ஜெயமோகன்
Showing 1–12 of 111 results
-
ஜெயமோகன்
குமரித்துறைவி
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200 -
ஜெயமோகன்
மலர்த்துளி – 12 காதல் கதைகள்
இதுவரை ஜெயமோகன் தளத்தில் வெளிவராத காதல் கதைகளைக் கொண்ட தொகுப்பு இது. மலரினும் மெல்லிது என்று காதலைச் சொன்னார் மூதாதை. காதல் என்பது மானுட உள்ளங்கள் தொட்டுக்கொள்ளும் மிக நுட்பமான, மிகப்பூடகமான, மிகத்தற்செயலான ஒரு புள்ளி மட்டும்தான். அந்தப் புள்ளியை வெவ்வேறு வகையில் சொல்லிவிட முயன்றிருக்கும் கதைகள் இவை. அந்த புள்ளியில் இருக்கும் பாவனைகள், கரவுகள், கண்டடைதல்கள், பரவசங்கள். அதைச் சொல்லிவிடவே எல்லா புனைவு உத்திகளும் இவற்றில் கையாளப்பட்டுள்ளன.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹250 -
ஜெயமோகன்
நீர்ச்சுடர் – செம்பதிப்பு
வெண்முரசு நாவல் வரிசையின் 23-வது நாவலான நீர்ச்சுடர் விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக முன்பதிவுத்திட்டத்தில் வெளிவர உள்ளது. 648 பக்கங்கள் கொண்ட இந்நாவலின் விலை ரூ.900/-. முன்பதிவு செய்தவர்களுக்கு ஜுன் 2-ம் வாரம் முதல் அனுப்பிவைக்கப்படும். இந்நாவலில் வண்ண ஓவியங்கள் இடம்பெறவில்லை.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹900 -
ஜெயமோகன்
அறம் – உண்மை மனிதர்களின் கதைகள்
இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஒரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே பயணங்கள். சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதாரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹500 -
ஜெயமோகன்
களிற்றியானை நிரை – செம்பதிப்பு
இந்நாவல் அஸ்தினபுரி மீண்டெழுவதைப் பற்றிய நாவல். ஹஸ்தியின் நகர். யானைகளின் நகர். யானைகளால் கட்டப்பட்டது, யானைகளையே கோட்டை எனக்கொண்டது.நாழிகைமணி போல நேர்த்தலைகீழாகக் கவிழ்ந்து தன்னை முற்றாகக் கொட்டிக்கொண்டு ஒழிந்து மீண்டும் நிரப்பிக்கொள்கிறது அம்மாநகர். புதியமக்கள், புதிய மொழி, புதிய எண்ணங்கள்.
எரியுண்ட காடு ஒரு மழைக்குப்பின் புதிதென மீண்டெழுவதுபோல அஸ்தினபுரி மீள்கிறது.அது அப்போரில் இருந்து அடைந்தது எதை? எல்லா போருக்குப்பின்னரும் நாடுகள் புதுவீச்சுடன் எழுகின்றன. ஜப்பானோ ஜெர்மனியோ. அவை கற்றவை என்ன? காட்டுத்தீ காட்டிலுள்ள மட்கிய, உலர்ந்த அனைத்தையும் அழித்து காட்டை இளமையாக ஆக்கிவிடுகிறது. தன்னால் தன்மேல் எடையென அமைந்திருந்தவற்றை அஸ்தினபுரி அப்போர்வழியாக உதிர்த்துவிட்டதா?எந்த அழிவுக்குப்பின்னரும் மீளமீள தன்னைக் கட்டிக்கொள்ளும் ஆற்றலை மானுடம் எங்கிருந்து பெற்றுக்கொள்கிறது? அந்த அடிப்படையான உயிர்விசைதான் அனைத்து அறங்களையும் எடைபோட்டு மதிப்பிட்டுக்கொள்கிறதா? போருக்கு பிந்தைய அனைத்தையும் ஒரே வீச்சுடன் தொகுத்துக்கொள்ளும் இந்நாவல் அந்த உசாவல்களை முன்வைக்கிறது
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1200 -
ஜெயமோகன்
பத்து லட்சம் காலடிகள்
ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல. இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையின் அறியப்படாத ஒரு இடத்தைச் சென்று தொடுகின்றன. மானுடனை துப்பறியும் கதைகள் என்று இவற்றைச் சொல்லமுடியும்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
ஜெயமோகன்
இந்து மெய்மை
