சுஷில்குமார் பாரதி
Showing all 3 results
-
சுஷில் குமார்
அடியந்திரம்
சுஷில் குமாரின் கதைகள் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் மட்டும் வேரூன்றிய மாந்தர்களின் நம்பிக்கையை, பயத்தை, மீட்சியை, அலைகழிப்பை அவற்றின் இயல்பிலேயே சொல்லிப் போவதாகத் தோன்றலாம். சில சமயங்களில் அதீதங்களின் வெளிப்பாடாகவும் தெரியலாம். ஆனால் அவரது கதையுலகின் பாதாள நதியின் ஈரம் ஒரு பெரும் சமூகத்தின் வெவ்வேறு நிலங்களை நனைத்தபடியே செல்வதை கண்டடைய முடியும். கதவில்லா கூண்டை தேர்ந்தெடுக்கும் பறவையின் சுதந்திரத்தை கைக்கொள்ளும் அந்த ஈரமே சுஷில் குமாரின் கதைக்களமாகத் திகழ்கிறது.
யாவரும்
₹220 -
சுஷில் குமார்
மூங்கில்
“மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ எண்ணாம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி சுட்ட சொல்லு வெலக்கு தாயி சுட்ட சொல்லு வெலக்கு தாயி புத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமே நல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன் பச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன் கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ குழி நெறைய வள தாறேன், பிச்சிமால கெட்டித் தாறேன் கருமாரி முத்தாரம்மா பத்ரகாளி காட்டாளம்மா கொலச்சாமி […]
யாவரும்
₹200 -
சுஷில் குமார்
சப்தாவர்ணம்
“மக்ளே, செல விசயங்க நம்ம கைல இல்ல பாத்துக்கோ, அது தானா நடக்கும். அத அப்படியே விட்டுறணும். அது அப்படி இருந்தாத்தான் அழகு, அப்படிதான் நெலைக்கும் பாத்துக்கோ. இந்தக் கேசவனப் பாரு, அவன் கண்ணுல தெரிய கருணைய நா வரஞ்சிற முடியுமா? இல்ல, எவனாம் வரஞ்சிற முடியுமா சொல்லு. அவன் போய்ட்டாலும் நம்ம மேட்டுல ஒவ்வொரு தடவயும் உயிரோட எந்திச்சி வாராம்லா? அது நம்ம கைல இல்ல பாத்துக்கோ. பின்ன, நம்ம பௌதியம்மய வரையதெல்லாம் ஒரு கனவாக்கும். […]
யாவரும்
₹200