Description
விவேக்கின் கதைகள் தென்மேற்கு கர்நாடகத்தின் கிராமப்புறத்தையும், நவீனவாழ்க்கை திகழும் நகர்ப்புறத்தையும் ஒரே சமயம் தழுவி விரிபவை. பெரும்பாலும் கீழ்நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை விவரிப்பவை. ஆனால் ஓர் உயர்தொழில்வணிக சூழலின் கருவைக் கொண்டுள்ள வேங்கைச் சவாரி போன்ற கதையையும் அதேயளவு நம்பகத்தன்மையுடன் அவரால் எழுத முடிகிறது. விவேக்கின் கதைகளில் பகடியோ வேடிக்கையோ இல்லை. ஆனால் கதாபாத்திரங்களை, உரையாடல்களை அமைப்பதில் எப்போதும் மெல்லிய நகைச்சுவை இருந்துகொண்டிருக்கிறது. படிகங்களில் எஞ்சியிருக்கும் வானின் ஒளி போன்ற கண்கள் தொட்டு துலக்கி அறியவேண்டிய ஓர் அழகு அது.
வடிவத்தேர்ச்சியும், அழகியலமைதியும், கூர்மையும் கனிவும் கொண்ட வாழ்க்கைநோக்கும் கொண்ட இக்கதைகளை தமிழில் கொண்டுவந்தமை குறித்த பெருமிதம் எனக்கு உண்டு.
– ஜெ
Reviews
There are no reviews yet.