ஜெயமோகன்
Showing 85–96 of 111 results
-
ஜெயமோகன்
நாவல் கோட்பாடு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200 -
ஜெயமோகன்
வெண்கடல்
உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹280 -
ஜெயமோகன்
ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு
எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை, மொழியை அடையும் விந்தையைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். குழந்தையின் சிந்தனையின் அமைப்பு நரம்புக் கட்டமைப்பாக அதன் மூளைக்கும் ஏற்கனவே உள்ளது. புற உலகம் அதற்குச் சொற்களையும் படிமங்களையும் மட்டுமே அளிக்கிறது. ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள், கவிஞர்களாலும் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹120 -
ஜெயமோகன்
சொல்லிமுடியாதவை
ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகள் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? செய்தொழிலைப் பழிக்கலாகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா? பண்பாட்டைச் சுமக்கத்தான் வேண்டுமா? ஜெயமோகன் தன் நண்பர்கள் வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த பண்பாட்டுக் கட்டுரைகள் இவை நேரடியான கூரிய கருத்துகள் வரலாற்றுப்பின்புலம் தேடிச்சென்று விவாதிப்பவை.
நற்றிணை பதிப்பகம்
₹180 -
ஜெயமோகன்
மண் – சிறுகதைத்தொகுப்பு
வெண்முரசு எழுதும் கனவு எனக்கு 1990 முதல் இருந்துவந்தது. என் பழைய கடிதங்களில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன் என நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான உளநிலையை, அறிவை உருவாக்கவே இருபத்தைந்தாண்டுகள் ஆயின. அந்த பயணத்தில் மகாபாரதத்தை ஒட்டி சிலகதைகளை எழுதிப்பார்த்தேன். அவற்றில் திசைகளின் நடுவே, பத்மவியூகம் போன்ற கதைகள் புகழ்பெற்றவை. இன்று வாசிக்கையில் அவற்றினூடாக வெண்முரசின் மெய்மையை நோக்கி நான் நகர்ந்து வந்திருப்பதை காணமுடிகிறது. இக்கதைகள் நான் என் மகாபாரதத் தேடலின் தடங்கள். அதேசமயம் நவீனக்கதைகளும்கூட -ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300 -
ஜெயமோகன்
கன்னிநிலம்
நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகாமில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல். நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில சமயம் ஆழமான மன எழுச்சி; சில சமயம் ஆழமான தேடல். சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல் கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும் எழுதுவதுண்டு. எழுத்தில் எந்த வடிவமும் விலக்கல்ல […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹250 -
ஜெயமோகன்
இரவு
இந்த இரவில் இப்புவியில் எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன ! காட்டில் கரிய பெரும் யானைகள் மண்ணுக்குள் எலிகள் நீருக்குள் மீன்கள் பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள் நாளைய புவி இங்கே கரு புகுகிறது நிறைவுடன் சற்றே சலிப்புடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பிப் படுக்கிறது இரவு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330 -
ஜெயமோகன்
உச்சவழு
எழுத்தாளர் ஜெயமோகன் சென்ற இரண்டாண்டுகளில் எழுதிய புதிய சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம். ‘இக்கதைகள் மானுடவாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களிலிருந்து ஒட்டுமொத்தமான கேள்விகளை நோக்கிச் செல்கின்றன’.
நற்றிணை பதிப்பகம்
₹200 -
கே.ஜி.சங்கரப்பிள்ளை, ஜெயமோகன்
பலாக்கொட்டை தத்துவம் – கவிதை – மொழிபெயர்ப்பு – ஜெயமோகன்
மலையாள நவீன கவிஞர்களில் முக்கியமானவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை . இடதுசாரி தீவிரவாத இயக்கங்களின் முகமாக அறியப்பட்டவர். வசனத்தை சிறப்பாக கவிதையில் பயன்படுத்திய முன்னோடி. களச்செயல்பாட்டாளர், மனித உரிமைப்போராளி. தீவிரமான விமர்சனமும் அங்கதமும் கொண்ட கவிதைகளை எழுதிய கே.ஜி.சங்கரப்பிள்ளை அவருடைய நுட்பமான மென்மையான அழகுணர்வுக்காகவும் புகழப்படுபவர். மலையாள கவிதையில் அலட்டல் இல்லாத ஒரு கூறுமுறையைக்கொண்டுவந்தவர். கே.ஜி.சங்கரப்பிள்ளையை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும்பொருட்டு 2019ம் ஆண்டு அவர் கலந்து கொண்ட விஷ்ணுபுரம் விருது விழாவில் வெளியிடப்பட்ட நூல். மொழிபெயர்ப்பு – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹100 -
ஜெயமோகன்
இலக்கிய முன்னோடிகள் – நற்றிணை
இவை இலக்கிய முன்னோடிகளைப் பற்றிய முடிவுகள் அல்ல; தீர்ப்புகள் அல்ல; ஒரு வாசகனின் அவதானிப்புகள் மட்டுமே. பிற வாசகர்கள் இந்தக் கண்களினூடாகப் பார்க்கையில் இன்னும் சற்று விரிவான வாசிப்பை அடையக்கூடும். இப்படி பல்வேறு கண்கள் வழியாகப் பார்க்கப்படுகையிலேயே இலக்கிய வாசிப்பு முழுமையை நோக்கிச் செல்கிறது. இலக்கியவாதி மேலும் மேலும் காலத்தில் தெளிந்து வருகிறான். இந்நூலின் நோக்கம் இதுவே.
– ஜெயமோகன்நற்றிணை பதிப்பகம்
₹750 -
ஜெயமோகன்
வணங்கான்
யானை நடந்தபோது அவரே யானையாகி அசைவதை உணர்ந்தார் அப்பா. மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. மேகங்களில் நிறைந்து ததும்பும் ஒளி.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹40 -
ஜெயமோகன்
ஞானி
மார்க்சிய சிந்தனையாளரான மறைந்த ஞானி [கி.பழனிச்சாமி] அவர்களைப் பற்றிய ஜெயமோகனின் நினைவுக்குறிப்புகள் இவை. ஜெயமோகன் எப்போதும் ஞானியை தன் ஆசிரியர் என குறிப்பிட்டு வந்தவர். ஞானியும் அவ்வண்ணமே ஜெயமோகனைத் தன் மாணவன் என்றே குறிப்பிட்டுவந்தார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300