Description
இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள். புத்தம்புதிய ஓர் உலகு. ஒளிமிக்க உலகு. முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள்.
என் இளமையைக்கொண்டு நான் சமைத்த இந்த உலகை இனியும் விரிவாக்குவேன் என நினைக்கிறேன். ஒருவேளை எழுதாமல் போகலாம். ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்வேன். இப்போதே எழுதப்படாத பல கதைகள் என்னுள் இருக்கின்றன. இவற்றிலுள்ள கள்ளமற்ற கொண்டாட்டமே இவ்வுலகில் நான் வேண்டுவது. இங்கே மானுடர் வாழவேண்டிய வகை அது.
– ஜெயமோகன்
Reviews
There are no reviews yet.