ஸீரோ டிகிரி
Showing all 6 results
-
அருண்மொழி நங்கை
பனி உருகுவதில்லை
அருணா பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது. புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோல அருணாவின் எழுத்து அவர் சொல்லவந்த காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது. – அ. முத்துலிங்கம் இளமை நினைவுகளை எழுத முற்படும்போது, நினைவேக்கத்தின் தழுதழுப்பும் இழந்தவை பற்றிய பொருமலும் தவிர்க்கமுடியாமல் வெளிப்படும். அருண்மொழியின் கட்டுரைகளில் அது நடக்கவில்லை . […]
சீரோ டிகிரி பதிப்பகம்
₹380 -
செல்வேந்திரன்
மேடைப் பேச்சின் பொன்விதிகள்
இந்நூலின் நோக்கம் தரமான, செறிவான மேடை உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும், கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், எவராலும் கருத்தாழம் மிக்க சொற்பொழிவை ஆற்றமுடியும். நவீன வாழ்க்கையில் நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பேசியே ஆகவேண்டிய தருணங்கள் அமைந்துகொண்டே இருக்கும். இந்நூலில் பரிந்துரைக்கப்படும் ஆலோசனைகள் எல்லா வகையான மேடை உரைகளுக்கும் பொருந்தக்கூடியவை. ஆகவே, இது அனைவருக்குமான புத்தகம். தோன்றிற் புகழோடு தோன்றுக என்றால் பிறக்கும்போதே பெருமையோடு பிறக்கவேண்டும் என்று பொருளல்ல. அது மன்னர் வகையராக்களுக்குத்தான் சாத்தியம். ஓர் அவையில் தோன்றுவதாக இருந்தால், ஒரு மேடையில் தோன்றுவதாக இருந்தால், அதற்குரிய தகுதியோடும் புகழோடும் தோன்றுக என்பதே இதன் மெய்ப்பொருள். இந்நூலை வாசித்த பிறகு நீங்கள் தோன்றும் சபைகளில், மேடைகளில் புகழோங்கித் திகழ்வீர்கள்.
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹170 -
செல்வேந்திரன்
பெரும் வெற்றுக்காலம்
காட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்ற வைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எத்தும் எள்ளல்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட்டல்; கோபம் என்றாலும் குறைவாய் கூறல்; பரந்ததைச் சிற்சில பதங்களில் காட்டல்; உள்ள இலக்கணத்தை உணர்வுக்காக மீறல்… இப்படி ஒரு நடை எப்படி இருக்கும்? இந்த நூலின் நடை அதை விளக்கும். தனிமை, வெறுமை, தைரியமின்மை, பொறுமை இல்லா போக்கிரித்தன்மை – எல்லாம் எதிர்மறை. செல்வேந்திரன் எழுத்தினால் அவை அத்தனையும் அறிமுறை. தனது கதை போல் செல்வேந்திரன் சொல்வது உங்கள் கதைதான். படியுங்கள், ஆமென்பீர். நகைச்சுவையாளன் போல் ஒரு தோற்றம். உள்ளே கிடப்பது அணையா நெருப்பு. ரசித்து ரசித்துப் படித்துவந்தாலும் முடித்து வைக்கையில் மூளைக்கு வேலை. பொழுதுபோக்குக்கு நான் உத்தரவாதம். இந்தப் புத்தகம் இரண்டாம் முறை படிக்கவும் பத்திரம் ஆகும்.
– ரமேஷ் வைத்யா
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹130 -
செல்வேந்திரன்
வாசிப்பது எப்படி?
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹125 -
செல்வேந்திரன்
பாலை நிலப் பயணம்
நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை நூலாக பதிப்பித்திருக்கிறார். அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் தமிழ்நடை தொடர்வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் கொண்ட இதழியலாளனுடையது. துள்ளிச் செல்லும் சொற்கள், அழகிய ஒழுக்கு. தமிழின் முக்கியமான பயணக்குறிப்புகளில் ஒன்று
– ஜெயமோகன்
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹120 -
செல்வேந்திரன்
நகுமோ லேய் பயலே
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹135