Description
எழுத்தாளர் அ. பழுவேட்டையர் முழுநேர எழுத்தாளர். தாய் தந்தையருக்கு பிறந்தவர் மனைவியை மணந்து பிள்ளையை பெற்றவர் என்பதற்கப்பால் குடும்பத்தை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது? எழுத்தாளரின் சாதியைத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் என விரும்புவோர் நேரடியாக எழுத்தாளருக்கே ₹101 மணியார்டர் அனுப்பி கேட்டுக் கொள்ளலாம். இதுவரை மொத்தம் 330 சிறுகதைகளும், 33 நாவல்களும் 3300 கவிதைகளும் 330 விமர்சன கட்டுரைகளும் எழுதி வெளியிடாமலேயே வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார். தான் காலமான பிறகே அவை முழுதாக வெளிவரும் என்றும். அதிலிருந்து கிடைக்கும் தொகையைக்கொண்டு ஆதரவற்றோர் இல்லம் நடத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தன் கனவு என்றும் சொல்கிறார். நோபல் பரிசு, புக்கர் பரிசு, ஞானபீடம், சாகித்திய அகாதமி, விஷ்ணுபுர விருது, விளக்கு விருது, இலக்கிய தோட்டம், கலைமாமணி, தமுஎகச விருது, கலையிலக்கிய பெருமன்ற விருது, பபாசி விருது, ஜீரோ டிகிரி தமிழரசி விருது, கண்ணதாசன் விருது, ஆத்மாநாம் விருது, சுந்தர ராமசாமி விருது, ராஜமார்த்தாண்டன் விருது வாசகசாலை விருது, ஸ்பேரோ தொடங்கி உள்ளூர் ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம், குடியிருப்போர் நலச் சங்கம், செஞ்சிலுவை சங்கம், வரை எந்த அமைப்புமே அவரை விருதுக்கு பரிசீலித்ததில்லை என்பதையே தனக்கான மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறார். ஏற்றத்திலும் எதிர்காற்றிலும் மிக வேகமாக மிதி வண்டி ஓட்டுவதில் தனித்திறன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி குழந்தைகள் நாய்கள், பூனைகள் , மலர்கள், மழை , மலை போன்றவை தனக்கு கடும் ஒவ்வாமை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். பொறுப்பு துறப்பு- இந்நூலில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் வாசகர்களுக்கு தற்போது வாழ்கின்ற அல்லது முன் எப்போதோ வாழ்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை நினைவுபடுத்தினால் (படுத்தும்) அது தற்செயலானதே. அதனால் புண்பட்டு துன்பமடைய விரும்புபவர்கள் தாராளமாக அடைந்துகொள்ளலாம். அதற்கு நினைவுபடுத்தினால் (படுத்தும்) அது தற்செயலானதே. அதனால் புண்பட்டு துன்பமடைய விரும்புபவர்கள் தாராளமாக அடைந்துகொள்ளலாம். அதற்கு கதையாசிரியரோ, தொகுப்பாசிரியரோ பதிப்பகமோ, விற்பனையாளரோ, காலமோ, ஊழோ, கடவுளோ பொறுப்பல்ல..
Reviews
There are no reviews yet.