சுனில் கிருஷ்ணன்
Showing all 4 results
-
சுனில் கிருஷ்ணன்
விஷக் கிணறு
அரிதினும் அரிதாக நிஜம் கற்பனையை எட்டிப் பிடித்து கடந்து முன் செல்லும். ‘வைரஸ்’ கதைகள் எழுதப்பட்டபோது அவை முற்றிலும் கற்பனையில் உதித்தவை. ஆனால் எழுதி முடித்து பதிவேற்றம் செய்யப்படும் குறுகிய காலக்கட்டத்திற்குள் அவை அன்றாடமாகிவிட்டன. கண் முன் ஒரு ஸ்டூடியோ உலகம் சுருள் அவிழ்ந்த காலகட்டம். உங்களிடம் ஒரே ஒரு உயிர்க்காக்கும் கருவி உள்ளது மூவரில் ஒருவருக்கு மட்டுமே அதைப் பொருத்த முடியும் எப்பேர்ப்பட்ட அறநெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டோம். தியாகங்களுக்கும் தேர்வுகளுக்கும் என்ன பொருள்? யார் உயிர் வாழ்வது என்பதை […]
யாவரும்
₹200 -
சுனில் கிருஷ்ணன்
மரணமின்மை எனும் மானுடக்கனவு
நலமான வாழ்வுக்கு வழிகாட்டும் எளிய யோசனைகள் கொண்ட மருத்துவப் புத்தகங்கள் ஏராளம். அவற்றை தொடாமல் ஆயுர்வேதத்தின் நடைமுறை சிக்கல்கள், பண்பாட்டு வேர்கள், வரலாற்றுப் பரிணாமங்களை தொட்டுப் பேசும் நூல்கள் தமிழில் அரிது. இந்நூல் அந்த இடைவெளியை நிரவும் சிறு முயற்சி.
யாவரும்
₹220 -
சுனில் கிருஷ்ணன்
சமகால சிறுகதைகளின் பரிணாமம்
என்னளவில் விமர்சகரின் வேலை என்பது எழுத்தாளரை திருத்தி நல்வழிப்படுத்துவதோ தீர்ப்புரைப்பதோ, அறிவுரை சொல்வதோ அல்ல. ஏனெனில் விமர்சகரால் கலைஞரை உருவாக்க முடியாது என்றே நம்புகிறேன். நல்ல விமர்சனம் புனைவெழுத்து அளவிற்கே கண்டடைதலின் களிப்பை அளிக்க வேண்டும். அதை வாசகருக்கு கடத்த வேண்டும். சிறுகதைகள் சார்ந்து எழுதப்பட்ட விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
யாவரும்
₹320 -
நரோபா
எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது
எழுத்தாளர் அ. பழுவேட்டையர் முழுநேர எழுத்தாளர். தாய் தந்தையருக்கு பிறந்தவர் மனைவியை மணந்து பிள்ளையை பெற்றவர் என்பதற்கப்பால் குடும்பத்தை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது? எழுத்தாளரின் சாதியைத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் என விரும்புவோர் நேரடியாக எழுத்தாளருக்கே ₹101 மணியார்டர் அனுப்பி கேட்டுக் கொள்ளலாம். இதுவரை மொத்தம் 330 சிறுகதைகளும், 33 நாவல்களும் 3300 கவிதைகளும் 330 விமர்சன கட்டுரைகளும் எழுதி வெளியிடாமலேயே வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார். தான் காலமான பிறகே அவை முழுதாக வெளிவரும் என்றும். […]
யாவரும்
₹150