Additional information
Format | |
---|---|
Imprint | |
Author | |
Year Published |
ஆதவன்
புழுதியில் வீணைதியாகு நூலகம்
₹330
Only 2 left in stock
1984ல் ஆதவன் எழுதிய இந்நாடகத்தை நான் படித்தேன்; வார்ஸாவிலிருந்து அவருக்கு எழுதினேன்: ‘பாரதியைப் பற்றி நாடகம் எழுத வேண்டுமென்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?’
அவர் பதில் எழுதினார்: ‘முப்பத்தொன்பது வயசுக்குள் அவரால் எப்படி இவ்வளவு சாதிக்க முடிந்தது என்று ஆச்சர்யந்தான்.’
பாரதியை விட ஆறு ஆண்டுகள் அதிகம் வாழ்ந்துவிட்ட ஆதவனின் இந்நாடகம் எனக்கு ஆச்சர்யத்தைத் தருகின்றது.
– இந்திரா பார்த்தசாரதி
Format | |
---|---|
Imprint | |
Author | |
Year Published |
You must be logged in to post a review.
ஜெயமோகன்
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது. வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன. அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன. – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹360ஜெயமோகன்
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹200ஜெயமோகன்
இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம். நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே. அவர்களில் பலர் அரசியர். இந்த கதைகள் வரலாற்றை இன்றைய […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹210செல்வேந்திரன்
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹125ஜெயமோகன்
இத்தொகுப்பின் கதைகளில் உள்ள பொதுக்கூறு என பெண்மையின் ஜாலங்களைச் சொல்லலாம். வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி, வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி. இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகை கொண்டிருக்கிறேன். அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது. இன்று பெண்மையின் இந்த ஜாலங்களை தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு ஆடுக மகளே என்று சொல்லுபவனாக ஆகியிருக்கிறேன். இக்கதைகளின் நுட்பங்கள் என நான் நினைப்பது பெண் அளிக்கும் பாவனைகளை. அவை மெய்யாக வெளிப்படுபவையும்கூட. மண்ணின் பாவனைகளே பருவங்களும் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320அருண்மொழி நங்கை
காதலின் அகவிழியே நகரும் ஒளியாக அருண்மொழி நங்கையின் நூலின் பாதையைச் சமைக்கிறது. ஜெயமோகனுக்கு (‘ஜெயனுக்கு) சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ஒரு பரிசாக, அகத்தின் சைகையாக. ஏற்கெனவே தந்ததை நினைவூட்டும் தருதலாக. வாசகர்களின் முன் தருதல் நடக்கிறது. பரிமாற்றத்தின் ஒரு சுற்று முடிய எதிர்த் தரப்பிலிருந்து இனி தரப்பட வேண்டும். – கவிஞர் பெருந்தேவி (பின்னிணைப்பாக ஜெயமோகன் எழுதிய சில காதல் கடிதங்களும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.)
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹180ஜெயமோகன்
ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகள் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? செய்தொழிலைப் பழிக்கலாகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா? பண்பாட்டைச் சுமக்கத்தான் வேண்டுமா? ஜெயமோகன் தன் நண்பர்கள் வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த பண்பாட்டுக் கட்டுரைகள் இவை நேரடியான கூரிய கருத்துகள் வரலாற்றுப்பின்புலம் தேடிச்சென்று விவாதிப்பவை.
நற்றிணை பதிப்பகம்
₹180
Reviews
There are no reviews yet.