அஜிதன்
Showing all 3 results
-
அஜிதன்
மைத்ரி – நாவல்
உத்தராகண்டின் இமயமலைச் சரிவில் ஒரு வசந்தகாலத்தின் துவக்கத்தில் நிகழும் ஒரு காதல் கதை இது. மூன்று நாட்களே நீடிக்கும் அந்த சிறிய உறவில் காதலும் இயற்கையும் எப்படி ஒன்றை ஒன்று தழுவி நிரப்பிக்கொள்கின்றன என்னும் சித்திரத்தை தேர்ந்த நடையில் ஆசிரியர் இதில் அளிக்கிறார். புலன் வழி அனுபவங்களால் மட்டுமே சென்றடையும் அகவிடுதலையை இந்நாவல் மேலதிகமாக தொட்டுக்காட்டுகிறது. தமிழில் கதைக்களம் மற்றும் பேசுபொருள் சார்ந்து இந்நாவல் ஒரு முக்கியமான புதிய முயற்சி.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300 -
அஜிதன்
அல் கிஸா – அஜிதன்
அஜ்மீரின் புனித தர்காவில் அறுபதுகளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறு நாவல் இது. செவ்வியல் கூறுகள் ஊடுருவும் ஒரு நவீன ஆக்கமான இதில் சூஃபி ஆன்மீகமும் ஷியாக்களின் வரலாற்றுப் போராட்டமும் நபிகளின் போர்வையின் கீழ் ஒரு மகத்தான காதலால் இணைகின்றன.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹150 -
அஜிதன்
மருபூமி – அஜிதன்
மரணம் என்ற ஒற்றை புள்ளியில் தொட்டுக்கொள்ளும் எட்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது. மரணத்தை குறித்து பேச எத்தனித்த எல்லா பெரும் கலைஞர்களும் சென்றடைந்தது மீண்டும் வாழ்வுக்கும் உயிர்த்தெழலுக்குமே. இந்த தொகுப்பின் கதைகளிலும் அந்த வளர்ச்சி இயல்பாக நிகழ்ந்துள்ளது. ‘மருபூமி’ என்ற பஷீரை குறித்தான குறுநாவலில் அது முழுமை பெறுகிறது. தமிழில் வெளிவந்த மிக முக்கியமான முதல் தொகுப்புகளில் ஒன்றாக இது அறியப்படும்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹330