2017
Showing all 3 results
-
ஜெயமோகன்
சொல்லிமுடியாதவை
ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகள் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? செய்தொழிலைப் பழிக்கலாகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா? பண்பாட்டைச் சுமக்கத்தான் வேண்டுமா? ஜெயமோகன் தன் நண்பர்கள் வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த பண்பாட்டுக் கட்டுரைகள் இவை நேரடியான கூரிய கருத்துகள் வரலாற்றுப்பின்புலம் தேடிச்சென்று விவாதிப்பவை.
நற்றிணை பதிப்பகம்
₹180 -
ஜெயமோகன்
உச்சவழு
எழுத்தாளர் ஜெயமோகன் சென்ற இரண்டாண்டுகளில் எழுதிய புதிய சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம். ‘இக்கதைகள் மானுடவாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களிலிருந்து ஒட்டுமொத்தமான கேள்விகளை நோக்கிச் செல்கின்றன’.
நற்றிணை பதிப்பகம்
₹200 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
சீ. முத்துசாமி – மலேசிய நவீனத் தமிழிலக்கிய முன்னோடி
நவீன மலேசியத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் சீ. முத்துசாமி. அழகியலுடன் வாழ்க்கைப் போராட்டத்தை எழுதியவர். நவீனத் தமிழிலக்கியத்தின் செழுமைமிக்க மரபை தானும் கொண்டவர், மலேசியத்தமிழிலக்கியம் இன்று வீறுகொண்டு எழுந்திருக்கும் சூழலில் சீ. முத்துசாமி பெரிதும் கவனிக்கப்படுகிறார். இந்தியாவிலிருந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு தோட்டக்கூலிகளாகச் சென்று புதிய சூழலில் கண்ணீரும் குருதியும் சிந்திப் போராடி இன்று மெல்ல தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இன்னும் போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களின் நெடிய வரலாற்றின் கலைரீதியான பதிவுகள் அவருடைய ஆக்கங்கள்.
2017ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கியவிருது சீ. முதுசாமிக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி வெளியிடப்படும் விமர்சனத்தொகுப்பு இந்நூல். விஷ்ணுபுரம் விருது தமிழிலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பை ஆற்றிய முன்னோடிப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருது. இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹80