Description
கொற்றவை தமிழில் எழுதப்பட்ட நாவல், ஆனால் ஒரு காவியத்தின் வடிவமைப்பும் மொழிநடையும் கொண்டது. இளங்கோ கண்ணகியை ’வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்று கூறுகிறார்.ஆனால் கண்ணகி மதுரையை அடைந்தபோது ‘மாமயிடன் செற்றிகந்த கொற்றத்தாள்’ என்று விதந்து பாடுகிறார். கால் மண்ணை அறியாமல் வாழ்ந்தவள் எப்படி மகிடனை பலிகொண்ட கொற்றவையாக ஆனாள்? அந்த வளர்ச்சியை ஐவகை நிலங்களின் வாழ்க்கை வழியாக, சங்கம் மருவிய காலகட்டத்தின் வரலாற்றின் வழியாக பேரோவியமாக தீட்டிக்காட்டும் நாவல் இது. இதன் கதை தமிழும் தோன்றாத, தெய்வங்களும் தோன்றாத தொல்பழங்காலத்தில் தொடங்கி இன்றையகாலம் வரை வந்து நிற்கிறது. புதுக்காப்பியம் என போற்றப்பட்ட படைப்பு இது
Reviews
There are no reviews yet.