இன்றைய சூழலில் ஒருபக்கம் இந்துப் பண்பாடும் மெய்யியலும் காழ்ப்புடன் புறக்கணிக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் அதிகாரநோக்குடன் திரிக்கப்படுகின்றன. இரண்டுமே அழிவுச்சக்திகள் என்று சொல்லும் நிலைபாடு கொண்டவை இக்கட்டுரைகள். இந்துப் பண்பாடு என்பது நம் மரபு, நம் பண்பாட்டுசெல்வம், நம் ஆழுள்ளம் அமைந்திருக்கும் வெளி. அதன்மேல் காழ்ப்பை, விலக்கத்தை உருவாக்கிக் கொண்டால் நாம் ஆழமற்றவர்களாவோம். மேலோட்டமான அரசியலுக்கு அப்பால் செல்லமுடியாதவர்கள் ஆவோம் என இவை முன்வைக்கின்றன. நம் பண்பாட்டின் மேல் நாம் விலக்கம் கொண்டால் அப்பண்பாட்டின் ஆழத்தில் தங்கள் உள்ளங்களை […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210 -
ஜெயமோகன்
முதற்கனல் – செம்பதிப்பு
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம். ஆனால் அது அநீதியா என்பது மிகமிகச் சிக்கலான வினா. அது மகத்தான அறச்சிக்கலின் தருணம் என்று மட்டுமே சொல்லமுடியும். ஆகவேதான் மகாபாரதம் முடிவடையாத அறப்புதிர்களின் களமாக இன்றும் உள்ளது. அதில் நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை. மாமனிதர்களின் மகத்தான இக்கட்டுகளே உள்ளன.
அந்த களத்தைத் தொடங்கிவைக்கும் நாவல் இது. மகாபாரதம் இந்தியப்பண்பாட்டின் ஒட்டுமொத்த ஞானமும் ஒரே நூலில் திரண்டிருப்பது. ஆகவேதான் அது ஐந்தாம் வேதம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் அந்த ஞானக்களஞ்சியத்திற்குள் செல்லும் தோரணவாயில். வடிவ அளவில் இது ஒரு முழுமையான தனிப்படைப்பு. இதன் மொழியும் கட்டமைப்பும் இதற்குள்ளேயே நி¬றவை அடைகின்றன. ஆனால் வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை ஜெயமோகன் விரிவாக எழுதிவரும் நாவல்தொடரின் தொடக்கநாவலும்கூட.விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1500 -
ஜெயமோகன்
ஆயிரம் ஊற்றுகள்
இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம். நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே. அவர்களில் பலர் அரசியர். இந்த கதைகள் வரலாற்றை இன்றைய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210 -
ஜெயமோகன்
யானை டாக்டர்
“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம். மத்தமிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில இருக்கிற கம்பீரத்தைப்பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும். உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது. துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்…”
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹50 -
ஜெயமோகன்
வாசிப்பின் வழிகள்
இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இலக்கிய வாசகன் எதிர்கொள்ளும் தடைகள் என்ன, இலக்கியக் கருத்துக்களைச் சொல்வது எப்படி என்பதுபோன்ற பல வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் கட்டுரைகள் இவை. உலக இலக்கியக்களத்தில் சென்ற இருநூறாண்டுகளில் நிறைய விவாதிக்கப்பட்ட அடிப்படைகள் இவை. ஆனால் தமிழ்ச்சூழலில் இவற்றை பேசுபவர்கள் குறைவு. இவற்றை அறியாததனாலேயே பலர் ஆரம்பகட்ட குழப்பங்களையே தங்கள் சிந்தனைகளாக கொண்டிருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிக்கல்களில் இருந்து […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210 -
ஜெயமோகன்
வான் நெசவு
ஆசிரியர் இருபத்தைந்து ஆண்டுக்காலம் பணியாற்றிய தொலைத்தொடர்புச்சூழல் இக்கதைகளில் உள்ளது. ஆனால் அந்த அலுவலகச் சூழல், தொழில்நுட்பச்சூழல் ஓர் அறியப்படாத வாழ்க்கைக் களம் மட்டுமாக காட்டப்படவில்லை. தொலைதொடர்பு என்ற செயல்பாடு குறியீடாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் வழியாக விரியும் கதைகள் வாழ்க்கையின், பிரபஞ்சத்தின் அறியாத நெறிகளை சொல்லிவிட முயல்கின்றன. தொழில்நுட்பம் கவித்துவக் குறியீடாக ஆவதனூடாகவே இவை இலக்கியமாகின்றன.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹215