அரவிந்த் சுவாமிநாதன்
விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் – 2
தமிழின் நவீனச் சிறுகதை என்று ஆய்வாளர்களால் மதிப்பிடப்படும் ‘குளத்தங்கரை அரசமரம்’, 1915-இல், ‘விவேகபோதினி’யின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் இதழ்களில் வெளியானது. ஆனால், அதற்கு முன்பே திருமணம் செல்வகேசவராய முதலியார், பாரதியார் போன்றோரது சிறுகதைகள் வெளியாகிவிட்டன. ஆனால், இவற்றிற்கெல்லாம் முன்பே, 1892 முதல் வெளியான ‘விவேக சிந்தமாணி’ மாத இதழில், பல சிறுகதைகள் மாதந்தோறும் வெளியாகியிருக்கின்றன.. நீதிபோதனைகளாகவும், சம்பவ விவரிப்புகளாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் இருந்த அவற்றை, சிறுகதைகளுக்கான ஆரம்ப முயற்சிகள் என்று மதிப்பிடலாம். கடந்த நூற்றாண்டுகளில் துவங்கிய இச்சிறுகதை மரபு […]
யாவரும்
₹550