Karuppu Irutalla - kalpatta Narayanan / கருப்பு இருட்டல்ல



  • ₹180

  • SKU: VP2525
  • ISBN: 978-93-9526-075-6
  • Author: Kalpatta Narayanan / கல்பற்றா நாராயணன்
  • Language: Tamil
  • Pages: 136
  • Availability: In Stock

இயற்கையின் மொழியிலிருந்து மனிதன் தன் மேதமையால்  தனக்கான மொழியை உருவாக்கிக்கொண்டான். வீட்டை உருவாக்கியவன் இல்லறத்தானாக சுருங்கியது போல மொழியை உருவாக்கியவன் பேசக்கூடியவனாக மட்டும் ஆனான். அதன்பின் அவனது சாத்தியங்கள் மொழியின் சாத்தியங்களாக மட்டுமே ஆகியது. விளக்கமுடியாமைகளும், பெயரிடமுடியாதவைகளும் இருப்பற்றவைகளாக ஆகிவிட்டன. அவன் கண்டடைந்த உண்மையின் பிரதிநிதியாக மொழி ஆகவில்லை, மொழி உருவாக்கிய உண்மை அவனின் உண்மையாக மாறியது. மொழி சிருஷ்டித்த இடம் அசலான இடத்தைவிட விசாலமானதாக இல்லை. இன்று நாம் வாழும் எந்த நிலப்பரப்பும் மூச்சுத்திணரவைக்கும் மொழிப்பிராந்தியமும்கூட. மொழி உருவான பிறகு நாம் சொல்லாததை கேட்கமுடியாத, எழுதாததை வாசிக்கமுடியாத எல்லைக்குட்பட்ட உலகில் வாழ ஆரம்பித்துவிட்டோம். நாம் உள்ளுர உணர்வதை மொழி அனுமதிக்கும் குறுகிய எல்லைக்குள் மட்டுமே நம்மால் வெளிப்படுத்த முடிகிறது. மொழியின் எல்லையால் பத்தி தாழ்த்தப்பட்ட பாம்புபோல நிறைவின்மைகொண்ட சில மனங்கள் மொழியில் நிகழ்த்தும் எல்லைமீறலாக கவிதை என்ற வடிவை நாம் யோசித்து பார்க்கலாம்.

கல்பற்றா நாராயணன்.

Write a review

Captcha