ஜெயமோகன்
Showing 73–84 of 111 results
-
ஜெயமோகன்
திசைகளின் நடுவே
திசைகளின் நடுவே என்னும் இந்நூலின் பெயருக்கேற்ப இத்தொகுப்பு எழுதுகையில் நான் என் எதிர்காலத் திசைகளின் நடுவேயுள்ள புள்ளியில்தான் நின்றிருந்தேன். பலவகையான கதைக்கருக்கள், விதவிதமான கூறல்முறைகள் நிரம்பிய தொகுப்பு இது. இக்கதைகளை இன்று பார்க்கையில் இவற்றின் சிறப்பம்சம் இவற்றின் அகலமே என்று படுகிறது. பல கதைகளில் விரிவான சூழலும், அதிகமான கால அளவும் காணப்படுகிறது. இப்போது என் வாசிப்பு விரிவடைகையில் அமெரிக்கச் சிறுகதைகளில் இவ்வியல்பு அதிகமிருப்பதைக் காண்கிறேன். சிறுகதையின் முக்கியமான வகை மாதிரி இது என்று இதைக் கூறத் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300 -
ஜெயமோகன்
இயற்கையை அறிதல் – தன்னறம்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் பல ஆண்டுகள் முன்பு தமிழில் மொழிபெயர்க்கப்ட்ட இக்கட்டுரை ‘இயற்கையை அறிதல்’ என்னும் அதே தலைப்பில், தன்னறம் நூல்வெளி வாயிலாக தற்போது வெளியீடு கொள்கிறது. இந்நூலை வடிவமைத்து அச்சாக்கும் வாய்ப்பு அமைந்ததில் எல்லையற்ற மகிழ்வு கொள்கிறோம். ஒவ்வொரு தனிமனித அகக்குரலும் சம அளவு பிரபஞ்சத்தகுதி உடையவை; ஆன்ம நிலையில் எல்லாவுமே ஏற்றத்தாழ்வுகளற்றது என்பதனையும், தனிமனித மனம் இயற்கையை அணுகும் தரிசனத்தை தனிமை, நுகர்வு, அழகு, மொழி, கட்டுப்பாடு, கருத்துமுதல் வாதம், ஆத்மா, சாத்தியக்கூறுகள் என்னும் எட்டு உபதலைப்புகளின் வழியாக விவரித்துரைக்கிறது இந்நூல்.
தன் உள்ளடக்கத்தின் கட்டுமானத்தாலும், அதன் அர்த்த ஆழச்செறிவினாலும் நம்மை நோக்கி ஓர் அறைகூவலை எழுப்பும் ஒவ்வொரு படைப்பும், நம்முடைய அகவிடுதலையை வார்த்து சீர்திருத்துகிறது. அவ்வகையில், தமிழில் நிகழ்ந்த முக்கியமான மொழிபெயர்ப்பில் இக்கட்டுரையும் தனிச்சிறப்பு கொள்கிறது. ஒவ்வொரு வாசக மனதும் அவசியம் வாசித்து விவாதிக்க வேண்டிய நற்படைப்பு இது.தன்னறம்
₹150 -
ஜெயமோகன், விவேக் ஷன்பேக்
வேங்கைச்சவாரி – தமிழில் ஜெயமோகன் வம்சி
கன்னட மொழியின் முதன்மையான இளைய தலைமுறை எழுத்தாளரான விவேக் ஷன்பேக் சிறுகதை, நாவல், இலக்கியவிமரிசனம் மற்றும் நாடகத்துறையில் புகழ் பெற்றவர். 1992 ஆம் ஆண்டுக்கான கதா விருது, 1998க்கான சிவராம் காரந்த்விருது ஆகியவற்றை பெற்றவர்.
இக்கதைகளில், நவீன கர்நாடகப் பண்பாட்டின் பல்வேறு அடையாளச் சிக்கல்களையும் உலகமயமாக்கலின் பிரச்சினைகளையும் விவாதிப்பதின் வழியாக தன் தரிசனங்களை அடைந்திருக்கிறார் விவேக்.
அபாரமான வாசிப்புத்தன்மைக் கொண்ட இக்கதைகள் வாசகன் கடந்து செல்லவேண்டிய நுண்ணிய மறுபக்கங்களும் உடையவை.
– ஜெயமோகன்வம்சி புக்ஸ்
₹100 -
ஜெயமோகன்
சொல்வளர்காடு – செம்பதிப்பு கிழக்கு பதிப்பகம்
மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது.. அனேகமாக அத்தனை கதைகளுமே கூறுமுறையில் வளர்ச்சியும் மாற்றமும் அடைந்தவை. நவீன கதைசொல்லல் முறைப்படி மீள்வடிவு கொண்டவை. அக்கதைகள் உருவாக்கும் இடைவெளிகளை, அக்கதைகளின் இணைவுகள் உருவாக்கும் இடைவெளிகளைத் தன் கற்பனையாலும் எண்ணத்தாலும் வாசகன நிரப்பிக் கொள்ளவேண்டும் எனக் கோருகிறது இந்நாவல். ஒன்றின் இடைவெளியில் இருந்து பிறிதொன்றைக் கண்டடைந்து நீளும் இதன் பாதை இந்திய மெய்ஞான மரபின் வளர்ச்சியின் தோற்றமும் கூட. ஆனால் தத்துவத்தை படிமங்கள் வழியாகவே இலக்கியம் பேசுகிறது. அந்த விவாதத்தை முழுமை செய்ய வாசகனின் பங்களிப்பைக் கோருகிறது.
வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.கிழக்கு பதிப்பகம்
₹1200 -
ஜெயமோகன்
பின்தொடரும் பிரம்மம்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹100 -
ஜெயமோகன்
முதலாவிண் – செம்பதிப்பு
முதலாவிண் என்றுமுள்ள விண் என்று பொருள்படுகிறது. இது பாண்டவர்களின் விண்புகுதலுடன் நிறைவுறும் நாவல். வெண்முரசு நாவல்நிரையின் இறுதிப்படைப்பு. இதுவரை பேசப்பட்டவை அனைத்தும் இந்நாவலில் கவிதையாலும் மெய்யறிவாலும் தொகுக்கப்படுகின்றன.ஒரு பேரிசை ஓய்ந்த பின் உருவாகும் அமைதியின் அடர்த்தி கொண்ட படைப்பு இது. ‘ சொற்களின் அழிவின்மையை அதன் ஆசிரியன் கண்டுகொண்ட கணம் இந்நாவலில் உள்ளது’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400 -
ஜெயமோகன்
இரு கலைஞர்கள்
இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, புனைவுகள். அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள். சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள். அவர்களின் அகம் திகழும் சில கணங்களை தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன. இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதியமானைப் பாடிய ஔவையாரின் கண்களே நான் கோருவன. -ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹220 -
ஜெயமோகன்
கிராதம் – செம்பதிப்பு கிழக்கு பதிப்பகம்
வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது கிராதம். வருணனை முதல் தேவனாகக் கொண்ட தொல்வேதகாலம் முதல் இந்திரனை முதல் தெய்வமாகக்கொண்ட வேதம் எழுவதுவரையிலான காலம், நாராயணனை முதல்தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம் இதிலுள்ளது. அதை அர்ஜுனனின் பயணங்களாக இது சித்தரிக்கிறது. வேதமுதல்வனிடமிருந்து பாசுபதவேதத்தை அர்ஜுனன் பெறும்போது நிறைவடைகிறது. பாண்டவர்களில் அர்ஜுனனுக்கே கீதை உரைக்கப்பட்டது. அவனே வில் வழியாக யோகியானவன். இந்நாவலில் வருவது நாராயணவேதத்தின் உச்சத்தைக் கேட்கும் இடம் நோக்கி அவன் செல்லும் பயணமும்கூட. […]
கிழக்கு பதிப்பகம்
₹1300 -
ஜெயமோகன்
எழுதும் கலை
நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹190 -
ஜெயமோகன்
ஜெயமோகன் குறுநாவல்கள்
நான் குறுநாவல் வடிவங்களில் நிறையவே எழுதியிருக்கிறேன். விதியின் சுழற்பாதையைச் சொன்ன பத்மவியூகமும் ஆழத்திலிருந்து நெளியும் இச்சையின் விஷப்பரப்பைச் சொன்ன இறுதிவிஷமும் என் நினைவில் மீண்டும் மீண்டும் வரும் ஆக்கங்கள். குறுநாவல் தன் விரிவால் ஒரு முழு வாழ்க்கையைச் சொல்லக்கூடியது. தன் குறுக்கத்தால் கூர்மையாகத் தைக்கவும் கூடுயது. அது கைப்பிடியளவு விதை , காட்டின் ஆகச்சிறிய வடிவம்.
நற்றிணை பதிப்பகம்
₹290 -
ஜெயமோகன்
கல்பொருசிறுநுரை – செம்பதிப்பு
கிருஷ்ணனின் மறைவுவரை செல்லும் இந்நாவல், கல்பொருசிறுநுரை. இந்த இருபத்திரண்டாயிரம் பக்கங்களில் திரட்டி எடுக்கப்பட்ட பேராளுமை. அவன் சொல்லே, இந்நாவலின் சுடர். ஆனால் அவனுடைய குலச்சரிவை, குடியழிவை, நகர்மறைவை, அவன் அகல்வை புராணங்கள் சொல்லத்தான் செய்கின்றன. அது ஊழ் என்பதனால், பிரம்மவடிவானவனும் அதற்கு கட்டுப்பட்டவனே என்பதனால். மகாபாரதம் சொல்லும் நெறிகளில் முதன்மையானது என்னவென்றால் இங்குள்ள ஒவ்வொன்றும் ஒரு துலாத்தட்டில் உள்ளன என்பதே. ஒன்று பிறிதொன்றை நிலைநிறுத்துகிறது, ஒன்றின் நிலையழிவு பிறிதொன்றை நிலையழியச் செய்கிறது.
மகாபாரதப் பெரும்போரில் மாபெரும் குடியழிவை உருவாக்கியவன் அதற்கான விலையை தான் கொடுப்பதன் சித்திரம் இது. கொடுக்கவேண்டுமென அவன் அறிந்திருந்தான், அவனே அதை தரிசனம் என முன்வைத்தவன். ஆகவே அவன் அதை அளித்தான். அவன் கண்முன் மறைந்தன எல்லாம். அவன் துயருற்றிருப்பானா? துயர் அவனுக்கு உண்டா? இருந்திருக்கலாம், பெருந்தந்தையர் துயர்கொண்டவர்கள். ஆனால் அவன் அதற்கும் அப்பால். துளிகளை, அலையை கடலை மட்டுமல்ல புவியை ஒரு துளியெனக் காணும் தொலைவு திகழும் பார்வை கொண்டவன். அவனுக்கு கல்பொருசிறுநுரைக் குமிழிதான் அவனேகூட.விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1300 -
ஜெயமோகன்
புறப்பாடு
அனுபவங்களை காலவாிசைப்படி சொல்லமுடியாது.சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது. அதை வௌயே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச்சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வாிசையை அமைத்து விடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன். அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒனறு தென்படும். அது எந்தெந்த […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹600