2018
Showing all 5 results
-
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
ராஜ் கௌதமன் – பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்
பேராசிரியர் ரணஜித் குகாவின் விளிம்புநிலை சமூகஆய்வு, ஃபூக்கோவின் பின்நவீனத்துவ சமூகவியலாய்வு ஆகிய முன்னோடி வழிமுறைகளைக்கொண்டு இங்கு தலித் பண்பாட்டு வரலாற்றாய்வு முறைமை ஒன்றை உருவாக்கிய முன்னோடி. தமிழ்வரலாற்றின் தொடக்கம் முதலே சாதிய ஆதிக்கம் உருவாகி நிலைகொண்ட சித்திரத்தை ஆதாரங்களுடன் விரித்துகாட்டும் அவருடைய ஆய்வுகள் நம்மை நாமே மேலும் துல்லியமாக அறிந்துகொள்ள உதவக்கூடியவை. அவ்வகையில் தமிழ்ப்பண்பாட்டுக் களத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தவை.
தலித் இலக்கியத்தின் முதன்மையான அழகியல்வடிவம், தன்வரலாறு. ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை ஆகியவை தமிழின் முதன்மையான தன்வரலாற்றுப் புனைவிலக்கியங்கள். பண்பாட்டாய்வாளர், புனைவெழுத்தாளர் என்னும் ஒரு தளங்களிலும் பெரும்பங்களிப்பாற்றியவர் ராஜ்கௌதமன்.
அவருக்கு 2018ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி இந்நூல் வெளியிடப்படுகிறது.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹150 -
நாஞ்சில் நாடன்
கறங்கு
சமகால நடப்புகளின் மீது சாமானியர்களுக்கு உள்ள விமர்சனங்களையும் கோபத்தையும் கையாலாகாத்தனத்தின் தம் மீதான கழிவிரக்கத்தையும், எள்ளலும் சீற்றமும் கொப்பளிக்கும் தனித்துவமான மொழியில் சொல்கின்றன நாஞ்சில்நாடனின் இக்கதைகள்.
தமிழினி
₹120 -
சு. வேணுகோபால்
நுண்வெளி கிரகணங்கள்
உண்மையும், உணர்ச்சிகளின் வேதனையும். உள்ளத்தில் அருளும், வாழ்வில் விதியும், மனித அறிவின் எல்லைகளும் ஒன்றுற முயங்கும் கணத்தில் கூடு பொறித்த உயிரான எழுத்துகளாய் அவை நம்மை நோக்கி விழிக்கின்றன. அந்த யதார்த்தத்தின் பசுமை நம் நினைவிலும் படர்கிறது. அன்றாட வாழ்க்கையின் தன்மையைப் புதுப்பித்தது போன்ற ஒரு நிம்மதி படிப்பின் பிற்றை நிலையாய் நாம் உணரக் கிடைக்கிறது. -வி. மோகனரங்கன்
தமிழினி
₹400 -
எம்.கோபாலகிருஷ்ணன்
சக்தியோகம்
மனித உறவுகள் எனும் ஒளிக்கற்றையை உள்வாங்கி அதனுள் உருவாகும் எண்ணற்ற நிறங்களை விரித்துக் காட்டும் முப்பட்டகங்களே இக் கதைகள்.
தமிழினி
₹170 -
எம்.கோபாலகிருஷ்ணன்
வால்வெள்ளி
தமிழினி
₹170