விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
Showing all 8 results
-
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
தனிவழிப் பயணி
பிறழ்வெழுத்து என்னும் எழுத்துமுறையின் இந்திய அளவிலான முதல் உதாரணம் சாரு நிவேதிதா. எழுத்து, எழுத்தாளன் என்னும் உருவகங்களை உடைத்து விளையாட்டென நிகழும் எழுத்து அவருடையது. எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாத எழுத்து. பின்நவீனத்துவ காலகட்டத்தின் இலக்கியவாதி அவர். புனைவு, உண்மை என்னும் இரண்டு எல்லைகளைக்கூட அழித்துச்செல்வது
அவருடைய எழுத்துலகம். அத்தகைய எழுத்து என்பது கோட்பாட்டு அலசல்களுக்கு, கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளுக்கு முற்றிலும் எதிரானது அவர்களால் எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாதது. அவர்கள் தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் அதன்மேல் சுமத்த, அதையெல்லாம் உதறி நிர்வாணமாக முன்சென்றுகொண்டிருப்பது. அவர்களை தன் எளிமையாலெயே தோற்கடிப்பது. ஆனால் வாசிக்கும்போது தன்னையும் சாரு நிவேதிதா போல நிர்வாணமாக ஆக்கிக்கொள்ளும் வாசகன் அதை எளிதில் தொட்டு அறியமுடியும். ஏனென்றால் சாருவின் எழுத்துக்கள் அவர்களை நோக்கியே எழுதப்பட்டுள்ளன. அத்தகைய வாசிப்புகள் அடங்கிய தொகுதி இது. சாரு நிவேதிதா 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை பெறுவதை ஒட்டி இந்நூல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பால் வெளியிடப்படுகிறது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹200 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
சுரேஷ்குமார் இந்திரஜித் – வளரும் வாசிப்பு
சுரேஷ்குமார் இந்திரஜித்தின் உலகம் பெரிதும் நகர் சார்ந்தது. மனிதமுகங்கள் இருக்கும், கதாபாத்திரங்களாக அவை வரையரை செய்யப்பட்டிருக்காது. இடங்கள் இருக்கும், அவை மேலதிகக் குறியீட்டு அர்த்தங்களைச் சுமந்துகொண்டிருக்காது. உளவியல் அவதானிப்புகள் இருக்கும், உளமோதல்களின் நாடத்தனம் இருக்காது.
நிகழ்வுகள் இருக்கும் கதை இருக்காது ஆனால் இந்த சித்தரிப்புகள் வழியாக எப்போதும் வாழ்க்கையின் ஒரு துண்டை அவர் வெட்டி எடுத்துவைக்கிறார். ஆகவே அவை கலைப்படைப்புகளாக ஆகின்றன.
2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது சுரேஷ்குமாருக்கு வழங்கப்படுவதை ஒட்டி இந்நூல் வெளியிடப்படுகிறது.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹100 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
சீ. முத்துசாமி – மலேசிய நவீனத் தமிழிலக்கிய முன்னோடி
நவீன மலேசியத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் சீ. முத்துசாமி. அழகியலுடன் வாழ்க்கைப் போராட்டத்தை எழுதியவர். நவீனத் தமிழிலக்கியத்தின் செழுமைமிக்க மரபை தானும் கொண்டவர், மலேசியத்தமிழிலக்கியம் இன்று வீறுகொண்டு எழுந்திருக்கும் சூழலில் சீ. முத்துசாமி பெரிதும் கவனிக்கப்படுகிறார். இந்தியாவிலிருந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு தோட்டக்கூலிகளாகச் சென்று புதிய சூழலில் கண்ணீரும் குருதியும் சிந்திப் போராடி இன்று மெல்ல தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இன்னும் போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களின் நெடிய வரலாற்றின் கலைரீதியான பதிவுகள் அவருடைய ஆக்கங்கள்.
