ஜெயமோகன்

இன்றைய காந்தி – தமிழினி

தமிழினி

530

In stock

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில், என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது. காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் அடிப்படைச் சிந்தனைகளையும் குறித்த விரிவான ஒரு பொதுவிவாதம்.
காந்திமீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஐயங்களையும இந்நூலில் ஜெயமோகன் விரிவாக ஆராய்கிறார். காந்தியின் தனிவாழ்க்கையையும் அவரது போராட்டமுறைகளையும் பரிசீலிக்கிறார். காந்தியப் போராட்டவழிமுறைகள் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவை என்றும் காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற இலட்சியத்தின் இன்றைய பெறுமானம் என்ன என்றும் விவாதிக்கிறார். பல்வேறு வாசகர்களுடனான கேள்விபதிலாக ஆரம்பித்த உரையாடல் இந்நூல் வடிவை அடைந்துள்ளது. உலக சிந்தனையில் காந்தி இன்று வகிக்கும் இடம் என்ன என்பதை இந்நூல் இன்றைய இளம் வாசகனுக்குக் காட்டும்.
ஜெயமோகன் அவரது இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பெரும்பாலும் வெவ்வேறு வாசகர்கள் எழுதிய கடிதங்களுக்கான பதில்களாக கட்டுரைகள் அமைந்துள்ளன. காந்தியைப்பற்றி முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விரிவான ஆதாரபூர்வமான பதில்களை அளிக்கும் இந்நூல் காந்தியின் கொள்கைகளையும் ஆராய்கிறது. காந்தியின் கனவான கிராம சுயராஜ்யம் போன்றவற்றை இன்றைய சூழலில் வைத்து விவாதிக்கிறது.

Additional information

Format

Imprint

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “இன்றைய காந்தி – தமிழினி”

Most viewed products

Recently viewed products