ஜெயமோகன்
Showing 97–108 of 112 results
-
ஜெயமோகன்
இந்தியப்பயணம்
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம். அதுதான் இந்திய தரிசனம். இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210 -
தெளிவத்தை ஜோசப்
மீன்கள்
இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது ‘மீன்கள்’. இதைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை. இக்கதையை முதன்மையான கதையாக ஆக்குவது இதில் சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கும் அந்தத் தொழிலாளியின் இழிவின் கணம்தான். சுயவதையாக அவனில் நீடிக்கும் ஒரு தருணம் அது. உண்மையில் அதனூடாக நான் அவனைப் பார்க்கவில்லை, அவனுடைய மகள்களையே […]
நற்றிணை பதிப்பகம்
₹100 -
ஜெயமோகன்
முன்சுவடுகள்
வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளை மிகச்சிறந்த கதைகளுக்குரிய உணர்ச்சிகரத்துடனும் கலையொருமையுடனும் தொகுத்து அளித்திருக்கிறார் ஜெயமோகன். அறம் தொகுதியின் உண்மை மனிதர்களின் கதைகளுக்கு நிகராகவே தீவிரமான உள எழுச்சியை உருவாக்குபவை இவை. வாழ்க்கைமேல் நம்பிக்கையை, செயலாற்றுவதற்கான தூண்டுதலை அளிப்பவை. முன்னால் சென்றவர்களின் காலடிகள் போல தெளிவான வழிகாட்டல்கள் வேறென்ன உள்ளது? அவை அறைகூவல்கள், அறிவுறுத்தல்கள், ஆற்றுப்படுத்தல்கள். மானுடர் இங்கே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். பல்லாயிரம்கோடியென. எஞ்சுவன சில சுவடுகள் மட்டுமே. அவற்றிலுள்ளன ரத்தம், கண்ணீர், வியர்வை. ஒவ்வொன்றும் அருமணிகளை […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹240 -
ஜெயமோகன்
ஏழாம் உலகம்
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன! “ஏழாம் உலகம்” அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400 -
ஜெயமோகன்
நாளும் பொழுதும்
நாளும் பொழுதும் நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன்.
நற்றிணை பதிப்பகம்
₹170 -
ஜெயமோகன்
உலோகம்
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோட தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹220 -
ஜெயமோகன்
ஒருபாலுறவு
தமிழ்ச்சூழலிலேயே ஒருபாலுறவு ஈர்ப்பு கொண்டவர்கள் பலர் இருப்பதும், இங்குள்ள சமூகநோக்கு அவர்களை ஒரு தலைமறைவுச் சமூகமாக ஆக்கியிருப்பதும் இணைய ஊடகம் வந்த பின்னரே தெரியவந்தது. ஜெயமோகனின் இணையதளத்தில் வந்த கடிதங்களில் இருந்து தொகுக்கப்பட்ட இத விவாதங்களில் பல தளங்களில் இருந்து குரல்கள் ஒலிக்கின்றன.
”என்னுடைய பார்வை எப்போதுமே தெளிவானது. நான் பாலியல், ஒழுக்கவியல் கொண்டு மனிதர்களை அளவிடுவதில்லை. சமூகப்பங்களிப்பைக் கொண்டே அளவிடுகிறேன். ஒருவர் தன் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வது அப்பங்களிப்பின் வழியாகவே. அதை இயற்றுவதற்குரிய வாழ்க்கையை அவர் அமைத்துக்கொண்டார் என்றால் அதுவே உகந்த வாழ்க்கை” என்று ஜெயமோகன் இவ்வுரையாடலைத் தொகுக்கும்போது குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹90 -
ஜெயமோகன்
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹380 -
ஜெயமோகன்
வாழ்விலே ஒரு முறை
இந்தக் கட்டுரைகள் எல்லாமே வாழ்க்கையில் நிகழ்ந்தவை, கற்பனையில் தொகுக்கப்பட்டு மையம் கண்டடையப்பட்டவை. அமைப்பில் கட்டுரைக்கும் கதைக்கும் நடுவே நிற்பவை. உணர்ச்சிகரமானவை, கதைக்கான ஒழுக்கும் ஓட்டமும் கொண்டவை, ஆனால் தங்களை கட்டுரையென்றே முன்வைப்பவை ”அறம் போன்ற கதைகளில் மாமனிதர்களைப் பற்றிச் சொன்னேன். இக்கதைகள் எளிய மனிதர்களின் கதைகள். கதை என்றவகையில் அவர்களுள் எந்த வேறுபாடுமில்லை. மனிதர்களை கருவாக்கி இங்கே தன்னை நிகழ்த்திக்கொள்ளும் மாபெரும் கதை ஒன்று உள்ளது. அதன் ஒரு சிறுமூலையை தன் உயிர்ச்சத்தால் பின்னி விரிக்கும் சிறு […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹180 -
ஜெயமோகன்
சிலுவையின் பெயரால்
எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன். இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன. என் கிறிஸ்துவை சொற்கள் மூலம் மேலும் அறியும் முயற்சி. அவரை மறைக்கும் விஷயங்களை சொற்கள் மூலம் கிழித்தகற்றும் முயற்சியும் கூட.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320 -
ஜெயமோகன்
வலசைப் பறவை
ஜெயமோகன் தன் தளத்தில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுதி இது. “நான் இந்திய தேசத்தில் நம்பிக்கை கொண்டவன். அதை ஒரு மத நம்பிக்கையாக அல்ல. ஒரு நடைமுறை வாய்ப்பாகவே கருதுகிறேன். மாபெரும் மானுடப்பரவல் கொண்ட இந்த நாடு ஒன்றாக இருந்தாலொழிய வளர முடியாது. பிரிந்தால் குருதிப்பெருக்கே எஞ்சும் என நம்புகிறேன். ஆகவே முதன்மையாக பிரிவினை அரசியல் பேசி சுயலாபம் தேடும் குழுக்களை, ஐந்தாம் படையினராகச் செயல்படும் அறிவுஜீவிகளையே முதன்மையாக எதிர்கொள்கிறேன். தமிழ் அறிவுப்புலத்தில் மிகப்பெரிய சக்திகள் இவர்களே. மற்றபடி என் எதிர்வினைகள் எல்லாமே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு பொதுக் குடிமகனுடையவை மட்டுமே. சாமானியனாக நின்று வரலாற்றை நோக்குவதே என் வழி” என்று ஜெயமோகன் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
நற்றிணை பதிப்பகம்
₹125 -
ஜெயமோகன்
அருகர்களின் பாதை
ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும் பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாதகாலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடித்தேடிச் சென்று பார்த்தார். அந்த அறநிலைகளின் சங்கிலி இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டறிந்தார். அனேகமாக அத்தனை இடங்களிலும் அவர்கள் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400