Kadalin Adutha Pakkam / கடலின் அடுத்த பக்கம்
-
₹550
- SKU: VP26010
- ISBN: 978-93-95260-58-9
- Author: ஜேகே, JK
- Language: Tamil
- Pages: 408
- Availability: In Stock
எல்லையின்றி விரிந்திருக்கிறது பெருங்கடல். அதன் இக்கரையில் நின்றபடி, அக்கரையின் மாந்தர் வாழ்வை நாம் எங்கனம் அறிந்துகொள்வது?
அன்பும் வஞ்சமும், அதிகாரமும் அடிபணிதலும், புலமும் புலம்பெயர்வும் மனிதர்களின் விதிகளை எழுதுகின்றன. ஒருவரின் விருப்பு இன்னொருவரின் துயராகிறது. ஒருவரின் முடிவை மற்றொருவர் வாழ்ந்து தீர்க்கவேண்டியிருக்கிறது. எவரோ இயற்றிய வினைகளின் விசை, இவர்களைத் தமக்குத் தொடர்பேயில்லாத அந்நியக் கரைகளில் எறிந்துவிடுகிறது.
எல்லாக் கரைகளுக்கும் ஒரு மறுகரை உண்டு. அங்கிருந்து பார்க்கையில் இக்கரையும் அந்நியமே. நாம் பிறர்க்கு அந்நியமாவதும், பல சமயங்களில் நமக்கே அந்நியமாவதும் அவ்வகையினதே. அறிந்து உணர்தலே அவ் அந்நியத்தை உறவாக்கும் செயலாம்.
‘கடலின் அடுத்த பக்கம்’ அச்செயலை நோக்கி ஓரடி முன்னே வைக்கிறது.
- கலாதேவி


