2022
Showing 25–36 of 53 results
-
ஜெயமோகன்
கண்ணீரைப் பின்தொடர்தல்
இந்நூல் இந்தியாவின் வெவ்வேறு மொழிகளிலிருந்து இருபது நாவலாசிரியர்களின் படைப்புகளை முன்வைக்கிறது. அவற்றைப்பற்றிய ரசனைக்கட்டுரை என்று இவற்றை சொல்லலாம். அவை ஏன் மகத்தான நாவல்களாக இருக்கின்றன என்பதையே இக்கட்டுரைகள் ஆராய்கின்றன. எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்குப்பிறகு இக்கட்டுரைகள் அண்மையில் கனலி இணையதளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. மீண்டும் அடுத்தடுத்த தலைமுறையால் இவை படிக்கப்படுகின்றன என்பதே இக்கட்டுரைகளின் தேவைக்கும் தரத்திற்கும் சுவாரசியத்திற்கும் சான்று என்று நினைக்கிறேன். இவை படைப்பாளி, படைப்பு, அது உருவான களம் ஆகிய மூன்றையும் ஒரே பார்வையில் பார்க்கும் தன்மை […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320 -
ஜெயமோகன்
அனல் காற்று – நாவல்
பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக நான் எழுதிய கதை இது. ஒரு குறுநாவல். இதை அவர் திரைக்கதை அமைப்பதாக இருந்தது. அந்த தயாரிப்பாளர் பங்குச்சந்தை வீழ்ச்சியில் காணாமல் போனதனால் திட்டம் கைவிடப்பட்டது. அவர் வேறு கதைக்குச் சென்றுவிட்டார். முற்றிலும் சொற்சித்திரமாக உள்ள இந்த உணர்ச்சிகரமான கதைக்கு அவர் எப்படி காட்சி வடிவம் அளித்து திரைக்கதை அமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அது நிகழவே இல்லை என்பதில் வருத்தம் என்றாலும் எது நிகழ்கிறதோ அதுவே அது என்று […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹260 -
ஜெயமோகன்
வணிக இலக்கியம்
இலக்கியம் வணிகஎழுத்து இரண்டுக்குமான வேறுபாட்டை அறிந்துகொள்வது இலக்கிய வாசிப்புக்கு இன்றியமையாதது. அத்தகைய வேறுபாட்டை வகுத்துக் கொள்ளாத ஒருவர் இலக்கியப்படைப்பை அறியவே இயலாது. அவர் வணிக எழுத்துக்கான பொதுவான வாசிப்பை இலக்கியத்தின்மேல் போடுவார். அது விழிகளை மூடிவிட்டு ஓவியத்தை தடவிப்பார்த்து அறிய முயல்வது போல. இந்நூல் இலக்கியம் என்றால் என்ன என்று வரையறுக்கிறது. வணிக எழுத்தை திட்டவட்டமாக அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இலக்கியவாசகர்கள் எவருக்கும் இன்றியமையாத புரிதலை அளிக்கிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹130 -
யுவன் சந்திரசேகர்
பெயரற்ற யாத்ரீகன்
ஜென் கவிதைகள், இறகின் மிருதுவும் எடையற்ற தன்மையும் கொண்டவை. நிகழும் போது பிடிக்க முடிந்தால் மட்டுமே பொருள் கொள்பவை. ஆகக் குறைந்த சொற்களில் இதை நிகழ்த்திக் காட்ட இயல்கிறது என்பது, ஜென் மார்க்கம் செய்யும் மாயம் என்றே சொல்வேன். மொழியின் தாழ்வாரம் எத்தனை அகலமானது; ஆனாலும் சூட்சுமமானது என்பதையும் ஜென் கவிதைகள் அறியத் தருகின்றன. இவற்றைப் பற்றுவதற்கு, உணர்வின் ஒரு துளி மட்டுமே போதுமானது. தீவிரமான அல்லது தொடர்ந்த சிந்தனை இக்கவிதைகளை இன்னும் தொலைவுக்கு நகர்த்திவிட வாய்ப்புண்டு. சொல்லப்போனால், எந்த மொழியிலும், எந்தக் காலகட்டத்திலும் கவிதையின் ஆதார குணம் என்று இதைச் சொல்லலாம்.
– முன்னுரையிலிருந்து
நூல் வனம்
₹330 -
ஜெயமோகன்
திசைகளின் நடுவே
திசைகளின் நடுவே என்னும் இந்நூலின் பெயருக்கேற்ப இத்தொகுப்பு எழுதுகையில் நான் என் எதிர்காலத் திசைகளின் நடுவேயுள்ள புள்ளியில்தான் நின்றிருந்தேன். பலவகையான கதைக்கருக்கள், விதவிதமான கூறல்முறைகள் நிரம்பிய தொகுப்பு இது. இக்கதைகளை இன்று பார்க்கையில் இவற்றின் சிறப்பம்சம் இவற்றின் அகலமே என்று படுகிறது. பல கதைகளில் விரிவான சூழலும், அதிகமான கால அளவும் காணப்படுகிறது. இப்போது என் வாசிப்பு விரிவடைகையில் அமெரிக்கச் சிறுகதைகளில் இவ்வியல்பு அதிகமிருப்பதைக் காண்கிறேன். சிறுகதையின் முக்கியமான வகை மாதிரி இது என்று இதைக் கூறத் […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300 -
ஜெயமோகன்
முதலாவிண் – செம்பதிப்பு
முதலாவிண் என்றுமுள்ள விண் என்று பொருள்படுகிறது. இது பாண்டவர்களின் விண்புகுதலுடன் நிறைவுறும் நாவல். வெண்முரசு நாவல்நிரையின் இறுதிப்படைப்பு. இதுவரை பேசப்பட்டவை அனைத்தும் இந்நாவலில் கவிதையாலும் மெய்யறிவாலும் தொகுக்கப்படுகின்றன.ஒரு பேரிசை ஓய்ந்த பின் உருவாகும் அமைதியின் அடர்த்தி கொண்ட படைப்பு இது. ‘ சொற்களின் அழிவின்மையை அதன் ஆசிரியன் கண்டுகொண்ட கணம் இந்நாவலில் உள்ளது’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹400 -
ஜெயமோகன்
கல்பொருசிறுநுரை – செம்பதிப்பு
கிருஷ்ணனின் மறைவுவரை செல்லும் இந்நாவல், கல்பொருசிறுநுரை. இந்த இருபத்திரண்டாயிரம் பக்கங்களில் திரட்டி எடுக்கப்பட்ட பேராளுமை. அவன் சொல்லே, இந்நாவலின் சுடர். ஆனால் அவனுடைய குலச்சரிவை, குடியழிவை, நகர்மறைவை, அவன் அகல்வை புராணங்கள் சொல்லத்தான் செய்கின்றன. அது ஊழ் என்பதனால், பிரம்மவடிவானவனும் அதற்கு கட்டுப்பட்டவனே என்பதனால். மகாபாரதம் சொல்லும் நெறிகளில் முதன்மையானது என்னவென்றால் இங்குள்ள ஒவ்வொன்றும் ஒரு துலாத்தட்டில் உள்ளன என்பதே. ஒன்று பிறிதொன்றை நிலைநிறுத்துகிறது, ஒன்றின் நிலையழிவு பிறிதொன்றை நிலையழியச் செய்கிறது.
மகாபாரதப் பெரும்போரில் மாபெரும் குடியழிவை உருவாக்கியவன் அதற்கான விலையை தான் கொடுப்பதன் சித்திரம் இது. கொடுக்கவேண்டுமென அவன் அறிந்திருந்தான், அவனே அதை தரிசனம் என முன்வைத்தவன். ஆகவே அவன் அதை அளித்தான். அவன் கண்முன் மறைந்தன எல்லாம். அவன் துயருற்றிருப்பானா? துயர் அவனுக்கு உண்டா? இருந்திருக்கலாம், பெருந்தந்தையர் துயர்கொண்டவர்கள். ஆனால் அவன் அதற்கும் அப்பால். துளிகளை, அலையை கடலை மட்டுமல்ல புவியை ஒரு துளியெனக் காணும் தொலைவு திகழும் பார்வை கொண்டவன். அவனுக்கு கல்பொருசிறுநுரைக் குமிழிதான் அவனேகூட.விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹1300 -
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
தனிவழிப் பயணி
பிறழ்வெழுத்து என்னும் எழுத்துமுறையின் இந்திய அளவிலான முதல் உதாரணம் சாரு நிவேதிதா. எழுத்து, எழுத்தாளன் என்னும் உருவகங்களை உடைத்து விளையாட்டென நிகழும் எழுத்து அவருடையது. எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாத எழுத்து. பின்நவீனத்துவ காலகட்டத்தின் இலக்கியவாதி அவர். புனைவு, உண்மை என்னும் இரண்டு எல்லைகளைக்கூட அழித்துச்செல்வது
அவருடைய எழுத்துலகம். அத்தகைய எழுத்து என்பது கோட்பாட்டு அலசல்களுக்கு, கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளுக்கு முற்றிலும் எதிரானது அவர்களால் எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாதது. அவர்கள் தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் அதன்மேல் சுமத்த, அதையெல்லாம் உதறி நிர்வாணமாக முன்சென்றுகொண்டிருப்பது. அவர்களை தன் எளிமையாலெயே தோற்கடிப்பது. ஆனால் வாசிக்கும்போது தன்னையும் சாரு நிவேதிதா போல நிர்வாணமாக ஆக்கிக்கொள்ளும் வாசகன் அதை எளிதில் தொட்டு அறியமுடியும். ஏனென்றால் சாருவின் எழுத்துக்கள் அவர்களை நோக்கியே எழுதப்பட்டுள்ளன. அத்தகைய வாசிப்புகள் அடங்கிய தொகுதி இது. சாரு நிவேதிதா 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை பெறுவதை ஒட்டி இந்நூல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பால் வெளியிடப்படுகிறது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
₹200 -
அனிதா அக்னிஹோத்ரி
உயிர்த்தெழல்
’சிங்கத்தின் மீதமர்ந்த, உலகைக் காக்கும் இறைவி ஜத்தாத்ரியின் நான்கு பெரும் சிலைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வைக்கோல் எரிவது மெல்லிய களிமண் பூச்சு வழியாகத் தெரிந்தது. சிங்கங்கள் சில்லிட்ட களிமண்ணால்தான் மூடப்பட்டிருந்தன. தேவியர் பற்றி எரிந்தபடி ஊர்வலமாக செல்வதுபோலிருந்த அந்தக் காட்சி அமானுஷ்யமானதாக, தீமைக்கு முன்னறிவிப்பு போல இருந்தது…’ சாதிவெறிப் பின்னணியில் கலைஞனின் இருப்பை, புரட்சிப் பின்னணியில் காதலை, உறவுகளிடையே மோதல்களை, இழப்புகளை சொல்லிச் செல்லும் நாவல். கலையும், காதலும், தாய்மையும் உயிர்த்தெழும் தருணங்களை ஆரவாரமின்றி […]
தமிழ்வெளி
₹320 -
ஜெயமோகன்
சிலுவையின் பெயரால்
எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன். இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன. என் கிறிஸ்துவை சொற்கள் மூலம் மேலும் அறியும் முயற்சி. அவரை மறைக்கும் விஷயங்களை சொற்கள் மூலம் கிழித்தகற்றும் முயற்சியும் கூட.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹320 -
எம்.கோபாலகிருஷ்ணன்
ஆன்டன் செகாவ் கதைகள்
நவீனச் சிறுகதைக்கான பாதையை உருவாக்கித் தந்தவர் ஆண்டன் செகாவ். நூற்றாண்டுகள் கடந்தும் கதை வடிவம், மொழிநேர்த்தி, சித்தரிப்பு நுட்பம் என சிறுகதையின் ஒவ்வொரு இலக்கணத்திலும் செகாவின் அழுத்தமான முத்திரை இன்றும் மெருகிழக்காமல் இருப்பதே அவரது மேதமைக்குச் சான்று. தமிழில் இதுவரை வெளிவராத இக்கதைகள் செகாவின் புனைலகின் மேலும் சில ஆழங்களைத் துலக்கிக் காட்ட வல்லவை.
நூல் வனம்
₹230 -
செல்வேந்திரன்
பெரும் வெற்றுக்காலம்
காட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்ற வைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எத்தும் எள்ளல்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட்டல்; கோபம் என்றாலும் குறைவாய் கூறல்; பரந்ததைச் சிற்சில பதங்களில் காட்டல்; உள்ள இலக்கணத்தை உணர்வுக்காக மீறல்… இப்படி ஒரு நடை எப்படி இருக்கும்? இந்த நூலின் நடை அதை விளக்கும். தனிமை, வெறுமை, தைரியமின்மை, பொறுமை இல்லா போக்கிரித்தன்மை – எல்லாம் எதிர்மறை. செல்வேந்திரன் எழுத்தினால் அவை அத்தனையும் அறிமுறை. தனது கதை போல் செல்வேந்திரன் சொல்வது உங்கள் கதைதான். படியுங்கள், ஆமென்பீர். நகைச்சுவையாளன் போல் ஒரு தோற்றம். உள்ளே கிடப்பது அணையா நெருப்பு. ரசித்து ரசித்துப் படித்துவந்தாலும் முடித்து வைக்கையில் மூளைக்கு வேலை. பொழுதுபோக்குக்கு நான் உத்தரவாதம். இந்தப் புத்தகம் இரண்டாம் முறை படிக்கவும் பத்திரம் ஆகும்.
– ரமேஷ் வைத்யா
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹130