2019
Showing all 10 results
-
ஜெயமோகன்
உரையாடும் காந்தி – தன்னறம்
முகமது நபியை பற்றியான ஒரு கேலிச்சித்திரத்தை டென்மார்க் பத்திரிகை வெளியிட்ட உடனேயே, உலகம் முழுவதிலுமிருக்கும் இஸ்லாமிய தரப்புகளிடமிருந்து வலுவான எதிர்வினைகள் கிளம்பியது. அதேபோல், காந்தியைப்பற்றி ஓர் அமெரிக்க நூலாசிரியர் எழுதிய கீழ்த்தரமான அவதூறுநூல் பற்றி இணையப்பேச்சில் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் இஸ்லாமிய நண்பர் சொன்னார், “இப்போது புரிகிறதா, முகமது நபியைப் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு ஏன் அப்படி எதிர்வினையாற்றினோம் என்று? இந்த அமெரிக்க அற்பர்களுக்கு நாங்கள் சொல்லும் மொழி மட்டும்தான் புரியும். ஜனநாயகம், கருத்துரிமை என்ற பேரில் அவர்கள் செய்வதெல்லாம் […]
தன்னறம்
₹300 -
விலாஸ் சாரங்
தம்மம் தந்தவன்
புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்த நாவல் மிக அற்புதமாக விவரிக்கிறது. புத்தர் தனது இளமைக்காலத்தில் வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டது, அரண்மனைக்குள் சிறை வைக்கப்பட்டவராக இருந்தது, அதையும் மீறி வெளியுலகைக் கண்டு தனது புரிதலுக்கேற்றபடி உலகை […]
நற்றிணை பதிப்பகம்
₹260 -
சு. வேணுகோபால்
நிலம் எனும் நல்லாள்
ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே – ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு
தமிழினி
₹180 -
ஜேனிஸ் பரியத்
நிலத்தில் படகுகள்
மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பரியத் அவர்களுக்கு யுவபுரஸ்கார் பெற்றுத்தந்த ஆங்கிலச் சிறுகதை தொகுப்பான Boats on Land புத்தகம் நம்மால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிலத்தில் படகுகள் எனும் சிறுகதைத் தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது முற்றிலும் புதிய நிலப்பகுதியை அறிமுகம் செய்தன இந்தக்கதைகள். பலர் மொழிபெயர்ப்பு செய்த இந்த மொத்தக்கதைகளையும், தமிழில் வாசிக்கும்போது ஒரே சீராக வரும்வகையில் மெய்ப்பு நோக்கி கொடுத்ததில் சுசீலாம்மாவின் பங்கு மிக முக்கியமானது.
நற்றிணை பதிப்பகம்
₹350 -
எம்.கோபாலகிருஷ்ணன்
மொழி பூக்கும் நிலம்
தமிழினி
₹110 -
சு. வேணுகோபால்
தமிழ் சிறுகதைகளின் பெருவெளி
தமிழின் மகத்தான சிறந்த 13 படைப்பாளிகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரை நூல். வாசிப்பவர்கள் யாவருக்கும் இப்புத்தகம் தமிழ்ச் சிறுகதை உலகத்தைப் பற்றிய புதிய வெளிச்சத்தைத் தரும்.
தியாகு நூலகம்
₹400 -
நாஞ்சில் நாடன்
கருத்த வாவு
‘கருத்த வாவு’ நாஞ்சில் நாடனின் பதினாறாவது கட்டுரைத் தொகுப்பு அனைத்துக் கட்டுரைகளும் நடப்பாண்டின் பல்வேறு பருவ இதழ்களில் வெளியானவை. தமிழில் சொற்கள் குறித்த தேடலும் தெளிவும் கொண்டவை. அவர் அறியத்தரும் தமிழின் நேற்றைய சொல்வளம் பெருவியப்பைத் தருகிறது. மொழி இன்றளவும் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சொற்பண்டாரத்தின் சில மணிகள் அவை.தமிழினி
₹230 -
விலாஸ் சாரங்
கூண்டுக்குள் பெண்கள்
நற்றிணை பதிப்பகம்
₹350 -
சத்ஸயி பிஹாரி
நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் நிலா
தமிழினி
₹100 -
எம்.கோபாலகிருஷ்ணன்
ஓரு கூடைத் தாழம்பூ
படித்த பல நாவல்களைக் குறித்த விமர்சனங்கள்,
கவிதைகளை ரசித்துணர்ந்த அனுபவங்கள்,
சில நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள்
எனப் பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது.
ஒரு வாசகனாக எழுத்தை அணுகும் அனுபவத்தின் சாரத்தை
இக்கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.
தமிழினி
₹140