ஜெயமோகன்
Showing 37–48 of 111 results
-
ஜெயமோகன்
துளிக்கனவு
என் உள்ளத்தில் எப்போதும் சிறுகதையே ஆனாலும் அது பெரியவற்றை, ஆதாரமானவற்றை நோக்கி எழவேண்டும் என்னும் எண்ணம் உள்ளது. ஆகவே ஒரு புன்னகையாக, ஒரு மெல்லிய துயராக, ஓர் எளிய கண்டடைதலாக நிகழ்வனவற்றை கதையாக ஆக்க நான் முயல்வதில்லை. அவை வரும் வகையில் அப்படியே எழுதிக் கடந்துவிடுகிறேன்.
ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கையில் அவற்றில் பல அரிய கதைகள் என்பதைக் காண்கிறேன். அவற்றில் நான் எண்ணாதவை எழுந்து வந்திருப்பதையும் சொல்லப்பட்டவை சொல்லப்படாதவற்றை நோக்கி ஒளிகொண்டிருப்பதையும் உணர்கிறேன். அவை சிறுகதைகளே என்று தோன்றுகிறது.
இத்தொகுதியிலுள்ளவை அத்தகைய சிறுகதைகள்.விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹190 -
ஜெயமோகன்
கதாநாயகி
கதாநாயகி ஒரு பேய்கதை. புத்தகத்திற்குள் இருந்து எழுந்து வந்து நிகழ்காலத்தில் உருக்கொள்ளும் பேய். ஆனால் எளிமையான ஒற்றைமையக் கதை அல்ல. வாசிப்பு என்னும் செயலின் படிநிலைகள் அதிலுள்ளன. வாசிப்பு என்பது நாம் இறந்த காலத்தை, வரலாற்றை, நினைவை உருவாக்கி மீட்டிக்கொள்ளும் செயல்தான். மானுடர் மானுடமென்னும் ஒற்றைத்திரளாக தங்களை தொகுத்துக்கொள்வது அதனூடாகத்தான். புத்தகங்களில் இருந்து எழுந்து வருவன அனைத்தும் காலமென தங்களை ஆக்கிக்கொண்ட ஆளுமைகளும் சிந்தனைகளும் உணர்வுகளும்தான்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400 -
ஜெயமோகன்
உடையாள்
இது ஓரளவு அறிவியல் கல்வியும் அறிவியல்கொள்கைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமும் கொண்ட குழந்தைகளுக்கான ஒரு புனைகதை. அறிவியலின் வழியாக நிகழ்த்திக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை இது. அந்தக் கதையின் வழியாக மனிதனைப்பற்றிய சில அடிப்படையான தத்துவக் கேள்விகளையும் எழுப்பிக் கொள்கிறது. இளமையிலேயே இப்படி தத்துவக்கேள்விகளை குழந்தைகள் சந்திப்பது அவசியம். அவை வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வரும் தேடலை உருவாக்கும். தத்துவத்திலும் கதையிலும் ஆர்வம்கொண்ட பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகளுக்குரிய எளிய நேரடி நடையில் எழுதப்பட்ட கதை இது. கற்பனையான ஓர் உலகில் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹160 -
ஜெயமோகன்
கூந்தல்
குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வகைமாதிரிகள் இவற்றில் உள்ளன. சாதாரணமான புனைவின் வழியாக கவித்துவத்தை மௌனமாகத் தொட்டுவிட முயல்பவை இவை.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹190 -
ஜெயமோகன்
மலைபூத்தபோது
இவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள். கவிதைக்குரிய சொல்லி முடிக்காத தன்மை, உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் தன்மை, சொல்லாட்சிகள் வழியாக மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை ஆகியவை கொண்டவை இக்கதைகள். அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கும் ஒரு நுண்ணிய மரபில் இணைபவை. ஆகவே உணர்வெழுச்சிகளை, வாழ்க்கையின் முழுச்சித்திரங்களை இக்கதைகள் காட்டுவதில்லை. புன்னகைக்க வைக்கும், கற்பனை விரியச்செய்யும், வாழ்க்கையின் முழுமை நோக்கிய பார்வை ஒன்றை அளிக்கும் ஒரு தருணம், அல்லது உளநிலை மட்டுமே இவற்றில் வெளிப்படுகிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200 -
ஜெயமோகன்
படையல் – சிறுகதைத்தொகுப்பு
இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாமானியர் என பல்வேறு தனிமனிதர்கள் சந்தித்த சிக்கல்களையும், அவர்களின் உள்ளங்களையும் ஆராய்கின்றன இவை. வேகமான, தீவிரமான வாசிப்பனுபவம் அளிக்கும் கதைகள். படையல் அக்காலகட்டத்தின் ஆன்மிக உச்சநிலை ஒன்றைச் சொல்கிறது என்றால் எரிசிதை அக்காலகட்டத்தின் ஆழ்ந்த காதலொன்றைப் பேசுகிறது. மங்கம்மாள் சாலை என்னும் குறுநாவல் ஆன்மிகமும் இலக்கியமும் வாழ்க்கையைச் சந்திக்கும் மர்மப்புள்ளி ஒன்றை தொட்டுக்காட்டுகிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
ஜெயமோகன்
ஈராறுகால்கொண்டெழும் புரவி
என் படைப்புகளிலேயே மிக முக்கியமான சிலவற்றில் ஒன்று என நான் நினைப்பது ஈராறுகால் கொண்டெழும் புரவி. சித்தர்ஞானம் என்பதன் மீதான ஒரு விளையாடல் அது. இதிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தைச்சேர்ந்ததாக உள்ளது. இவை சென்ற காலங்களில் நான் தங்கி மீண்டும் முன் சென்ற புள்ளிகள் என்று சொல்வேன். – ஜெயமோகன
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹170 -
ஜெயமோகன்
ஆலயம் எவருடையது?
ஆலயங்கள் எவருடையவை என்னும் விவாதம் இன்று எழுந்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் அவை இருக்கவேண்டுமா? பக்தர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா? பக்தர்கள் என்பவர்கள் எவர்? பக்தர்கள் ஆலயங்களை வெறும் வழிபாட்டிடங்களாக எண்ணுவது சரியா? வழிபாட்டின் பொருட்டு அவற்றை மாற்றியமைக்க அவர்களுக்கு உரிமை உண்டா? நம் பேராலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் மட்டும்தானா? அவை பண்பாட்டு அடையாளங்களும் சரித்திரச் சின்னங்களும் இல்லையா? ஆலயங்களில் எந்த மாற்றத்தையும் செய்யலாகாதா? பழமையிலேயே நின்றுவிடவேண்டுமா? செய்யவேண்டுமென்றால் எவர் செய்யலாம்? இக்கேள்விகளுக்கான பதில்கள் அடங்கியது இந்நூல்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹150 -
ஜெயமோகன்
படுகளம்
Dispatch starts from 01.06.2024
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹340 -
ஜெயமோகன்
பத்ம வியூகம்
வெண்முரசு எழுதும் கனவு எனக்கு 1990 முதல் இருந்துவந்தது. என் பழைய கடிதங்களில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன் என நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான உளநிலையை, அறிவை உருவாக்கவே இருபத்தைந்தாண்டுகள் ஆயின. அந்த பயணத்தில் மகாபாரதத்தை ஒட்டி சிலகதைகளை எழுதிப்பார்த்தேன். அவற்றில் திசைகளின் நடுவே, பத்மவியூகம் போன்ற கதைகள் புகழ்பெற்றவை. இன்று வாசிக்கையில் அவற்றினூடாக வெண்முரசின் மெய்மையை நோக்கி நான் நகர்ந்து வந்திருப்பதை காணமுடிகிறது. இக்கதைகள் நான் என் மகாபாரதத் தேடலின் தடங்கள். அதேசமயம் நவீனக்கதைகளும்கூட -ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400 -
ஜெயமோகன்
எழுதுக – தன்னறம்
“எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக வாழ்வதைப்பற்றியும் குழப்பம் கொண்டிருக்கிறார்கள். எழுத்து ஓர் இலட்சியவாதம், எந்த இலட்சியவாதமும் அதற்குரிய ஐயங்களும் தயக்கங்களும் கொண்டது. எனக்கு அவ்வண்ணம் எழுதப்பட்ட கடிதங்களுக்கு நான் அளித்த பதில்கள், அவற்றினூடாக நிகழ்ந்த விவாதங்களின் தொகுதியே இக்கட்டுரைகள். இவற்றில் எழுத்திலும் வாசிப்பிலும் நுழைபவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பேசப்பட்டுள்ளன.” […]
தன்னறம்
₹180 -
ஜெயமோகன்
பொலிவதும் கலைவதும்
இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு, பிரிவு, கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது.வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320