நாஞ்சில் நாடன்
Showing all 7 results
-
நாஞ்சில் நாடன்
தொல்குடி
தமிழினி
₹190 -
நாஞ்சில் நாடன்
கறங்கு
சமகால நடப்புகளின் மீது சாமானியர்களுக்கு உள்ள விமர்சனங்களையும் கோபத்தையும் கையாலாகாத்தனத்தின் தம் மீதான கழிவிரக்கத்தையும், எள்ளலும் சீற்றமும் கொப்பளிக்கும் தனித்துவமான மொழியில் சொல்கின்றன நாஞ்சில்நாடனின் இக்கதைகள்.
தமிழினி
₹120 -
நாஞ்சில் நாடன்
நாஞ்சில்நாடன் கதைகள்
உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராம்மொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில்நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது. இல்லாமை கண்டு வருந்தியும் தன் பசியாறி பிறர் பசி மறுப்போரின் கயமையை நொந்தும், தினம் மாறும் குணம் கொண்டோரைக் கண்டு வெகுண்டும் கதை பேசுகிறது. எள்ளி நகையாடியும் எடுத்தெறிந்து பேசியும் முகத்திலறைந்தும் முணுமுணுத்த்படியும் தொடர்கிறது. […]
தமிழினி
₹620 -
நாஞ்சில் நாடன்
பொலியோ பொலி!
‘வலுத்த கை’ என்று அமரர் கி.ரா.வால் வாழ்த்துப்பெற்ற நாஞ்சில் நாடனின் பதினெட்டாவது கட்டுரை நூல் இது. நுண்மான் நுழைபுலமாகச் சொல்ஆராய்ச்சிகளும் பட்டறிவுக் குறிப்புகளும் தற்காலத் தமிழர் வாழ்விதம் மீதான ஆற்றாத அரற்றலும் அங்கதமும் மிடைந்து யாத்த நூல்.
தமிழினி
₹280 -
நாஞ்சில் நாடன்
சூடிய பூ சூடற்க
உந்தித்தீயின் வெம்மையும் நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில் நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது.
தமிழினி
₹170 -
நாஞ்சில் நாடன்
அம்மை பார்த்திருந்தாள்
பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. அரை நூற்றாண்டுகாலத் தமிழ் சமூக வாழ்வின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை நேர்மைத் திறத்துடன் உறுதிப்படத் தொடர்ந்து தன் கதைகளின் வழியாக எழுதிக்காட்டுகிறார் நாஞ்சில் நாடன். தேர்ந்த ஒரு தவசிப்பிள்ளையைப் போல வேண்டிய பதார்த்தத்தில் வேண்டிய சுவைக்காட்டித் திருத்தமாக விளம்பும் நுட்பத்துடன் எழுதுவதால்தான் அவற்றிலுள்ள சீற்றத்தையும் எள்ளலையும் நம்மால் ஒன்றுபோல ரசித்துச் சுவைக்க முடிகிறது -எம். கோபாலகிருஷ்ணன்
தமிழினி
₹160 -
நாஞ்சில் நாடன்
கருத்த வாவு
‘கருத்த வாவு’ நாஞ்சில் நாடனின் பதினாறாவது கட்டுரைத் தொகுப்பு அனைத்துக் கட்டுரைகளும் நடப்பாண்டின் பல்வேறு பருவ இதழ்களில் வெளியானவை. தமிழில் சொற்கள் குறித்த தேடலும் தெளிவும் கொண்டவை. அவர் அறியத்தரும் தமிழின் நேற்றைய சொல்வளம் பெருவியப்பைத் தருகிறது. மொழி இன்றளவும் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சொற்பண்டாரத்தின் சில மணிகள் அவை.தமிழினி
₹230