற்றும் கலை மாண்பு குறித்து விழிப்படைய வைக்க முயன்றார். இது மிக நுட்பமான, ஆனால் இன்றும் முடிவடையாத பணி. ஒருவகையில் ஆனந்த குமாரசுவாமி விட்ட இடத்திலிருந்து தாகூர் தொடங்குகிறார் எனச் சொல்லலாம். எனினும் தாகூர் அவ்வளவாக முன்னால் செல்லவில்லை. தாகூர் எழுத்தின்வழி மட்டுமே செயல்பட்டார். ஆனால், குமாரசுவாமி ஒரு முழுமையான எழுத்தாளருக்கும் மேலானவராக, பண்பாட்டு வரலாற்றாய்வாளராகவும் இருந்தார். தொல்நூல்கள் மற்றும் அழகியல் சார்ந்து மட்டுமல்லாமல், வரலாற்றின் பிற அம்சங்கள், […]
அழிசி
₹130 -
சியமந்தகம் குழுவினர், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
ஜெயமோகன் 60 – சியமந்தகம்
ஜெயமோகன் எனும் ஆளுமை, ஜெயமோகனின் படைப்புலகம் என மொத்த கட்டுரைகளையும் இரண்டு மையங்களில் தொகுக்கலாம். இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் இரண்டும் ஒன்றையொன்று நிரப்பும், தொடும் இடங்களையே இக்கட்டுரைகள் பொதுவாகப் பேசுகின்றன எனச் சொல்லலாம். ஜெயமோகனைத் தாண்டி இக்கட்டுரைகள் சிலவற்றில் நாம் ஒரு காலகட்டத்தின் இலக்கிய உலகைக் காணமுடியும். குற்றாலம் கவிதை முகாம், தருமபுரி சந்திப்பு, ஊட்டி சந்திப்புகள் என முனைப்புடன் திகழ்ந்த காலகட்டத்தை அறியமுடியும். தமிழ் மட்டுமின்றி மலையாள எழுத்தாளர்களான கல்பற்றா நாராயணன், பி. ராமன், தத்தன் புனலூர் மற்றும் கன்னட எழுத்தாளரான ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் ஆகியோரது கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இத்தனை எழுதிய, இத்தனை பயணித்த, இத்தனை செயல்பட்ட இன்னொரு தமிழ் எழுத்தாளர் இருந்ததில்லை. இத்தனை விரும்பப்பட்ட, வசைபாடப்பட்ட வேறு தமிழ் எழுத்தாளரும் உண்டா எனத் தெரியவில்லை. உலக அளவிலேயேகூட வெகுசிலர்தான் இருக்கக்கூடும். இத்தகைய பல பட்டைகள் கொண்ட அருமணியின் சில பட்டைகளை மட்டுமாவது ‘சியமந்தகம்’ தொகுதி காட்டிச்செல்கிறது என்றே நம்புகிறோம்.
அழிசி
₹900