Additional information
Format | |
---|---|
Imprint | |
Author | |
Year Published |
Jeyamohan
ஆழ்நதியை தேடிவிஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200
Format | |
---|---|
Imprint | |
Author | |
Year Published |
You must be logged in to post a review.
ஜெயமோகன்
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது. வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன. அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360ஜெயமோகன்
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200ஜெயமோகன்
இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம். நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே. அவர்களில் பலர் அரசியர். இந்த கதைகள் வரலாற்றை இன்றைய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210ஜெயமோகன்
மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை, கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதே வெண்முரசின் தரிசனம். அனைத்து மக்களுக்கும் தங்களுக்கான வேதங்கள் உள்ளன. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது நால்வேதம். நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமே நாராயண வேதம். அதாவது கீதை. கீதையின் பீடமே மகாபாரதம். அதன் முன்னோடி நூல்கள் உபநிடதங்களும், கீதையிலேயே குறிப்பிடப்படும் பிரம்மசூத்திரமும். வேதங்களுக்கும் வேதாந்தத்திற்குமான முரண்பாடு அல்லது முரணியக்கம் கீதையிலேயே சொல்லப்பட்ட ஒன்று. அதையே வெண்முரசு மொத்த மகாபாரதமாக விரித்துக்கொள்கிறது. ஆகவே வெண்முரசில் கீதை களத்தில் நிகழவில்லை. அது […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹900Jeyamohan
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200ஜெயமோகன்
வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத்தேவையாக இருக்கிறது. இது அந்த பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக. இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக் கொள்கிறேன். இவற்றை எழுதிய எல்லா கணங்களும் அரியவை, ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர் செய்துகொண்டவை. அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர் வினைகளும்கூட. அயினிப்புளிக்கறி போல எந்த விதமான பெருமைகளும் தனித்தன்மைகளும் இல்லாத சாதாரண மனிதர்களின் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹220ஜெயமோகன்
சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது… எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துகள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300
Reviews
There are no reviews yet.