2017ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கியவிருது சீ. முதுசாமிக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி வெளியிடப்படும் விமர்சனத்தொகுப்பு இந்நூல். விஷ்ணுபுரம் விருது தமிழிலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பை ஆற்றிய முன்னோடிப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருது. இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹80 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
வேடிக்கை பார்ப்பவன் – யுவன் சந்திரசேகருடன் ஓர் உரையாடல்
”ஒழுங்குங்கிறது ஒண்ணு. ஒழுங்கு சிதைவுங்கிறது இன்னோண்ணுன்னு நினைக்கிறோம். ஒழுங்குசிதைவுல ஒரு ஒழுங்கு இருக்கு. குப்பைத் தொட்டிங்கறது அழகானது இல்லன்னு சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கு? குப்பைத் தொட்டிகளுக்கே உள்ள ஒரு அழகு இருக்கு. சிதறலோட, கழிவோட அழகு ஒண்ணு இருக்கு. இத நீங்க பாத்துட்டீங்கன்னா, உங்களுக்குப் பிடிச்சது – பிடிக்காதது இருக்கும். ஆனா சமூகத்துக்கு உகந்தது உகந்தது இல்லைன்னு தீர்ப்புச் சொல்கிற ஒரு இடத்துக்கு நீங்க போக மாட்டீங்க. தீர்ப்பு சொல்லாமல் இருக்கிற இடத்தில் இருக்கிறது […]
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹200 -
சியமந்தகம் குழுவினர், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
ஜெயமோகன் 60 – சியமந்தகம்
ஜெயமோகன் எனும் ஆளுமை, ஜெயமோகனின் படைப்புலகம் என மொத்த கட்டுரைகளையும் இரண்டு மையங்களில் தொகுக்கலாம். இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் இரண்டும் ஒன்றையொன்று நிரப்பும், தொடும் இடங்களையே இக்கட்டுரைகள் பொதுவாகப் பேசுகின்றன எனச் சொல்லலாம். ஜெயமோகனைத் தாண்டி இக்கட்டுரைகள் சிலவற்றில் நாம் ஒரு காலகட்டத்தின் இலக்கிய உலகைக் காணமுடியும். குற்றாலம் கவிதை முகாம், தருமபுரி சந்திப்பு, ஊட்டி சந்திப்புகள் என முனைப்புடன் திகழ்ந்த காலகட்டத்தை அறியமுடியும். தமிழ் மட்டுமின்றி மலையாள எழுத்தாளர்களான கல்பற்றா நாராயணன், பி. ராமன், தத்தன் புனலூர் மற்றும் கன்னட எழுத்தாளரான ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் ஆகியோரது கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இத்தனை எழுதிய, இத்தனை பயணித்த, இத்தனை செயல்பட்ட இன்னொரு தமிழ் எழுத்தாளர் இருந்ததில்லை. இத்தனை விரும்பப்பட்ட, வசைபாடப்பட்ட வேறு தமிழ் எழுத்தாளரும் உண்டா எனத் தெரியவில்லை. உலக அளவிலேயேகூட வெகுசிலர்தான் இருக்கக்கூடும். இத்தகைய பல பட்டைகள் கொண்ட அருமணியின் சில பட்டைகளை மட்டுமாவது ‘சியமந்தகம்’ தொகுதி காட்டிச்செல்கிறது என்றே நம்புகிறோம்.
அழிசி
₹900 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
அந்தர கவி
ஜனவரி 22, 2022 அன்று கவிஞர் அபியின் எண்பது அகவை நிறைவை ஒட்டி மலராக வெளிவரும் ‘எண்பது ஆண்டு சிறப்பு மலர்’ தொகுப்பு இந்நூல். இந்நூல் ஒரு வகையில் விமர்சன நூலும் கூட. அபியின் எண்பதாவது வயதில் அவரது மாணவர்கள், இலக்கிய வாசகர்கள், அவருக்கு பின்பான மூன்று தலைமுறை எழுத்தாளர்களின் கட்டுரைகள் அடங்கியது இந்நூல். கட்டுரையாளர்கள் இந்நூலின் வழி அபியின் கவிதையையும், ஆளுமையையும் அணுகியறிகின்றனர். அபி என்னும் பெருங்கவிஞன் எப்படி முதன்மையான பேராசிரியராக விளங்கினார் என்னும் சித்திரம் இந்நூலின் வழி வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் அபியை பற்றிய மதிப்பீடுகளையையும், ரசனைகளையும் எழுதியுள்ளனர். பலதரப்பட்ட தரப்பிலிருந்து அபியை அணுகி அறிந்து எழுதப்பட்ட நூல் இது. அபியின் கவி உலகைப் பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்குகிறது இந்நூல்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹180 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
ராஜ் கௌதமன் – பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்
பேராசிரியர் ரணஜித் குகாவின் விளிம்புநிலை சமூகஆய்வு, ஃபூக்கோவின் பின்நவீனத்துவ சமூகவியலாய்வு ஆகிய முன்னோடி வழிமுறைகளைக்கொண்டு இங்கு தலித் பண்பாட்டு வரலாற்றாய்வு முறைமை ஒன்றை உருவாக்கிய முன்னோடி. தமிழ்வரலாற்றின் தொடக்கம் முதலே சாதிய ஆதிக்கம் உருவாகி நிலைகொண்ட சித்திரத்தை ஆதாரங்களுடன் விரித்துகாட்டும் அவருடைய ஆய்வுகள் நம்மை நாமே மேலும் துல்லியமாக அறிந்துகொள்ள உதவக்கூடியவை. அவ்வகையில் தமிழ்ப்பண்பாட்டுக் களத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தவை.
தலித் இலக்கியத்தின் முதன்மையான அழகியல்வடிவம், தன்வரலாறு. ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை ஆகியவை தமிழின் முதன்மையான தன்வரலாற்றுப் புனைவிலக்கியங்கள். பண்பாட்டாய்வாளர், புனைவெழுத்தாளர் என்னும் ஒரு தளங்களிலும் பெரும்பங்களிப்பாற்றியவர் ராஜ்கௌதமன்.
அவருக்கு 2018ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி இந்நூல் வெளியிடப்படுகிறது.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹150 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
நாடோடியின் கால்த்தடம்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹200