Description
’சிங்கத்தின் மீதமர்ந்த, உலகைக் காக்கும் இறைவி ஜத்தாத்ரியின் நான்கு பெரும் சிலைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வைக்கோல் எரிவது மெல்லிய களிமண் பூச்சு வழியாகத் தெரிந்தது. சிங்கங்கள் சில்லிட்ட களிமண்ணால்தான் மூடப்பட்டிருந்தன. தேவியர் பற்றி எரிந்தபடி ஊர்வலமாக செல்வதுபோலிருந்த அந்தக் காட்சி அமானுஷ்யமானதாக, தீமைக்கு முன்னறிவிப்பு போல இருந்தது…’
சாதிவெறிப் பின்னணியில் கலைஞனின் இருப்பை, புரட்சிப் பின்னணியில் காதலை, உறவுகளிடையே மோதல்களை, இழப்புகளை சொல்லிச் செல்லும் நாவல். கலையும், காதலும், தாய்மையும் உயிர்த்தெழும் தருணங்களை ஆரவாரமின்றி பதிவுசெய்யும் ஆக்கம்.
Reviews
There are no reviews yet.