நூல்வனம்
Showing all 8 results
-
யுவன் சந்திரசேகர்
பெயரற்ற யாத்ரீகன்
ஜென் கவிதைகள், இறகின் மிருதுவும் எடையற்ற தன்மையும் கொண்டவை. நிகழும் போது பிடிக்க முடிந்தால் மட்டுமே பொருள் கொள்பவை. ஆகக் குறைந்த சொற்களில் இதை நிகழ்த்திக் காட்ட இயல்கிறது என்பது, ஜென் மார்க்கம் செய்யும் மாயம் என்றே சொல்வேன். மொழியின் தாழ்வாரம் எத்தனை அகலமானது; ஆனாலும் சூட்சுமமானது என்பதையும் ஜென் கவிதைகள் அறியத் தருகின்றன. இவற்றைப் பற்றுவதற்கு, உணர்வின் ஒரு துளி மட்டுமே போதுமானது. தீவிரமான அல்லது தொடர்ந்த சிந்தனை இக்கவிதைகளை இன்னும் தொலைவுக்கு நகர்த்திவிட வாய்ப்புண்டு. சொல்லப்போனால், எந்த மொழியிலும், எந்தக் காலகட்டத்திலும் கவிதையின் ஆதார குணம் என்று இதைச் சொல்லலாம்.
– முன்னுரையிலிருந்து
நூல் வனம்
₹330 -
எம்.கோபாலகிருஷ்ணன்
ஆன்டன் செகாவ் கதைகள்
நவீனச் சிறுகதைக்கான பாதையை உருவாக்கித் தந்தவர் ஆண்டன் செகாவ். நூற்றாண்டுகள் கடந்தும் கதை வடிவம், மொழிநேர்த்தி, சித்தரிப்பு நுட்பம் என சிறுகதையின் ஒவ்வொரு இலக்கணத்திலும் செகாவின் அழுத்தமான முத்திரை இன்றும் மெருகிழக்காமல் இருப்பதே அவரது மேதமைக்குச் சான்று. தமிழில் இதுவரை வெளிவராத இக்கதைகள் செகாவின் புனைலகின் மேலும் சில ஆழங்களைத் துலக்கிக் காட்ட வல்லவை.
நூல் வனம்
₹230 -
ஆன்டன் செக்காவ், எம்.கோபாலகிருஷ்ணன்
பேட்ச் எனும் நாய்க்குட்டி
நூல் வனம்
₹50 -
எம்.கோபாலகிருஷ்ணன்
பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி
தமிழில் இந்திக் கவிதைகளை அறிமுகப்படுத்தும் முதல் தொகுப்பு. இந்தியின் மூத்த கவிஞர்களிலிருந்து இன்றைய தலைமுறை கவிஞர்கள் வரையிலுமான முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு, இந்திக் கவிதையுலகை அறிந்துக்கொள்வதற்கான ஒரு சாளரம்.
நூல் வனம்
₹330 -
மொழிபெயர்ப்பாளர் : லதா அருணாச்சலம்
அக்டோபஸின் பேத்தி
லதா அருணாச்சலம் மொழிபெயர்த்திருக்கும் இக்கதைகள் ஆப்பிரிக்க நிலத்தில் நிகழ்பவை. அந்த மக்களின் மொழியில் எழுதப்பட்டவை. ஊரும் பெயர்களும் உணவும் உடையும் வேறு வேறு. களங்கள் வேறு. ஆனால், இவை நமக்கு தரும் உணர்வுகளில் பேதங்கள் எவையுமில்லை. இவற்றில் நாம் காணும் உவகையும் கண்ணீரும் கருணையும் துயரமும் மொழிகளைக் கடந்தவை. எங்கோ ஒரு கண்டத்தில் ஏதோவொரு நிலையில் உள்ள ஒரு மனிதனை நம்மால் பார்க்க முடிகிறது. அவனுடன் உரையாட முடிகிறது. அவனது சிரிப்பு நமக்கு மகிழ்ச்சி தருகிறது. துக்கம் […]
நூல் வனம்
₹280 -
சுழலும் சக்கரங்கள்
அகுதாகவாவின் சிறந்த படைப்புகள் என்னை காத்துக்கொண்டிருக்கின்றன. எங்கள் இருவரது காலமும் ஆளுமைகளும் வேறு .வெவ்வேறு குரலில் குறிக்கோள்களில் நாங்கள் வார்க்கப்பட்டோம். நான் சொல்ல விரும்புவது என்னவெனில் அகுதாகவாவின் படைப்புகளிலிருந்து நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன். நமது வாழ்வின் பயணத்தினூடே அவர் வாழ்வின் தடத்தின் வெளிச்சத்தினைக் காண்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ரியுனொசுகே அகுதாகவா இன்றும் ஜப்பானிய “தேசிய எழுத்தாளராக” வாழ்ந்தும் இயங்கியும் வருகிறார். ஜப்பானிய இலக்கியத்தில் அசைவற்ற ஒரு தனி நட்சத்திரமாகவும் நமது அறிவுத் தளத்தின் ஒரு பகுதியாகவும் […]
₹200 -
சூதாடி
₹500 -
6 வது வார்டு
₹210